|
|||||
சதுரங்க வேட்டை - திரை விமர்சனம் !! |
|||||
இயக்கம் : எச் . வினோத்
சரி வாங்க கதைக்குள் செல்லலாம்.. கதாநாயகன் நட்ராஜ் மாதம் பல லட்சங்களை சம்பாதிக்கும் செட்டியாரருக்கு மேலும் பணம் சம்பாதிக்க ஆசையைக்காட்டி அவரிடமிருந்து பல லட்ச்சங்களை கொல்லையடிக்கிறார். அதன் பிறகு நடராஜ் கொல்லை அடித்த பணத்தை வைத்து ஒரு நிறுவனம் தொடங்குகிறார். அதன் மூலம் மக்களிடம் பொய்யான பொருட்களை விற்று பணம் சம்பாதிக்கிறார்.
அப்போது அங்கு வேலை கேட்டு வரும் கதாநாயகி பானுவை வேலைக்கு சேர்க்கிறார் கதாநாயகன். இவரை வைத்து அந்த பொருட்களை எல்லாம் சாதுர்யமாக பேசி விற்கிறார். பின்பு அந்நிறுவனம் போலி என மக்களுக்கு தெரியவர நிறுவனத்தை சுற்றி வளைக்கிறார்கள். பணத்தோடு மறைமுகமாகிறது நட்ராஜ் கும்பல். பின்பு போலீசில் சிக்குகிறார் நட்ராஜ், அப்போது தான் தெரிகிறது அவன் மேல் இருக்கும் பல வழக்குகள் எண்ணிக்கையில் அடங்காதவை. சும்மா விடுவாங்களா போலீஸ் வெளுத்து வாங்குகிறது அவனை பணம் எங்கே என்று கேட்டு, ஆனால் துளி கூட வாயயை திறந்து பணம் இருக்கும் இடத்தை சொல்லாத நட்ராஜ்க்கு வாய்தா வாய்தா என சத்மே அடிக்கிறது.
அவன் சம்பாதித்த பணத்தை வைத்து ஜாமினில் எளிதாக வெளியில் வருகிறான். ஜாமினில் வந்தவனை கடத்துகிறது வளவனின் கும்பல், ஏன் இந்த கடத்தல் என்றால் இவனால் பாதிக்கப்பட்ட ஒருவன் வளவனை வைத்து நட்ராஜுடன் இழந்த பணத்தை பெறுவதற்காக, ’உன்னை ஏமாத்துரவன் ஒரு வகைல உனக்கு குரு ஏன்னா பிழைக்குற தந்திரத்தை சொல்லிதரான்னு நினைச்சுகோன்னு’ நட்ராஜ் சொல்லி வந்த வசனத்தை சொல்லி இவனுக்கு ஆப்பு வைக்கிறார்கள் கூட்டாளிகள், பணத்தை இழந்த வளவன் இவனை கொலை செய்ய முடிவு செய்யும் போது அவர்களின் ஆசையை தூண்டி ஒரு திட்டம் தீட்டுகிறான். அதை செயல்படுத்துவதாக சொல்லி அவர்களிடம் இருந்து தப்பித்து பானுவை கல்யாணம் செய்து கொண்டு கிராமத்தில் திருந்தி வாழ்கிறான். இவனால் ஏமாற்றப்பட்ட அந்த வளவன் இவனை தேடி கிராமத்திற்கு வர அவர்களிடன் இருந்து இவன் தப்பித்தானா..?? பானுவின் நிலைமை என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை. மொத்தத்தில் சதுரங்க வேட்டை மக்களுக்கு நல்ல பாடத்தை புகட்டியுள்ளது. சதுரங்க வேட்டை - திரை விமர்சனம் !!
இயக்கம் : எச் . வினோத்
தயாரிப்பு : மனோபாலா
நடிப்பு : நடராஜ், இஷா நாயர்
இசை : சீன் ரோல்டன்
ஒளிப்பதிவு : வெங்கடேஷ்
எழுத்து : எச் . வினோத்
இயக்குனர் மனோ பாலா முதன் முதலாக சொந்தமாக தயாரித்துள்ள படம் சதுரங்க வேட்டை.
|
|||||
by Swathi on 18 Jul 2014 0 Comments | |||||
Tags: Sathuranga Vettai சதுரங்க வேட்டை | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|