LOGO
  முதல் பக்கம்    அரசியல்     Print Friendly and PDF
- மது ஒழிப்பு

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மதுவிலக்கு செயல்திட்டம் -2016 – மதுவிலக்கு ஆண்டு

2016 – மதுவிலக்கு ஆண்டு
திட்டம்: தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சமூக நல ஆர்வலர்கள், இயக்கங்களுடன் ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் மூலம் பெண்கள், இளைஞர்கள், பொதுமக்களைத் திரட்டி 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் மதுவிலக்கை அமலுக்கு கொண்டு வருதல்.

777 நாட்கள்( மார்ச் 16, 2014 – ஏப்ரல் 30, 2016 ) கொண்ட நம் செயல்திட்டத்தை கீழ்கண்டவாறு மூன்று கால கட்டமாகப் பிரிக்கலாம் ( 1. தயாரிப்பு, 2. ஒருங்கிணைப்பு, 3. தீவிர செயல்பாடு )

கால கட்டம்

                  பணிகள்          


மார்ச் 2014 – மே 2014

( தயாரிப்புப் பணிகள் )

 


- கலந்தாலோசனை, விரிவான செயல்திட்ட ஆவண தயாரிப்பு

- விழி அமைப்போடு இணைந்து செயல்படுதல்

 

ஜீன் 2014 -  மே 2015

( ஒருங்கிணைப்பு )

 


- ஜீன்,2014: செயல்திட்ட வெளியீட்டுக் கூட்டம்

- மதுஒழிப்பிற்கு தமிழகம் தழுவிய பிரச்சாரம்,    செயல்பாடுகள் & ஆர்வலர்கள் ஒருங்கிணைப்பு

 

ஜீன் 2015 -  மே 2016


( தீவிர செயல்பாடு ) 

 


- பெண்கள், இளைஞர்களை முன்னிலைப்படுத்தி கிராம சபை தீர்மானங்கள், டாஸ்மாக் கடை மூடும் போராட்டங்கள், சாராய ஆலைகள் முற்றுகை, மாவட்ட-மாநில மாநாடுகள், பேரணிகள், மனித சங்கிலி, அரசுக்கு அழுத்தம் தரும் மாநிலந்தழுவிய நூதனப் போராட்டங்கள்

                     உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள:            

சட்ட பஞ்சாயத்து இயக்கம்   87545 – 80274    www.sattapanchayat.org  sattapanchayat@gmail.com 

ஜீன் 2014 – மே 2015 செயல்திட்டம்
  ஓராண்டு முடிவில்மாவட்டத்திற்கு 10 .. 1001000  

 

 • மதுஒழிப்பிற்கு மாவட்டத்திற்கு 10 ஒருங்கிணைப்பாளர்கள் ( வீரியமாகச் செயல்படுபவர்கள் )
 • மாவட்ட அளவிலான செயல்பாடுகளுக்கு குறைந்தது 100 பேர் கலந்து கொள்ளுதல்
 • மதுஒழிப்பிற்காக, மாவட்டத்திற்கு 1000 ஆதரவாளர்களைத் திரட்டுதல்

 

1. பிரச்சாரம்மக்கள் கருத்தாக்குதல் 

கள்ளச்சாராயம் பெருகும், அரசிற்கு வருவாய் குறைந்துவிடும் என்பது போன்ற சொத்தை வாதங்களை உடைத்தெறிந்து மதுவிலக்கை மக்கள் கருத்தாக மாற்றுதல்.

                                     செயல்பாடுகள்:

 

 • வலுவான வாதங்கள் கொண்ட வெளியீடுகள் ( கையேடுகள், குறும்படங்கள், கார்ட்டூன்கள் மற்றும் பல வடிவங்கள்) மூலம் நேரடியாக பிரச்சாரம் ( பொதுஇடங்களில், பள்ளி, கல்லூரிகளில்)
 • பத்திரிக்கைகள், தொலைக்காட்சி விவாதங்கள், இணையதளம் மூலம் பிரச்சாரம்
 • நூதனப் போராட்ட வடிவங்கள் மூலம் பிரச்சாரம்

 

2. களப்போராட்டங்கள் 

ஆங்காங்கே மதுக்கடை மூடப்படும்போது / இடமாற்றம் செய்யப்படும்போது மக்களுக்கு அரசை எதிர்த்துப் போராடி வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். அடுத்தடுத்த போராட்டங்களில் கலந்து கொள்வர். ஆதரவு தருவார்கள். மதுவால் கணவனை இழந்த பெண்கள், தினந்தோறும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்களை ஒருங்கிணைத்தல். 

செயல்பாடுகள்:

பள்ளி,கல்லூரிகள்,வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கியப் பொதுஇடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை கண்டறிந்து அதனை அகற்ற உள்ளூர் மக்களுடன் இணைந்து போராடுதல்; நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தல்

 

                   3. நீதிமன்றத்தின் மூலமாக

மதுவிலக்கு குறித்து அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பொதுநல வழக்குகள்; பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக வழக்குகள்.
               

                  சட்ட பஞ்சாயத்து இயக்கம் , 87545-80274 , www.sattapanchayat.org 

 
 
சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பங்களிப்பு என்ன ?

 1. தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு : ( Technical Coordination ) 

 

 • இணையதளம் - www.sattapanchayat.org
 • முகநூல்  ( 31375 + பேர் ) – சில பதிவுகள் 2 இலட்சம் பேர் வரை சென்றடைகிறது
 • மிஸ்டு கால் நம்பர் - 81441 - 66099 ( இதுவரை 750 + பதிவு )
 • ஈமெயில் ( பல ஆயிரம் பேர்களுக்கு அனுப்பலாம் )

  1. 2.        மதுக்கடை புகார்களுக்குதொலைபேசி சேவை மையம்: ( Call Center )

 • 7667-100-100  என்ற எங்கள் தொலைபேசி சேவை மையத்தை அழைத்து மதுக்கடை தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம். இப்புகார்கள் குறித்து அரசிடம் முறையிடுவது, அந்தந்த மாவட்ட ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்து தகுந்த களச் செயல்பாடுகளை முன்னெடுப்பது.

 

 1. 3.      களப்பணிகளில் : ( Support in Field Activities ) 
 • மாவட்டத்திலுள்ள இயக்க உறுப்பினர்கள் கலந்துகொள்ளக் கோரி தகவல் தெரிவிக்கப்படும் 1. 4.      புத்தக, வீடியோ வெளியீடுகள் : ( Booklet Publications & Short films )
 • மதுஒழிப்புப் பிரச்சாரத்திற்கு வலுசேர்க்கும் கையேடுகள், குறும்படங்கள் தயாரிப்பு 1. 5.     ஊடக ஒருங்கிணைப்புப் பணிகள் : ( Media Coordination ) 
 • அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் மதுஒழிப்புப் பணிகள் குறித்து முறைப்படி ஊடகங்களுக்குத் தகவல் தெரிவிக்கும் ஒருங்கிணைப்புப் பணிகள்


 

 1. 6.      மதுஒழிப்பு ஆர்வலர்கள் ஒருங்கிணைப்பு: ( Activists Coordination )
 • மாவட்ட, மாநில அளவில் செயல்படும் மதுஒழிப்பு ஆர்வலர்கள் கலந்துரையாடல், பயிற்சி போன்றவற்றிற்கான ஒருங்கிணைப்புப் பணிகள்

 

 

 

 

 

மதிப்பிற்குரிய சமூக ஆர்வலர்களுக்கு,                                       16 – 03 - 2014

வணக்கம். எங்களின் அழைப்பை ஏற்று, இன்று(மார்ச் 16,2014) நடைபெறும் மதுஒழிப்பு செயல்திட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்தமைக்கு நன்றி.

தனிமனித உடல்நலம், குடும்பப் பொருளாதாரம், குழந்தைகளின் எதிர்காலம், சமூக அமைதி என அத்தனையும் நாசமானாலும் பரவாயில்லை, மதுவிற்பனை மூலம் வரும் வருவாய்தான் முக்கியம் என்கிறது அரசு. மாற்று வழி யோசிக்க எங்களுக்கு நேரமுமில்லை, விருப்பமுமில்லை என்பதுதான் ஆண்ட, ஆள்கிற அரசுகளின் நிலைப்பாடு. இத்தகைய இக்கட்டான தருணத்தில்தான், நாம் இங்கு கூடியுள்ளோம். செயல்திட்டம் குறித்து சிந்திக்க, முடிவெடுக்க, களமிறங்க…

நம்மைப் போன்ற சமூக ஆர்வலர்கள் பலர் மதுவிற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், ஒத்த உணர்வுள்ள நம்மிடையே முறையான ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு இல்லாததால் நம் போராட்டங்கள், தமிழகம் தழுவியதொரு மாபெரும் மக்கள் கிளர்ச்சியாக மாற்றமடையவில்லை. அரசும், நம் உணர்வுமிக்க போராட்டங்களை தொடர்ந்து அலட்சியப்படுத்திவருகிறது. ஒருங்கிணைந்து போராடாவிட்டால் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் மதுவை ஒழிக்க முடியாது என்பதை நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறோம். இந்தப் பின்னணியில், இக்கூட்டம் மூன்று காரணங்களுக்காக நடத்தப்படுகிறது.

1. மதுஒழிப்பு ஆர்வலர்களுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த ; மதுஒழிப்பிற்காக தமிழகம் தழுவியதொரு பொது செயல்திட்டத்தை உருவாக்க

2 . சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மதுஒழிப்பு செயல்திட்டத்தை பகிர்ந்துகொள்ள

3. சமூக ஆர்வலர்கள், ஓய்வுபெற்ற நீதிபதி.சந்துரு அவர்களிடம்சட்டப்படி மதுக்கடைகளை ஒழிப்பதுஎன்பது குறித்த பயிற்சி பெற

மதுவை ஒழித்து, மக்களைக் காப்பதும் ; இலவசங்களை அள்ளித்தெளிப்பதற்காக, மனசாட்சி இல்லாமல் குடும்பங்களை சீரழிக்கும் ஆட்சியாளர்களின் சுயநலப்போக்கைத் தோலுரிப்பதும்தான் நம் நோக்கம் என்றால் நாம் ,ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். சிறு, சிறு கருத்து மாறுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டு, கைகோர்ப்போம் வாருங்கள். நேரெதிர் கொள்கைகள் கொண்டோர் எல்லாம் கூட்டணி அமைத்துக்கொள்ளும்போது, ஒத்த கருத்துள்ள நாம் மட்டும் ஏன் தனித்து செயல்பட வேண்டும்..?

    “ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ; நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

                                                                                                           
                                                                         செந்தில் ஆறுமுகம், பொதுச்செயலாளர்,
                                                           8754580274 , sentharu@gmail.com

by Swathi   on 17 Mar 2014  9 Comments
Tags: Satta Panchayat Org   Satta Panchayat Iyakkam   Satta Panchayat Iyakkam Action   சட்ட பஞ்சாயத்து இயக்கம்   மதுவிலக்கு செயல்திட்டம்   மதுவிலக்கு     
 தொடர்புடையவை-Related Articles
நாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்… நாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்…
தமிழகத்தில் மது விலக்கு தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைக்கள் தமிழகத்தில் மது விலக்கு தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைக்கள்
சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்திய டாஸ்மாக்கிற்கு அஞ்சலி செலுத்தும் ஆர்ப்பாட்டம் !! சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்திய டாஸ்மாக்கிற்கு அஞ்சலி செலுத்தும் ஆர்ப்பாட்டம் !!
தூங்கிக் கொண்டிருக்கும் தகவல் ஆணையத்தை தட்டி எழுப்பக் கோரி நடைபெற்ற சங்கு ஊதும் போராட்டம் !! தூங்கிக் கொண்டிருக்கும் தகவல் ஆணையத்தை தட்டி எழுப்பக் கோரி நடைபெற்ற சங்கு ஊதும் போராட்டம் !!
சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மதுவிலக்கு செயல்திட்டம் -2016 – மதுவிலக்கு ஆண்டு சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மதுவிலக்கு செயல்திட்டம் -2016 – மதுவிலக்கு ஆண்டு
ஊழலை ஒழிக்கவும், மதுவிற்கு எதிராகவும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சற்று முன் தொடங்கப்பட்டது. ஊழலை ஒழிக்கவும், மதுவிற்கு எதிராகவும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சற்று முன் தொடங்கப்பட்டது.
கருத்துகள்
09-Aug-2018 08:50:48 S.rajiv said : Report Abuse
Makkalin pirachanai teervu.varuvait turai sandru perum vazhi.mada italaga pottal melum pala tagaval கிடைக்கும்a2
 
27-Feb-2017 02:28:44 ranjith said : Report Abuse
No
 
31-Aug-2015 06:04:20 AR.MANOHARAN said : Report Abuse
Satta Urimai Iyakkam ,Socerty Jops detills
 
30-Apr-2015 05:32:14 சக்திவேல் said : Report Abuse
முதலில் நாம் ஒழுக்கமாக இருத்தல் வேண்டும் . பிறகு நம்மை சார்ந்தவர்களை மதுவின் அடிமையிலிருந்து நிச்சயம் மாற்றிவிடலாம் . இப்படிக்கு வ.சக்திவேல்கீதா (சமூக ஆர்வலர் ) என்றும் சமூக பணியில் தொடர்புக்கு:9884529033
 
30-Apr-2015 05:21:30 தேஷ்ணஸ்ரீ.S said : Report Abuse
ஒவ்வொரு கிரமதொரும் சமூக ஆர்வலரை நியமித்து அவர்களின் மூலமாக சட்ட பஞ்சயத்து அலுவலகத்தை அணுகி டாஸ்மாக்கை கடையை திறப்பதை முதலில் நிறுத்து வேண்டும். பிறகு ஒழிக்க வேண்டும் . நன்றி இப்படிக்கு ச. தேஷ்ணஸ்ரீ. இஆப (வருங்கால மாவட்ட ஆட்சியர்)
 
12-Mar-2015 01:11:07 ராமன் said : Report Abuse
மது விளக்கு ஒழிக்க கிராமம் முழுவதும் நேரடியாக சென்று விலிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
 
12-Mar-2015 01:09:35 ராமன் said : Report Abuse
மது விளக்கு ஒழிக்க கிராமம் முழுவதும் நேரடியாக சென்று விலிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
 
07-Jul-2014 05:51:02 R.அர்ஜுனன் said : Report Abuse
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா வில் உள்ள கிராமங்களில் டாஸ்மாக் இல் குறிப்பிட விலைக்குவாங்கி 1 பாட்டிலுக்கு ருபாய் 35 அதிக விலைக்கு விற்கும் வியாபாரிகளை தட்டிக்கேட்பது யார் சார்
 
07-Jul-2014 05:34:48 R.அர்ஜுனன் said : Report Abuse
முதலில் கிராமங்களில் உள்ள சிறு சாராய வியாபாரிகளை ஒழிக்கவேண்டும்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.