LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ஊழலை ஒழிக்கவும், மதுவிற்கு எதிராகவும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சற்று முன் தொடங்கப்பட்டது.

ஊழலை ஒழிக்கவும், மதுவிற்கு எதிராகவும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சற்று முன் தொடங்கப்பட்டது.  www.SattaPanchayt.org

சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் திரு.சிவ இளங்கோ அவர்கள் இயக்கத்தின் நோக்கம் மற்றும் அவருடைய கடந்தகால அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். இயக்கத்தின் பொதுச்செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம் அவர்கள் இயக்கத்தின் குறுகியகால நீண்டகால செயல்பாடுகள் குறித்து விவரித்தார். அங்குசம் திரைப்பட உண்மையான நாயகன் திரு.சீனிவாசன் அவர்கள் தகவல் பெரும் உரிமைச் சட்டம் குறித்த கைபேசி மென்பொருளை வெளியிட அதை சகாயம் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். திரு. சகாயம் அவர்கள் பொதுமக்க, பிரச்சினைகளுக்கு தொடர்புகொள்ள இயக்கத்தின் கால் சென்டர் எண் (766 – 100 – 100) ஐ அறிமுகம் செய்து வெளியிட்டார்கள். காவிரி டெல்டா விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு.ஆருபாதி கல்யாணம் அவர்கள் இயக்கத்தின் நோக்கம் வெற்றிபெற வாழ்த்திப் பேசினார்கள். அதில் டாக்டர் உதயமூர்த்தியின் மேற்கோளைக் காட்டி, இன்று மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டும், தேசப் பற்றுள்ள மனிதர்கள் அதிகரிக்கவேண்டும் என்று பேசினார்.  பின்பு பேசிய திரு.சகாயம் அவர்கள் இன்றைய ஊழல் மற்றும் மதுப் பிரச்சினைகளால் சமூகம் அடைந்துவரும் சீர்கேட்டினையும், அதற்கு மக்கள் மனம் மாற வேண்டும் என்பதையும் வலியுறித்தி அவரின் பல்வேறு அரசாங்க அனுபவங்களை குறிப்பிட்டுப் பேசினார். அவரின் பேச்சில் அரசாங்க ஊழியர்கள் மத்தியில் இது குறித்த மாற்றம் வரவேண்டும் அதுவே சிறந்தது என்று பேசினார். மேலும் தான் சந்தித்துவரும் சவால்களை குறிப்பிட்டு பேசுகையில், தற்போது ஒரு அரசு அதிகாரியாக சில செய்திகளை வெளிப்படையாக பேசமுடியாது எனவும் பின்பு தான் எழுதும் நூலில் விரிவாக ஊழல் பேர்வழிகளின் விபரங்கள் தரப்படும் என்றும் சூசகமாகக் குறிப்பிட்டார். அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் நேர்மையாக நடக்கப் போகிறார்களா? அல்லது ஊழல் படிந்து தன் பெயரை பதிவுசெய்துகொள்ளப்போகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  இந்த நிகழ்ச்சியை இணையத்தில் நேரடி ஒளிபரப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். 

 

இயக்க நிர்வாகிகள்:

சிவ இளங்கோ(36), தலைவர், M.A (இதழியல்), M.A (அரசியல் அறிவியல்)

 

  • முன்னாள் பத்திரிகையாளர், திருவாரூர் மாவட்ட விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்

 

  •  தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர். 18 பதிப்புகள் கடந்த “தகவல் உரிமைச் சட்டம். பயன்படுத்துவது எப்படி”, பதிவுத்துறை-சீர்திருத்தங்கள் நூல்களின் ஆசிரியர்

 

  •  கடந்த 7 ஆண்டுகளாக முழு நேர சமூகப் பணியாளர்

 

  • இலஞ்சம் – ஊழல், நல்லாட்சி குறித்து ஊடகங்களில் இவர் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும்

 

  • மக்கள் சக்தி இயக்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர்

 

 

செந்தில் ஆறுமுகம்(36), பொதுச்செயலாளர். M.C.A

  • தகவல் தொழில்நுட்ப பொறியாளர்(2005 வரை)

 

  • கடந்த 8 ஆண்டுகளாக முழுநேர சமூகப் பணியாளர்

 

  • நல்லாட்சி, மதுஒழிப்பிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

 

  • மதுஒழிப்பிற்காக நடைபெறும் பெரும்பாலான போராட்டங்கள், நிகழ்ச்சிகளில் தனது பங்களிப்பை தவறாது வழங்கி வருபவர்.

 

  • ”என்றும் வற்றாத காவிரி – அரசியல்” நூல் ஆசிரியர். சமூகப் பிரச்னைகள் குறித்து பல்வேறு கட்டுரைகள் எழுதியுள்ளார் மக்கள் சக்தி இயக்கத்தின் முன்னாள் செயற்குழு உறுப்பினர்

 

ஜாகீர் உசேன் (47),  செயலாளர்

  • இலஞ்சம் தடை செய்யப்பட்ட இடம்(Corruption Prohibited Zone) என்ற அறிவிப்புப் பலகையைத் தன் தொழில் நிறுவனத்தின் முன் தொங்கவிட்டு, நேர்மையோடு தொழில் செய்து வருபவர்

 

  • அன்னா ஹசாரேவின் “ஊழலுக்கு எதிரான இந்தியா(India Against Corruption) ஜன்லோக்பால் கொண்டுவரக்கோரி நடத்திய போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்தவர். சென்னை ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர்.

 

  • வாழும் கலை அமைப்பின்(Art of Living) பயிற்சி ஆசிரியர்

 

சாம் பொன்ராஜ் (37), செயலாளர்

  • கட்டிட வடிவமைப்பு வல்லுனர்

 

  • சமூக வலைத்தளம் மூலம் சமூக விழிப்புணர்வுப் பணிகளைச் சிறப்பாகச் செய்துவருபவர்

 

  • அன்னா ஹசாரேவின் “ஊழலுக்கு எதிரான இந்தியா(India Against Corruption) ஜன்லோக்பால் கொண்டுவரக்கோரி நடத்திய போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்தவர். சென்னை ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர்.

 

  • அண்ணா பல்கலைக்கழகத்தில் M.Arch பயின்றவர்

 

 

பாலாஜி பிரேம்குமார் (27),  செயலாளர்

  • தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்புத் துறை வல்லுனர். அண்ணா பல்கலைக் கழகத்தில் B.E படித்தவர்

 

  • பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இவர், சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக பணியை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர சமூகப் பணியாளராக இருந்து வருகிறார். பொதுநல அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் IAS பயிற்சிப் பள்ளியை நிர்வகிப்பவர், பயிற்சி அளிப்பவர்.

 

  • அன்னா ஹசாரேவின் “ஊழலுக்கு எதிரான இந்தியா(India Against Corruption) ஜன்லோக்பால் கொண்டுவரக்கோரி நடத்திய போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்தவர். சென்னை ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர்.

 

  • புகழ்பெற்ற காவல்துறை உயரதிகாரியான தன் தந்தையைப் போல் போராட்ட குணமிக்கவர்

 

சம்சு கனி (50),  செயலாளர்

  • சிறுவயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைக்குள்ளான இவர், படிப்படியாக தொழிலில் முன்னேறி இன்று ஏற்றுமதி நிறுவனமொன்றின் முக்கிய பங்குதாரராக இருக்கிறார்.

 

  • இலஞ்சம் தடை செய்யப்பட்ட இடம்(Corruption Prohibited Zone) என்ற அறிவிப்புப் பலகையைத் தன் தொழில் நிறுவனத்தின் முன் தொங்கவிட்டு, நேர்மையோடு தொழில் செய்து வருபவர்

 

  • அன்னா ஹசாரேவின் “ஊழலுக்கு எதிரான இந்தியா(India Against Corruption) ஜன்லோக்பால் கொண்டுவரக்கோரி நடத்திய போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்தவர். சென்னை ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர்

 

சட்ட பஞ்சாயத்து இயக்க பின்புலத்தில் இயக்க குழுவினர்

 

  • திரு. ஜெய்கணேஷ்
  • திரு. சற்குணம்
  • திரு. சந்தோஷ்
  • திரு.வாசுகி செல்வமணி         
  • திரு.முரளி ராகவன்
  • திரு.சக்தி வடிவேலன்
  • திரு.பழனிகுமார்
  • திரு. சிவகுமார்
  • திரு. பூவேந்திரன்
  • திரு. சுரேஷ் குமார்
  • திரு. ராஜேஷ் கண்ணா
  • திரு. தினேஷ்
  • திரு. சுதாகர்
  • திரு.முரளி
  • திரு.ஈஸ்வரன்
  • திரு.ரவி
  • திரு.தினேஷ்
  • திரு.கார்மேகராஜ்
  • திரு.ஜெயராம்
  • திரு.செந்தில்நாதன்

 

சட்ட பஞ்சாயத்து இயக்க பின்புலத்தில்  நிபுணர்கள் & ஆலோசகர்கள்

 

  1. செளரிராஜிலு, பதிவுத்துறை துணைத்தலைவர்(ஓய்வு)

 2. செ.மா.அரசு, ஊழல் எதிர்ப்பு இயக்கம் & பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் (ஓய்வு)

 3. சிவராஜ், தாசில்தார்(ஓய்வு)

 4. சீனிவாசன், இலஞ்ச ஒழிப்புப் போராளி

 5. திரு .மோகன் ராம், குடிமைப் பொருள் துறை(ஓய்வு)

 6. திரு.ஆறுபாதி கல்யாணம், காவிரி டெல்டா விவசாய சங்கம்

 7. திரு. நல்லோர் வட்டம் பாலசுப்ரமணியம், சமூக ஆர்வலர்

 8. திரு. எண்ணங்களின் சங்கமம் J.பிரபாகர், சமூக ஆர்வலர்

 9. திரு.ச. பார்த்தசாரதி, கல்வியாளர்

 10. பொறியாளர்.திரு.வீரப்பன், பொதுப்பணித்துறை(ஓய்வு)

 11. திரு.கோவிந்தசாமி, மின்சாரத்துறை(ஓய்வு)

 

12. திரு.பாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர்(ஓய்வு)

 

13. திரு.தேவராஜன்,மின்சாரத்துறை(ஓய்வு)

 

14. திரு.ராஜேந்திரன், இந்திய ரிசர்வ் வங்கி

 

15. திரு.குருசாமி, கூட்டுறவுத் துறை(ஓய்வு)

 

16. திரு. ரங்கநாதன், குடிசை மாற்று வாரியம்

 

17. திரு. வில்வம், சார்புச் செயலாளர்(ஓய்வு), தலைமைச் செயலகம்

 

18. திரு. நாராயணசாமி, ஊராட்சி உதவி இயக்குனர்(ஓய்வு)

 

19. திரு. செல்வராஜ், மின்சாரத்துறை(ஓய்வு)

 

சட்ட பஞ்சாயத்து இயக்கம் தொடக்க விழா
by Swathi   on 14 Dec 2013  2 Comments
Tags: சட்ட பஞ்சாயத்து   Satta Panchayat Iyakkam   ஊழலை ஒழிக்க   சட்ட பஞ்சாயத்து இயக்கம்   சிவஇளங்கோ        
 தொடர்புடையவை-Related Articles
நாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்… நாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்…
தமிழகத்தில் மது விலக்கு தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைக்கள் தமிழகத்தில் மது விலக்கு தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைக்கள்
சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்திய டாஸ்மாக்கிற்கு அஞ்சலி செலுத்தும் ஆர்ப்பாட்டம் !! சட்ட பஞ்சாயத்து இயக்கம் நடத்திய டாஸ்மாக்கிற்கு அஞ்சலி செலுத்தும் ஆர்ப்பாட்டம் !!
தூங்கிக் கொண்டிருக்கும் தகவல் ஆணையத்தை தட்டி எழுப்பக் கோரி நடைபெற்ற சங்கு ஊதும் போராட்டம் !! தூங்கிக் கொண்டிருக்கும் தகவல் ஆணையத்தை தட்டி எழுப்பக் கோரி நடைபெற்ற சங்கு ஊதும் போராட்டம் !!
சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மதுவிலக்கு செயல்திட்டம்  -2016 – மதுவிலக்கு ஆண்டு சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மதுவிலக்கு செயல்திட்டம் -2016 – மதுவிலக்கு ஆண்டு
ஊழலை ஒழிக்கவும், மதுவிற்கு எதிராகவும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சற்று முன் தொடங்கப்பட்டது. ஊழலை ஒழிக்கவும், மதுவிற்கு எதிராகவும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சற்று முன் தொடங்கப்பட்டது.
கருத்துகள்
23-Jan-2016 01:47:46 ஷாகுல் hameed said : Report Abuse
பெஸ்ட் விஷேஸ்
 
01-Oct-2015 13:17:15 i.sukurullah@babu said : Report Abuse
எங்கள் பகுதி கோவை, சங்கனுர், சன்முக கவுண்டர் விதி, குடிசை மாற்று வாரியம், நிலம், வங்கி கடன் மானியம், பெற்று விடுகள் கட்டப்பட்டது, சிலர் கடனை அடைத்து விட்டனர், சிலரது கடன் நிலுவையில் உள்ளது, இந்நிலையில் அருகில் இருக்கும் தனியார் நிலம் கொண்டவர்கள் 40 வருடங்களாக நாங்கள் பயன்படுத்திய பாதையை அடைக்க முயற்சி செய்கிறார்கள்.அதிகபட்சமாக நாங்கள் வசிக்கும் விட்டின் கதவு வரை அடைக்க முயற்சி செய்கின்றனர்.அரசு அதிகரிகள், அரசியல் பிரமுகர்கள் ஆதரவு, இந்த 40 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும், பல இடங்களில் மனு அளித்தும் பயனில்லை, முடிந்தால் உதவுங்கள்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.