சவுதி அரேபியாவில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சவுதி அரேபியா கையிலெடுத்துள்ள பாலைவனச் சொகுசு ரயில் ஒட்டுமொத்த உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு Dream of the Desert என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வரும் 2026ஆம் ஆண்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன. ரியாத்தில் தொடங்கி வடக்கே ஜோர்டான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அல் குராயத் வரை 1,300 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் இயக்கப்படவுள்ளது.
இதற்காக ஏற்கனவே போடப்பட்டுள்ள ரயில்வழித்தடம் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சொகுசு ரயில் திட்டத்தை சவுதி அரேபியா ரயில்வே மற்றும் இத்தாலியைச் சேர்ந்த ஆர்சினலே குழுமம் ஆகியவை இணைந்து 53 மில்லியன் டாலர் மதிப்பில் செயல்படுத்த உள்ளனர்.
இந்தப் பயணத்தில் சவுதி அரேபியாவின் பல்வேறு விதமான நில அமைப்புகளைக் கண்டு ரசிக்கலாம். மொத்தம் 40 தனியறைகள் இடம்பெற்றுள்ளன. 82 பயணிகள் வரை பயணம் செய்யலாம். இந்தச் சொகுசு ரயிலில் உணவகம், பார் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கின்றன. சவுதி அரேபியா பாலைவனச் சொகுசு ரயில் எப்போது பயன்பாட்டிற்கு வரும் எனச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
|