|
|||||
விஞ்ஞானியும் எழுத்தாளருமான நெல்லை சு.முத்து காலமானார் |
|||||
![]()
விஞ்ஞானி, எழுத்தாளா் எனப் பன்முகத்தன்மை கொண்ட, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து திருவனந்தபுரத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 74.
நெல்லையை பூர்வீகமாகக் கொண்ட விஞ்ஞானி சு.முத்து 1951 மே 10 ஆம் தேதி பிறந்தவா். இஸ்ரோவின் சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் முதல் நிலை விஞ்ஞானியாகப் பணியாற்றிய இவா், தன்னுடைய சீரிய சிந்தனையால் பல முறை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவா்களால் பாராட்டப்பெற்றவர். தமிழ் மீது தீரா காதல் கொண்ட நெல்லை சு.முத்து அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு என 70க்கும் மேற்பட்ட புத்தங்களை எழுதியுள்ளார்.
எழுத்து துறையில் இவரின் பங்களிப்பைக் கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சிறந்த நூல் ஆசிரியா் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் வசித்துவரும் நெல்லை சு.முத்து உடல்நலக்குறைவால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், காலமானார். அவரது உடல் மாலை 6 மணி அளவில் மதுரையில் உள்ள அவரது மகள் கலைவாணி வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது. ஜூன் 17ம் தேதி இன்று இறுதிச் சடங்குகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|||||
by hemavathi on 16 Jun 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|