|
||||||||
பூமியை நோக்கி அதிவேகத்தில் வரும் விண்கல் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை |
||||||||
![]() பூமியை நோக்கி 48 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் விண்கல் ஒன்று வேகமாக வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பால் வெளி அண்டத்தில் ஏராளமான கோள்கள் இருந்தாலும் அவற்றில் பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற காலநிலை காணப்படுகிறது. பூமி தனது அச்சில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது.
இதேபோன்று பல்வேறு கோள்களும் தங்களது நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. விண்வெளியில் அவ்வப்போது சில விண்கற்கள் பூமியை நோக்கி வருவது உண்டு. அவற்றில் பெரும்பாலானவை பூமியின் அயனி மண்டலத்திற்கு வரும்போது எரிந்து சாம்பலாக கூடும். சில விண்கற்கள் பூமியில் மோதி மிகப்பெரிய பள்ளங்களை ஏற்படுத்திய சம்பவங்கள் வரலாற்றில் நடந்துள்ளன.
அந்த வகையில் சிறு கோள் ஒன்று 48 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். 2025 HY 2 என்று அந்த சிறு கோளுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதனுடைய திசையில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டு அடுத்து வரும் நாட்களில் பூமியை விட்டு விலகிச் செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள்.
இருப்பினும் முந்தைய பல விண்கற்களுடன் ஒப்பிடும்போது இந்த 2025 HY 2 பூமியை நெருங்கிக் கிடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக உடனடியாக எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதே நேரம் திசை மாற்றம் பூமியை நோக்கி இருக்குமா என்பது குறித்தும் அந்த விண் கல்லின் நகர்வை நாசா விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இந்த விண்கல் 37 மீட்டர் விட்டம் கொண்டதாக உள்ளது. ஒரு மிகப்பெரிய போயிங் ரக விமானத்தை அளவுக்கு இந்த விண்கல் அளவு காணப்படுகிறது. 2013 ஆம் ஆண்டு ரஷ்யாவில் விழுந்த 18 மீட்டர் அகலம் கொண்ட விண்கல் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மக்களைக் காயப்படுத்தியதுடன் ஆயிரக்கணக்கான கட்டிடங்களையும் சேதத்திற்கு உள்ளாக்கியது.
அதனுடன் ஒப்பிடும்போது தற்போது பூமியை நோக்கி வரும் விண்கல் பூமியின் மீது மோதினால் பாதிப்பு கொஞ்சம் அதிகமாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
|
||||||||
by hemavathi on 08 May 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|