LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

சீர்

சீர்வகை செப்பின் நான்கா கும்மே.
கருத்து : சிந்துப்பாடல்களில் அமையும் சீர்வகைகளைச் சொல்வோமானால் அவை நான்கு வகைப்படும்.
விளக்கம் : இதற்கு முன் சிந்துப் பாடல்களில் அமையும் அசை என்பது யாது? என்று கூறி, அவ்வசைகளின் வகைகளாகிய குறிலசை, நெடிலசைகளைக் கூறினார். பின்னர் அசை நீட்டங்களைக் கூறினார். அசைகளில் சிறப்பசைகளையும், சிறப்பிலசைகளையும், வழுவசைகளையும் கூறி, அசைகளாகும் சீர் வகைகளை இங்கு எடுத்துக் கூறுகிறார். 
19.
மூன்றும் நான்கும் ஐந்தும் ஏழும்
என்றொரு சீர்க்கண் இயலும் அசைகளால் 
‘தகிட’ ‘தகதிமி’ ‘தகதகிட’ என்றும்
‘தகிட தகதிமி’ என்றும் அமைந்து
சிந்துக் குரிய சீர்கள் நடக்கும்.
கருத்து : ஒரு சீர்க்கண் மூன்று அசைகளும், நான்கு அசைகளும், ஐந்து அசைகளும், ஏழு அசைகளும் வரும். அவை முறையே, மூவசைச்சீர், ‘தகிட’ என்றும், நாலசைச்சீர் ‘தகதிமி என்றும், ஐந்தசைச்சீர் ‘தகதகிட’ என்றும், ஏழசைச்சீர் ‘தகிடதகதிமி’ என்றும் சொற்கட்டுகளாய் அமைந்து சிந்துப் பாடலுக்குரிய சீர்கள் வழங்கும்.
விளக்கம் : சிந்துப் பாடல்களில் மும்மை நடையுடைய பாடல்களும், நான்மை நடையுடைய பாடல்களும், ஐம்மை நடையுடைய பாடல்களும், எழுமை நடையுடைய பாடல்களும் உள்ளன. அருகிய வழக்காக ஒன்பான்மை நடையுடைய சிந்துப் பாடல்களும் உள்ளன.
ஒரு சிந்துப் பாடல் அதன் ஒவ்வொரு சீரிலும் மும்மூன்று அசைகள் இருக்கும். 
எடுத்துக் காட்டாக ‘ஆறுமுக வடிவேலனே’ என்ற பாடலை எடுத்துக் கொள்வோம்.
ஆ  று   மு க    வ   டி வே   ல  வ னே  க  லி
யா  ண  மும் செய்  ய  வில் லை   .   . .    சற் றும்
அச்  ச  மில் லா ம  லே கைச்  ச  ர சத்  துக் க
ழைக் கி  றா யென் ன  தொல் லை .   . .    .   . 
இது மும்மை நடைப்பாடல். இதில் ‘ஆறுமு கவடி வேலவ’ என்பன போன்ற பகுதிகள் தாளத்தின் ஒவ்வோர் எண்ணிக்கையிலும் அமைந்துள்ளன. அவை ஒவ்வோன்றும் ஒவ்வொரு சீராகக் கொள்ளப்படும். இரண்டாம் வரியில் உள்ள லை என்பது இசையளவில் நீண்டு ஒரு சீராகிறது. நான்காம் வரியில் உள்ள லை இசையளவில் நீண்டு இரண்டு முழுச்சீர்களாகிறது. இப்படி மிகுதியாக நீளும் இசை நீட்டங்கள் பெரும்பாலும் அரையடி இறுதிகளிலும், அடியிறுதிகளிலும் மட்டுமே காணப்படும்.
ஒவ்வொரு சீரிலும் மும்மூன்று உயிர்கள் இருப்பதைக் காணலாம். அவை தனி உயிராகவோ, மெய்யின் மேலேறிய உயிராகவோ இருக்கும். அடியிறுதி, அரையடி இறுதி இடங்களில் தவிரப் பெரும்பாலான இடங்களில் ஒரு சீரில் மூன்று உயிர்கள் இருப்பதைக் காணலாம். அவை ஏன் மும்மூன்றாக உள்ளன. ஏன் நந்நான்காக இல்லை? ஏனென்றால், இது மும்மை நடைப்பாடல், ‘தகிட’ என்ற தாளக் கருவியின் சொல்லுக்கேற்றபடி மும்மூன்றாகத் தான் ஒவ்வொரு சீரும் நடக்கும்.
‘தெள்ளுதமிழுக்கு’ என்ற பாடலில் ஒவ்வொரு சீரும் நான்கு அசை உடையதாக உள்ளது. எனவே இது நான்மை நடைப்பாடல். ‘சீர் வளர் பசுந்தோகை’ என்ற பாடலின் ஒவ்வோரு சீரிலும் ஐந்து அசைகளும், ‘பொன்னுலவு’ என்ற பாடலில் சீர்தொறும் ஏழு அசைகளும் உள்ளன. இவை முறையே ஐம்மை, எழுமை, நடைகளுக்குரியன. (இப்பாடல்களை பின் இணைப்பில் காணலாம்).
‘ஆறுமுக வடிவேலவனே’ என்ற பாடலைப் பாடும்போது மத்தளம் முதலிய தாளக் கருவிகளில் பாடலின் ஒரு சீரில் உள்ள மூன்று அசைக்களுக்கு ஏற்றவாறு ‘தகிட’ என்றோ கிடதொம்’ என்றோ, ‘தொம்கிட’ என்றோ, ‘ததீம்’ என்றோ, ‘தீம்த’ என்றோ வாசிப்பார்கள். இங்கு கூறிய ‘தகிட’, ‘கிடதொம்’, ‘தொம்கிட’, ‘ததீம்’, ‘தீம்த’ முதலியன மும்மை நடையின் சொற்கட்டுகள். இவ்வாறே நான்மை நடைக்கும், ஐம்மை நடைக்கும், எழுமை நடைக்கும், ஒன்பான்மை நடைக்கும் சொற்கட்டுகள் உள்ளன.
மும்மை நடை : தகிட, கிடதொம், தொம்கிட, ததீம், தீம்த முதலியன 
நான்மை நடை : தகதிமி, ததிங்கிண, தாதீம், தகதீம், தாம்கிட, ததீம்த முதலியன 
ஐம்மை நடை : தகதகிட, தரிகிடதொம், தகதீம்த, தாதீம்த, தோம்கிடதொம், ததீம்தா முதலியன
எழுமை நடை : தகிடதகதிமி, தீம்ததகதிமி, ததீம்தாதிமி, தகிடதாம்தக, தகிடதகதீம் முதலியன 
ஒன்பான்மை நடை : தகதிமிதகதகிட, தாதீம்தகிடதீம் முதலியன.
நடைகளில் ஒன்பான்மை நடை பொதுவாக வழக்கிலில்லை. ஒன்பதாக நடக்குமிது மூன்று மும்மைக்குச் சமமாக (3X9)=9 இருப்பதால் மும்மையில் அடங்கி, தன் தனித்தன்மையை இழந்து நிற்கிறது என்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். இக்காரணங்களால் ஆசிரியர் ஒன்பான்மையைக் கூறாது விடுத்தார் எனலாம். ஆகவே சிந்துப் பாடல்லின் ஒரு சீரினிடத்து ‘தகிட’ என மூன்று அசைகளும், ‘தகதிமி’ என நான்கு அசைகளும், ‘தகதகிட’ என ஐந்து அசைகளும், ‘தகிடதகதிமி’ என ஏழு அசைகளும் அமைந்து வருமாயின் அவை மும்மைச்சீர், நான்மைச்சீர், ஐம்மைச்சீர், எழுமைச்சீர் எனப்படும். 
காட்டு :
ஆறுமு - தகிட - மும்மைச்சீர் தெள்ளுதமி - தகதிமி - நான்மைச்சீர் மனமகிழு - தகதகிட - ஐம்மைச்சீர் முகில்பெருஞ்சி- தகிடதகதிமி - எழுமைச்சீர்

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.