LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 962 - குடியியல்

Next Kural >

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தோடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
சீரினும் சீர் அல்ல செய்யார் - புகழ் செய்யுமிடத்தும் தம் குடிமைக்கு ஒவ்வாத இளிவரவுகளைச் செய்யார்; சீரொடு பேராண்மை வேண்டுபவர் - புகழுடனே மானத்தை நிறுத்துதலை விரும்புவார். (எவ்விடத்தும் நிலைகுலையாத திண்மையான் உளதாதல் பற்றிப் 'பேராண்மை' எனப்பட்டது. நிலையுடைய புகழின் பொருட்டாகவும் செய்யார் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
தமக்குப் பொருள் மிகுதி உண்டாமாயினும் நிகரல்லாதன செய்யார், தலைமையோடே கூடப் பெரிய ஆண்மையை விரும்புவார்.
தேவநேயப் பாவாணர் உரை:
சீரொடு பேராண்மை வேண்டுபவர்- புகழொடு மானத்தை நிலைநிறுத்துதலை விரும்புபவர்; சீரினும் சீர் அல்ல செய்யார்- புகழைச் செய்யு மிடத்தும் தம் குடிப்பிறப்பிற் கொவ்வாத இழி செயல்களைச் செய்யமாட்டார். ஏகாரம் தேற்றம். எந்நிலைமையிலுந் தளராத மனத்திண்மை யுடைமையால் மானம் பேராண்மை யெனப் பட்டது. சீரினுஞ் சீரல்ல செய்தல் அன்முறையாய்க் கொள்ளையடித்து அறச்சாலை நிறுவுதல் போல்வது.
கலைஞர் உரை:
புகழ்மிக்க வீர வாழ்க்கையை விரும்புகிறவர், தனக்கு எப்படியும் புகழ் வரவேண்டுமென்பதற்காக மான உணர்வுக்குப் புறம்பான காரியத்தில் ஈ.டுபடமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
புகழுடன் தன் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புபவர் புகழுக்குரியவற்றைச் செய்யும்போதும் தம் குடும்பப் பெருமைக்கு ஏற்காத இழிவுகளைச் செய்யமாட்டார்.
Translation
Who seek with glory to combine honour's untarnished fame, Do no inglorious deeds, though men accord them glory's name.
Explanation
Those who desire (to maintain their) honour, will surely do nothing dishonourable, even for the sake of fame.
Transliteration
Seerinum Seeralla Seyyaare Seerotu Peraanmai Ventu Pavar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >