LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- தன்னம்பிக்கை (Self Confidence )

தன்னம்பிக்கை-பகுதி 3

 

தன்னம்பிக்கை-பகுதி 3  
-சூர்யா சரவணன் 

தன்னம்பிக்கை-பகுதி 3  

-சூர்யா சரவணன்

 

 

  மைக்கெல் ஆஞ்சலோ;

 

  ஒவியசிற்ப துறையில் 500 ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் சாதனைகள்  புரிந்தவர்மைக்கேல் ஆஞ்சலோ.

  1475 ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்தவர். மைக்கெல் ஆஞ்சேலா குழந்தை பருவத்திலேயே அன்னையை இழந்தார்.  13 வயதில் இர்லாண்டையோ என்ற பெயிண்டரிடம் பயிற்சி பெற அனுப்பினார்கள். 23வயதில் பீட்டா எனும் தலை சிறந்த ஓவியப்படைப்பை உருவாக்கினார்பிரஞ்ச் கர்த்தினால் டிவில்லியர்ஸ் வேண்டுகோளின்படி கன்னிமரியாள் தன் புதல் ஏசுநாதரை சிலுவையிலிருந்து அவர் கீழே இறக்கி விட்டப் பின்னர் தன் மீது இடத்தி சோகமே உருவமாய் அமர்ந்திருக்கும் சிற்பத்தை வடித்து தந்தார்பார்த்தவர் நெஞசில் பசுமையாய் பதிந்த சிற்பக் காட்சி அது இது அவரது புகழை உயர்த்தியது.

  ஒரு சிற்பியால் 40 ஆண்டுகளுக்கு முன்னரே புறக்கணிக்கப் பட்டு கீழே கிடந்த ஒரு கல்லை பார்த்த ஆஞ்சலோ கோலியாத்தை வீழ்த்திய டேவிட் இதோ உறங்குகிறான் என்றாராம் 13 அடி உயர டேட் சிலையும் அவரது அற்புதமான படைப்பாக அமைந்தது.

  பைபிள் காட்சிகளைச் சித்தரிக்கும் அரிய ஓவியங்களை 2 ஆம் போப் ஜீளயஸ் வேண்டுகோளுக்கிணங்க வரைந்து புகழ் பெற்றார்மைக்கல் ஆஞ்சலோ! 10 ஆயிரம் .அடி. பரப்பில் 343 பைபிள் கதைமாந்தர்களை சர்சின் உட்கூரையில் வரைந்தார்வரைந்து முடிக்க (சாரத்தில் மல்லாந்து படுத்தபடி)  4 ஆண்டுகள் ஆனதாம். குல்லாயில் மெழுகு வர்த்தியைப் பொருத்தி வைத்தபடி நள்ளிரவில் கூட வரைந்து கொண்டிருப்பாராம். வரையும் போது போப்பாண்டவர்கூட அவரை இடையூறு செய்ய மாட்டாராம். திருமணமே செய்து கொள்ளாமல் கலைக்காகவே தன்னை அர்பணித்து கொண்டவர் 1564 ஆண்டு தனது 90 ஆவது வயதில் மரணமடைந்தார். அவர் காலத்தில் வாழந்த லியர்னோ&டாவின்சி ரஃபேல் டைட்டன் போன்ற ஓவியர்களால் பெரிதும் பா£ட்டப்பெற்றவர் ஆஞ்சலோஅலர் தனிப்பட்ட படைப்பாக்க சாதனையை என்றென்றும் மறக்கமுடியாது! ஓவியராக சிற்பியாக கட்டிடக்கலை வல்லு¬ராக வாழ்ந்து மறைந்தவர் ஆஞ்சலோ.  500 ஆண்டுகளுக்கு பிறகு அவர் வரைந்த ஓவியங்களும் சிற்பங்களும் நாம் பார்க்க வியக்கத்தக்கவையாக இருக்கின்றன.

  இசை மேதை பீத்தோவனை நாம் மறக்க முடியாதது போலவே சிற்பக்கலை மேதை ஆஞ்சலோவையும் மறக்கமுடியாதுஅவரிடம் காணப்பட்ட கடும் உழைப்புதான் மேற்  கொண்ட கலைத் தொழிலில் அவருக்கு இருந்த ஈடுபாடு, மல்லாந்து படுத்துக் கொண்டே 4 ஆண்டுகள் சோர்வின்றி அவர் உட்கூரை ஓவியங்களை வரைவதற்காக எடுத்து கொண்ட கடின  உழைப்பு, இவையெல்லாம் சாதனை புரிய நினைப்பவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய செய்திகளாகும்.

 

ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் 

 

  மாபெரும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் பள்ளிபருவத்தில் ஜெர்மன் பள்ளிக்கூடத்திலிருந்து  வெளியற்றப்பட்டவர். ஒரு சமயம் வரலாற்று ஆசிரியருக்கும் அவருக்கும் வகுப்பறையில் கடும் கருத்து மோதல் ஏற்பட்டது. வரலாற்று ஆசிரியர் கேள்வி கேட்கிறார்ஜன்ஸ்ட்டின் தெரியாது என்கிறார்தெரிந்து கொள்ளக் கூடாதா  என்கிறார் ஆசிரியர்வெறும்  தேதிகளை தெரிந்து கொண்டு என்ன பயன்  அவற்றை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாமே என்ற ஜன்ஸ்ட்டின் ’’ஐயா உண்மைகளை விட கருத்துக்கள் முக்கிய மானவை. யாரை யார் எப்போது அடித்தார்கள் என்பதைவிட ஏன் அந்த சம்பவம் நடைபெற்றது என்பதைத் தெரிந்து கொள்வதே முக்கியமானதுஅது பயனளிக்கும் என்றாராம். ஆத்திரமடைந்த ஆசிரியர் போதும் உன் விரிவுரையை நிறுத்து என்றாராம். இளம் ஐன்ஸ்ட்டின் என்ற நூலில் இச்சம்பவம் காணப்படுகிறதுஇப்படி ஆசிரியர்களால் குறைத்து மதிப்பிடப்பட்டவர். பள்ளியிலிருந்து வெளியேற்றபட்டவர் எண்ணற்ற தடைகளை தாண்டி மாபெரும் விஞ்ஞானியாகி  இருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமல்ல.

  மாபொரும் ஷெல்லி பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்தான்! இலக்கிய மேதை மாக்சிம் கார்க்கி எந்த பல்கலைக்கழகத்திலும் படிக்காதவர்தான். ஏராளமான விஞ்ஞான கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்த தாமாஸ் ஆல்வா எடிசன் படிப்பதற்கு லாயக்கற்றவர் என்று ஆசிரியரால் முத்திரைகுத்தப்பட்டவர்தான். ஆசிரியர்களால் கணித்து கூறமுடியாத அளவுக்கு இயல்பான திறமைகளும் அவற்றை எத்தகைய இடையூறுகள் வந்தாலும் ஓளி மங்காமல் தாமாகவே வளர்த்துக் கொள்ளும்  ஆற்றலும் இவர்களிடம் காணப்பட்டுள்ளது. மாபெரும் சாதனை நிகழ்த்துவதற்குப் பள்ளிக் கூடத்தில் சொல்லித் தந்த கல்வியறிவு தான் தேவை என்பதல்ல. அதனையும் தாண்டி இவர்கள் சாதனை நிகழ்த்தியுள்ளனர்இந்த சாதனை வரலாறு உத்வேகம் அளிக்கக் கூடியது.

  நீங்கள் பள்ளிக்கூடத்தில் சரியாக திறமையை வெளிப்படுத்த வில்லை என்று மனம் ஒடிந்து போகக் கூடாதுதிறமைகளை வளர்த்துச் சாதனைகள்  புரிவதற்கு காலம் நேரம், கிடையாதுஎத்தனையோ பெரிய மேதைகள் மிகக் சிறிய வயதிலேயே தங்களது முதலாவது சாதனையை நிகழ்த்தியுள்ளனர்சாதனை புரிந்திட சாதனை புரியும் மனோபவம் முக்கியம் தேவைசாதனை புரிய தூண்டலும் வேண்டும்.

  நானென்ன சாதித்து விடப் போகிறேன் என்று சோம்பி இருந்து விடக் கூடாது தன்னால் சாதிக்க முடியாது என்தற்காக சும்மா இருந்து விடுவதை விட செயல்படத் தொடங்கி விட்டால் அவர்கள் ஒரு சாதனை நோக்கிய ஒரு பயணத்தை ஆரம்பித்து விட்டதாகக் கருதலாம், அந்தபயணத்தில் செற்றி வருமா என்று கவலைபட்டு கெபண்டுருந்தால் வெற்றி நிச்சயம் வராது, மனச்சோர்வும், ஊக்க மின்மையும் வந்து விடும் வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் அதே நேரத்தில் ஈடுபடுகிற பணியைச் சரியாக, திருத்தமாக முன்னோக்கிய பார்வையுடன் செய்யும் போது ஒவ்வொரு அடியும் ஒரு சாதனைக்கு உங்களை தயார் படுத்தும்.

 

                        *   *   *   *   *

 

      7.தன்னம்பிக்கைக்குத் தடைகள்

 

 வாழ்க்கையில் முன்னேறத் தன்னம்பிக்கை தேவை. இந்தத் தனனம்பிக்கையைப் பெறுவதற்கே தடைகள் வந்து விட்டால் முன்னேற்றச் சிந்தனைகளின் முதுகெலும்பு உடைந்து விடும்.

  பெற்றோர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள். மரியாதைக்குரிய மூத்தோர் ஆகியோர் தெரிந்தோ தெரியாமலோ ஒருவருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படக் காரணமாகி விடுகின்றனர். குடும்பம், பள்ளிச்சூழல் இதர வாழ்க்கை சூழல்களும் இந்த தாழ்வுமனப்பான்மைக்கு பின்புலமாக அமைந்து விடுகின்றன.

   தாழ்வு மனப்பான்மை மேலோங்கி ஒருவரது தன்னம்பிக்கைக்கு தடையாக இருப்பது போலவே சிலரிடம் எதிர்மறையான சிந்தனைகள் இருக்கும். படிக்கும்போதோ ஒரு செயலில் ஈடுபடும் போதோ அதைப்பற்றி ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு எதிராக எப்பொழுதும் எதிர் மறையாக எண்ணத் தொடங்குவார்கள். இந்த எதிர்மறைச் சிந்தனையும் தன்னம்பிக்கைக்குத் தடையாகும்.

  தன்னைத்தானே நம்பாத சந்தேகமும்  தன்னம்பிக்கைக்கு  தடையாகும். சோம்பல் இன்னொரு தடையாகும்.

  ஒருவன் தனக்குத் திறமைகள் இருந்தும் தன்னை ஒன்றுக்கும் உதவாதவனாக, பிறருக்கு தாழ்ந்து போக வேண்டியவனாக கருதிக் கொள்ளும் மனப்பான்மையே தாழ்வு மனப்பான்மை ஆகும். பெற்றோர் எவ்வித தவறான நோக்கமின்றி, ஆனால் கடுமையான வார்த்தைகளால் திட்டுவதைக் கேட்டிருக்கிறோம். இப்படித் திட்டுவது பிள்ளைகளின் ஆளுமையைப் பாதிக்கிறது.

    ஒரு தந்தை தன் மகனைப் பா£த்துஇந்தக் குடும்பத்தில் வந்து ஏன் பிறந்தாய்?” என்று அடிக்கடி திட்டிக் கொண்டிருந்தால் நாளடைவில், குடும்பத்தில் தொடர்ந்து நீடித்திருப்பது குறித்து அவமான உணர்ச்சி ஏற்பட்டு, அது தீவரம் அடையும் போது அவனை வீட்டை விட்டு வெளியேற வைத்துவிடும். ஒருதாய் தன் மகனை அல்லது மகளைஏன் என் வயிற்றில் வந்து பிறந்தாய்என்று கரித்து கொண்டிருந்தால் அந்த பிள்ளைகளும் அவமான உணர்ச்சிக்கு ஆளாவர்கள்.

  பெற்றோர்கள் பிள்ளைகளை குறைத்து மதிப்பிடுவதன் மூலம், அவர்களை  சாதரணமானவர்களாக கருதுவதன் மூலம், முக்கியமற்றவர்களாக எண்ணி நடத்துவதால் தாழ்வு மனப்பான்மையைத் தங்கள் பிள்ளைகளுக்கு உண்டாக்கி விடுகிறார்கள்.

  * “நீ உன் தம்பி மாதிரி புத்திசாலியில்லைஎன்று அண்ணனை மட்டம் தட்டுவதும்,

  * “நீ பக்கத்து வீட்டு கலா மாதிரி அழகாய் இல்லைஎன்று குறைகூறி பேசுவதும்,

  * “உன்னால் முடியாது! எனக்கு தெரியும் நானே பார்த்துக் கொள்கிறேன்”  என்று ஒருவரைகுறைத்து மதிப்பிட்டு பேசுவதும்,

  * “முட்டாள்

  * “உருப்படாதவன்

  * “நீ தரித்திரம் பிடித்தவன்

என்றெல்லாம் முத்திரை குத்துவதும் தவறான போக்காகும். இம்மாதிரி வாசகங்களை தாய் தந்தையர் பேசினாலும் சொந்தக்காரர்கள் பேசினாலும்  நெருக்கமான நண்பர்கள் பேசினாலும் இவை யாரைக் குறித்துச் சொல்லப்பட்டதோ அவரது ஆளுமையை பாதித்து விடும். பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் தன் வகுப்பு மாணவனை அல்லது மாணவியைப் படிப்பதற்கு லாயக்கற்றவர். என்ற முத்திரை குத்துவதும் அவர்களது மனம் அதை நம்ப தொடங்குதுவம் நாளடைவில் அவர்களை படிப்பதற்கு லாக்கற்றவர்களாக ஆக்கி விடும். அவர்களிடம் உண்மையிலேயே படிக்கும் திறன் இருந்த போதிலும் தாழ்ந்த மனநிலைக்கு தள்ளப் படுவார்கள். இவ்வாறே ஒருவரை கோழை, விவரம் கெட்டவன், ஏமாளி, இளிச்சவாயன் என்றெல்லாம் அடிக்கடி பேசிவந்தால் அதனை ஏற்கத் தொடங்கிய எவர் மனதிலும் தாழ்வு மனப்பான்மை வந்துவிடும்.

 

அன்பு காட்டது வெறுப்பையே எதிர் கொள்கிறவர்கள் மனத்தில் தாங்கள் பிறரது அன்பைப் பெறத் தகுதி அற்றவர்கள் என்ற எண்ணம் உருவாகி தாழ்வு மனப்பான்மை கொண்டவராக்கி விடும். இப்படித் தாழ்வு மனப்பான்மை வந்து விட்டால் தன்னை தகுதியில்லாதவராகவும் மற்றவர்களைத் தகுதியானவர்களாக கருதும் குணம் வந்துவிடும். இப்படித் கருதும் உள்ளத்தில் தன்னம்பிக்கை எனும் கோட்டை கதவுகள் சாத்திக் கிடக்கும். அதை நோக்கி சொல்லவும் தயங்கி அவர்கள் ஒதுங்கி கிடப்பார்கள்.

  எனவே தாழ்வுமனப்பான்மை கொண்டவர்கள் அவற்றை மனத்திருந்து விரட்டியடிக்கவேண்டும்.

 

எதிர்மறை சிந்தனை

   தந்தை மகனை அழைத்து  “உன்னிடம் ஒவியம் வரையும் திறமையிருக்கிறது, பக்கத்து தெருவில் உள்ள சந்தானத்திடம் சென்று ஒவியம் கற்றுக் கொள், அவரிடம் பேசிவிட்டேன் இன்று மாலை வரச் சொன்னார் உடனே போஎன்றார்.

    “அவர் வீட்டில் இல்லா விட்டால்” & இதுமகன்,

    “இருப்பார் போஇது தந்தை

    “அவருக்கு சொந்த வேலையிருந்து வெளியே போய் விட்டால்” &மகன்  

    “உனக்காக காத்திருப்பார்” & இது அப்பா,

    “உங்களிடம் சொன்னதை அந்த ஓவியர் மறந்து போயிருந்தால்” & இது மகன்,

இந்த உரையாடலில் தந்தையிடம் மகன் பேசியயாவும் எதிர்மறை சிந்தனை ஆகும். ஒருவரிடம் எதிர்மறை சிந்தனை நிரம்பியிருந்தால் பிறர் தரும் விளக்கங்களை ஏற்றகாமல் தன் சிந்தனை போக்கிலேயே செல்வார்.

  “நண்பா! சீக்கிரம் வீட்டிற்கு செல்லவேண்டும் உடனடியாக வரும் இரயிலில் செல்வோம்என்கிறான் ஒருவன்.

  “இரயில் நடு வழியில் நின்று விட்டால் என்கிறான் நண்பன். இரயில் குறித்த நேரத்தில் பத்திரமாக குறிப்பிட்ட இடத்தில் போய்ச் சேருவோம்

என்ற நம்பிக்கையோடுதான் நம் பயணம்  தொடர்கிறதுஅதுதான் இயல்பான சிந்தனை கூடஆனால்

  ‘’இரயில் நின்றுவிட்டால்’’

  “இரயில் விபத்து ஏற்பட்டால்

 ’ “இரயிலில் இறங்கும் போது தவறிவிழுந்து விட்டால்

என்றெல்லாம் சிந்திப்பது எதிர்மறை சிந்தனையாகும். இவ்வாறாக தேர்வில் தோல்வி அடைந்து விட்டால், தேர்தலில் தோல்வி அடைந்து விட்டால், எடுத்த முயற்சியில்  வெற்றி பெறாவிட்டால் என எதிர் மறையாக சிந்திக்கக் கூடாது. சிந்தித்தால் வாழவே முடியாதுமுன் எச்சரிக்கை தவறல்ல, அந்த முன் எச்சரிக்கை எதிர்மறை சிந்தனையைக் கொண்டிருக்கக்கூடாது.

  நம்பிக்கை வறட்சி வந்து விட்டால் மனம் முழுவதும் எதிர்மறை சிந்தனை இருக்கும் நம்முடைய  மூளையில் (12 பில்லியன்)  (1 பில்லியன்= 100 கோடி) அதாவது 1200,00,00,000 செல்கள் இருக்கின்றனஎதிர்மறை சிந்தனைக்கு எதிராக நமது முளைக்குள்ள ஒவ்வொரு கணமும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதுஇந்தப் போராட்டத்தில் எதிர்மறை சிந்தனை வெற்றி பெறுமானால் தன்னம்பிக்கைக்கு இடம் இல்லாமல் போய்விடும். நம் மனத்தில்  தன்னம்பிக்கை வளர வேண்டுமானால் எப்பொழுது பார்த்தாலும் எதிர்மறையாக நினைப்பதை கைவிட வேண்டும்.

ஐயப்பாடு

 

  “சந்தேகம் வந்துவிட்டால் சந்தனமும் சகதியடா!

  என்தேகம் அழிந்து விட்டால்

  எறும்புக்கும் இளப்பமடா!”

என்று பள்ளிப் பருவத்தில் நானெழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது

  சந்தேகம் ஒருவனை என்ன பாடுபடுத்திவிடும் என்பது நமக்கு தெரிந்ததுதான் இந்த சந்தேகம் தன்னையும் அழித்து விடும்பிறருக்கும் தொல்லைதரும்.  “சந்தேக கோடு & அது

  சந்தோச கேடு

என்கிறார் கவியரசர் கண்ண தாசன். சந்தேகம் ஒருவர் மனத்தைப் பற்றிக் கொண்டால் இது ஒரு மனநோயாக மாறிவிடுகிறது. இந்த சந்தேக மனப்பான்மை கொண்டவர்கள் தன்னால் அதைச் செய்ய முடியுமாஇதைச் செய்ய முயுமா? என்றெல்லாம் சந்தேகிப்பார்கள். மற்றவர்களால் செய்ய முயுமா? என்று பிறரையும் சந்தேகிப்பார்கள்.

  ஒரு செயலை செய்து முடிக்கும் ஆற்றலும் அறிவும் இருந்தும் கூட அவற்றை உணராமல் சந்தேகிப்பார்கள்இப்படிப்பட்டவர்கள் மற்றவர்களுடைய திறமையும் சக்தியையும் கூட சந்தேகிப்பவர்களாக இருப்பார்கள்இத்தகைய சந்தேக மனப்பான்மை இருந்தால் அது தன்னம்பிக்கைக்கு இடையூறாக இருக்கும்.

  தன்னம்பிக்கை உடையவர்களிடம் சுறுசுறுப்பு இருக்கும். சுறுசுறுப்பு இல்லாமல் சோம்பேறியாக இருந்து விட்டால் சோறும்  கிடைக்காது, துணியும் கிடைக்காதுஒரு செயலை திட்டமிட்டபடி செயல்படுத்த முடியாது. எந்த ஒரு செயலையும் காலம்  தவறாமலும் காலம் தாழ்த்தாமலும்  பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி போடாமலும் செய்யவேண்டும் என்றால் அவரிடம் சோம்பல் இருக்ககூடாது எந்த ஒரு செயலையும் இன்றே செய்ய வேண்டும். அதுவும் இப்போதே செய்ய வேண்டும். இதற்கு தன்னம்பிக்கையே தேவைசோம்பலை நெருங்கவிடக்கூடாது.

  ஒருவர் வாழ்க்கையில் தன்னம்பிக்கையை பெற நினைக்கும் போது பல்வேறு தடைகள் வரலாம்இந்த தடைகளை வெல்லும் மனோபாவத்தை தரும் வாழ்க்கை சம்பவங்கள் பிறரது வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் அவற்றை தெரிந்து கொள்வது தன்னம்பிக்கைக்கு எதிரான தடைகளை தகர்க்கும்.

 

லூயிஸ் பிரைல்

  கண் தெரியாத மக்கள் இன்றைக்கு முழுவதும் படிப்பறிவு பெற காரணமாய் இருந்த லூயிஸ் பிரைல் வாழ்க்கை நமக்கு பெரும் உத்வேகத்தையும் தன்னம்பிக்கையும் ஊட்டும்சின்னஞ்சிறு வயதில் லூயிஸ் பிரைல் ஒரு ஊசியால் தோல் ஒன்றைத் தைக்க முயலும் போது ஊசி கண்ணைக் குத்திவிட்டதுமருத்துவர் பலரிடம் காண்பித்தும்  பலன் இல்லைஒரு கண்ணில் பார்வை இழந்த சிறுவன் இன்னொரு கண்பார்வையையும் நாளடைவில் இழந்து விட்டான்இனி வாழ்நாள் எல்லாம் இருளில் வாழ வேண்டிய நிலையை உணர்ந்து கொண்டான்ஐம்புலன்களில் ஒன்று போனாலும் மற்ற புலன்களைப் பயன்படுத்தி அறிவாற்றலைச் சேர்த்துக் கொள்ளத் தொடங்கினான். வெளி உலகத்தை நன்கு தெரிந்து கொண்டான். பார்வை இல்லாததால் பள்ளியில் எழுத்துக்களை அவனால் பயில முடியவில்லையோசித்து பார்த்து அவன் ஆசிரியர் ஒரு வழி கண்டுபிடித்தார்ஒரு குச்சியில் எழுத்து வடிவம் செய்து லூயிஸ் அதை தொட்டுணர்ந்து கற்றுக் கொள்ளச் செய்தார்பத்து வயதானபோது பாரிஸில் இருந்த பார்வையற்றோர் பள்ளிக்கு லூயிஸ் சென்றான். அங்கே ஒரு பெரிய புத்தகம் இருந்ததுகையால் தொட்டுப்பார்த்து எழுத்துக்களைப் படித்தான்இப்படி சில புத்தகங்களைப் படித்ததோடு வேறு புத்தகங்களையும் கேட்டான்அங்கு வேறு புத்தகங்கள் இல்லை. அப்படி புத்தகம் உருவாக்கும் செலவும் அதிகமாக இருந்தது.

  லூயிஸ் பார்வையற்று இருந்தபோது பியோனா வாசிக்கத் தெரிந்து கொண்டான்ஒருநாள் ராணுவ கேப்டன் ஒருவர் அந்தப் பள்ளிக்கூடத்திற்கு வந்தார்அவர் இரவில் இருளில் எழுதிப் படிக்கிற ஒரு முறையை அந்த ஆசிரியர்களுக்கும் பார்வையற்றவர்களுக்கும் எடுத்து காட்டினார்புள்ளிகளையும் கோடுகளையும் கொண்டு ஒரு மரப்பலகையில் இரவு எழுத்து முறையை உருவாக்கி இருந்தார்அவரது படைவீரர்கள் இருட்டிலும் கூட தகவலைப் படிப்பதற்கு அந்த முறை பயன்பட்டது.   இதே முறையில் பார்வையற்றவர்கள் கூட படிக்க முடியும்புள்ளிகளைக் தொட்டுப் பார்த்து பள்ளி மாணவர்கள் படித்து மகிழ்ந்தனர்

  ஆனாலும் இந்த முறையில் பல இடர்பாடுகள் இருப்பதை லூயிஸ் புரிந்து கொண்டான்தனக்கென்று புதிய முறையை உருவாக்க உறுதிகொண்டான். மரப்பலகையில் துளைகள் இட்டு எழுத்து முறையை உருவாக்கிய அந்தக் கேப்டனின்  யோசனையை பயன்படுத்தி ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டான். அவனுடைய  முயற்சியில் வெற்றி பெற்ற போது அவனுக்கு வயது 15.

   லூயிஸ் பிரைல் கண்டுபிடித்த இந்த முறை, உலகம் முழுவதுமுள்ள பார்வையற்றோர் எழுத்தறிவு மற்றும் வாசிப்பு திறன் பெற உதவியது.

  இரண்டு கண்கள் பறி போன நிலையில் தானொரு குருடன் என்ற தாழ்வு மனப்பான்பை  வந்திருந்தால், இனிமேல் படிக்க முடியாது என்று நினைத்திருந்தால், தன்னம்பிக்கைத் தடைபட்டு போயிருக்கும் இல்லையா?

  வாழ்க்கையில் முன்னேற்றமும் வெற்றியும் கண்டு, சாதனை புரிய வேண்டும் என்று நினைப்பவர்கள் தன்னம்பிக்கைக்கு எதிரான தடைகளைத் தகர்த்து  எறிந்து விட்டுத் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

                         *   *   *   *   *

 

 

8. தன்னம்பிக்கையை வளர்க்கலாம் 

 

  ருவர் தன்னம்பிக்கையை எந்தக் காலத்திலும் வளர்த்துக் கொள்ளமுடியும். தங்களது உடல் குறைகளை எல்லாம் பொருட்படுத்தாமல் தன்னம்பிக்கையோடு முன்னேறிய எண்ணற்ற பலரது வாழ்க்கை வரலாறுகள் நாம் தெரிந்து கொள்ளும் போதே நமக்குத் தன்னம்பிக்கை தரக்கூடியன. மாபெரும் இசை மேதை பீத்தோவன் உருவாக்கிய இசை இந்த உலகத்தையே மயக்கி வருகிறது.

  “செம்மணிவயல்என்ற ரஷ்ய நாவலின் இறுதிப்பகுதி மனத்தை மயக்கும் பீத்தோவன் இசை சிறப்போடு கதை முடியும். அந்த இசையை கேட்டு கதாநாயகி கண்ணீர் வடிப்பாள். அந்தப் பகுதியைப் படிக்கும் வாசக நெஞ்சங்கள் பனிபோல் உருகும்.

  இந்த பீத்தோவன் தான் உருவாக்கிய அற்புத இசையை ரசித்திருக்கிறாரா? இல்லை. ஏன் தெரியுமா? அவர் காது கோளாதவர்.

  மாபெரும் கவிஞன் மில்டன் தனது மகத்தான படைப்பானஇழந்த சொர்க்கம்எழுதிய போது மில்டனுக்கு பார்வை கிடையாது.

  உலகப் புகழ் பெற்ற மெகஸ்தனிஸ், கடற்கரையில் நின்று கொண்டு வாயில் கூழாங்கற்களை அடக்கிக் கொண்டு கடல் அலைகளின் இரைச்சலை மீறி உரக்கப் பேசி பழகினராம். ஏன் தெரியுமா? சரளமாய் பேசமுடியாத திக்குவாய். இந்த குறைபாட்டை வென்று மாபெரும் பேச்சாளனாக மாறினார் என்றால் அதற்கு காரணம் அவரிடம் காணப்பட்ட தன்னம்பிக்கை. அது எவ்வளவு வலிமையானது என்பதை எண்ணிப் பாருங்கள்.

 

·         .1490 ஆம் ஆண்டு ஸ்பெயின்ராய்ல் கமிட்டி ஆசியாவுக்கு கடல் வழி கண்டுபிடிப்பதுசாத்தியமே இல்லை. மேலைக் கடலில் முடிவற்று பயணம் செய்து வெற்றி பெற முடியாது என்று அறிவித்தது. அடுத்த ஒரு வருடத்தில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் மேலைக் கடலை வென்றார்.

 

·         குதிரை வண்டியை விட வேகமாக செல்லும் இரயில் வண்டியைக் கண்டுபிடிக்க முடியாது என்று 1825 ஆம் ஆண்டு லண்டன் காலாண்டு இதழொன்று எழுதியது. ஆர்.எல். ஸ்டீவன்சன் இரயில் இஞ்சினை கண்டுபிடித்தார்.

 

·         விமானம் கண்டுபிடிக்கும் முயற்சி வீண் என்று 1903 ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் ஏடு எழுதியது. ரைட் சகோதரர்கள் வெற்றிகரமாக முதலாவது விமானம் செய்து வானில் பறந்து காட்டினார்கள்.

·         1948 ஆம் ஆண்டுசையின்ஸ் டைஜஸ்ட்இதழ் நிலாவுக்கு மனிதன் போக முடியாது என்று எழுதியது. 1969 நிலவில் ஆம்ஸ்ட்ராங் காலடி எடுத்து வைத்தார். சிலர் நடவாதென்பார். நடந்து விடும். காரணம் நடத்திக் காட்டியவர்களின் தன்னம்பிக்கை.

 

தன்னம்பிக்கை வளர சுயக்கட்டுப்பாடு தேவை

  சுயக்கட்டுபாடு உடனடியாய் வந்து விடாது. இதை எவரிடம் கேட்டுப் பெற முடியாது. சுயக்கட்டுபாட்டை ஏற்படுத்திக் கொள்வது சற்று சிரமம் என்றாலும் தகுந்த பலன் அளிக்கக்கூடியது. மாணவர்கள் பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பியதும் முதலில் வரவேற்பது தொலைக்காட்சி தான். மாணவன் தன் பள்ளிக்கூட கடமைகளை மறக்கும் அளவுக்கு அவனை ஈர்க்கும் மந்திர சக்தி தொலைக்காட்சிப் பெட்டிக்கு உண்டு. கையில் ரிமோட் கிடைத்தால் போதும் அலைவரிசை மாற்றும் விளையாட்டு ஓய்வில்லாமல் தொடரும். பாடம் படிக்க வேண்டும் என்பதே மறந்து விடும். வீட்டுப் பாடம் எழுத வேண்டியது மறந்து போகும். அதன் பிடியிலிருந்து பிள்ளைகளை மீட்டுப் படிக்க வைப்பதற்கு பெற்றோர்களின் மிரட்டல் பயன்படாது. அதை விட பயனுள்ள வழி பிள்ளைகளைத், தங்களுடைய பள்ளிக்கூட கடமைகளை உணரச் செய்வதாகும். அப்படி உணர்ந்தவர்கள் பள்ளிப்பாடம் படிக்கவும் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை ஒழுங்கு படுத்திக் கொள்ளவும் முடியும். பிள்ளைகளிடம் இத்தகைய கட்டுப்பாடு வந்துவிட்டால்   . பிள்ளைகளின் படிப்பு குறித்த அனாவசியமான டென்சன் இருக்காது. தொலைக்காட்சி குறிப்பிட்ட நேரத்தில்தான் பார்க்க வேண்டும் என்ற மனக்கட்டுப்பாடு மாணவர்களுக்கு தேவை. இவ்வாறு தன்னை கட்டுபடுத்திக் கொள்ளும் பழக்கத்தை ஒருவரது மனம் பற்றிக் கொள்வதிலிருந்தே சுயக்கட்டுபாடு தோன்கிறது. மன உறுதி, உணர்ச்சிகள், மனச்சாட்சி காரணகாரியம் பார்த்தல், நினைவாற்றல் மற்றும் கற்பனைவளம் ஆகிய ஆறு காரணங்களினால் சுயக்கட்டுபாட்டை பயன்படுத்தினாள் அவை நம் கட்டுபாட்டுக்கும் இருக்கும்

 

சுயக்கட்டுப்பாட்டின் தேவையும், பயனும் 

  1.  உடலும் உள்ளமும் சுதந்திரமாக இருக்க உதவுகிறது.

  2.  அதிகாரமும் புகழும் விரும்புகிறவர்களுக்கு அவசியம் தேவைபடுகிறது.

  3.  பொருளாதர செல்வங்களை அடையவும் சுயக்கட்டுபாடு உதவுகிறது.

  4.  திட்டவட்டமான குறிக்கோளை நோக்கி மனதைச் செலுத்த சுயக்கட்டுபாடு தேவை.

  5.  திட்டங்களை செயல்படுத்தவும் 

  6.  மனத்தை முழுக்கட்டுபாட்டில் வைத்து விரும்பியதை அடையவும் உதவுகிறது.

  7.  மனச்சாட்சியை ஒத்துழைக்க வைத்து வழிக்காட்டச் செய்ய சுயக்கட்டுபாடு தேவைப்படுகிறது 

  8.  தலைமைப் பொறுப்பிலிருக்கும் அனைவருக்கும் தேவை சுயக்கட்டுபாடு

  9.  படைப்பாக்க கற்பனை வளத்தைப் பெருக்குகிறது.

  10. அச்சத்தை அகற்றுகிறது.

  11.  சந்தேகத்தை விரட்டுகிறது.

  12. முடிவெடுக்க முடியாமல் தவிப்பதைத் தவிர்க்கிறது.

  13. தன்னம்பிக்கையை வளர்க்கிறது.

 

மனநிலை

  தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு மனோபாவங்களில் மாறுதல்களை ஏற்படுத்த வேண்டும். வீழ்ச்சியுற்றுக் கிடக்கும் மனம் எழுச்சி பெற வேண்டும். என்னால் முடியாது என்ற மனோநிலையை மாற்றிக் கொண்டு என்னால் முடியும் என்ற மனோநிலைக்கு வரவேண்டும். தளர்ந்த நிலையை மாற்றி உற்சாகத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.உற்சாகமான மனோபாவம் தன்னம்பிக்கையை கைநீட்டி வரவேற்கும். உற்சாகமான மனநிலை இல்லாமல் எந்த வெற்றியும் அரும் பெரும் சாதனைகளும் சாத்தியமில்லை. குழந்தை எழுந்து நடக்கும் போது கீழே விழுந்தால் எழுந்து நடக்கச்சொல்லி உற்சாகப் படுத்தும் பெரியவர்கள், குழந்தை எழும் பின் விழும் மீண்டும் எழும் என்று உறுதியாக நம்புவதால் நடக்கும் முயற்சியில் குழந்தை தோற்று விடும் என்பதை நம்புவதே இல்லை. ஆனால் ஓர் இளைஞன் எடுத்த முயற்சியில் தோல்வி கண்டுவிட்டால் அதே பெரியவர்கள் தோல்வி அடைவான் என்று முன்பே எனக்கு தெரியும் என்கிறார்கள். இது தவறான மனோபாவம். விழுந்த குழந்தை எழுந்து நடப்பது போல் தோல்வியுற்றவர்கள் வெற்றி பெற முடியும். இதற்கு தோல்விகண்டவனைப் பார்த்துதம்பி தோல்வி ஒன்றும் நிரந்தரமானதல்ல, உன்னால் வெற்றி பெற முடியும்என்ற நம்பிக்கை ஊட்டினால் தோல்வி கண்ட இளைஞன் வெற்றி பெற முடியும். இந்நிலைக்கு பெரியவர்கள் தங்கள் மனோநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

  ‘விழுந்தவன் விழுந்தவன் தான் என்பது ஒரு மனோபாவம்

  விழுந்தவன் எழுவான், வெற்றி பெறுவான் என்பது இன்னொரு மனோபாவம்.

  மனோபாவங்கள் மாறுபடும் போது அதற்கு ஏற்ப தன்னம்பிக்கையும் வளர்கிறது.’ 

 ஆங்கிலப் பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவன் தன்னால் இந்த முறை ஆங்கிலத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாது என்று எண்ணுவதை கைவிட்டுத் தேர்ச்சி பெறுவதற்குரிய மதிபெண்கள் பெறமுடியும் என்று தன்னுடைய மனோநிலையை தயார் செய்து கொண்டு ஆங்கிலப் பாடத்தை பயில்வதும் பின்னர் அதே பாடத்தில் கூடுதல் மதிப்பெண் பெறமுடியும் என மாணவன் தன் மனோபாவத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

  தனது மனோபாவத்தை படிப்படியாக தன்னம்பிக்கையை நோக்கிச் செலுத்தும்போது மனோபாவ மாறுதல் தன்னம்பிக்கை வளர்க்கும் வழியாக அமைந்து விடுகிறது. முன்முயற்சி

  தன்னம்பிக்கை மிகுந்தவர்கள் எந்த ஒரு செயலையும் பிறர் செய்யட்டும் என்று காத்திருக்க மாட்டார்கள். முன் முயற்சி எடுப்பது தன்னம்பிக்கையாளர்களின் செயல் முயற்சி ஆகும். இந்த முன்முயற்சியானது திட்டவட்டமான குறிக்கோளை நோக்கி அழைத்து செல்லும், காலம் தாழ்த்துதல், மெத்தனப் போக்கு, சோம்பேறித்தனம் ஆகியவற்றை விரட்டியடிக்க இந்த முன் முயற்சி எடுக்கும் பண்பு பயன்படுகிறது.

 

திட்டவட்டமான இலக்கு

  நமது குறிக்கோள் இன்னதென்று தெளிவாக வரையுறை செய்து கொள்ள வேண்டும். குறிக்கோள் தெளிவில்லாத போது, அது திசை தெரியாத பயணம் போல் ஆகிவிடும் ஒரு செயலில் ஈடுபடும் போது தடைகளும் குறுக்கீடுகளும் தடுமாற்றமும் வேதனையும் ஏற்படுவது தவிர்க்க முடியாது. இவற்றை மீறி குறிக்கோளை அடைய வேண்டுமானால் அந்த குறிக்கோள் திட்டவட்டமானதாக இருக்க வேண்டும். அதை நோக்கியே ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும். இது தன்னம்பிக்கையை வளர்க்கும்.

 

தெளிந்த சிந்தனை

  குறிக்கோள் இதுவென முடிவுசெய்த பின் குழப்பமான மனநிலை கூடாது. தெளிந்த நீரோட்டம் போல் நமது சிந்தனை இருக்க வேண்டும் சிந்தனையில் தெளிவு இல்லையென்றால் தடுமாற்றம் மேலோங்கி நிற்கும். தடுமாறும் உள்ளத்தில் மன உறுதி இருக்காது. தன்னம்பிக்கை இருக்காது. தன்னம்பிக்கை வளர்க்க தெளிந்த சிந்தனை அவசியம்.

 

திடநம்பிக்கை

  திட்டவட்டமான குறிக்கோள் தெளிவான சிந்தனை இருப்பினும் எடுத்த காரியயத்தை முடித்தாக வேண்டும் என்ற மன உறுதி தேவை. செயலை நிறைவேற்றுவோம் என்ற திடமான நம்பிக்கை இருந்தால் தான் குறிக்கோளை நோக்கி முன்னேற முடியும். திட நம்பிக்கை இல்லாவிட்டால் குறிக்கோளை அடைவது தடைபடும். திட நம்பிக்கை இருப்பதன் மூலம்  தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள முடியும்.

 

கடினஉழைப்பு

  திட்டவட்டமான குறிக்கோளை நோக்கிச் செல்ல கடின உழைப்புத் தேவை. கடின உழைப்பை மேற்கொள்ளும் போது கூடவே தன்னம்பிக்கை வளரும்.

 

படிப்பினை

  வாழ்க்கையில் வெற்றி தோல்வி எந்த நேரத்திலும் வரக்கூடியது. இரண்டையும் சமமாக கருத வேண்டும். அதாவது வெற்றியைக் கண்டு களிப்படையவும் கூடாது. தோல்வியை கண்டு துவண்டு விடவும் கூடாது.

  தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அறிந்து கொண்டால் அவற்றை நீக்கி வெற்றியை நோக்கி முன்னேற முடியும். எனவே தோல்வியிலிருந்து கற்றுக் கொள்வது முக்கியமானது. கற்றுக் கொண்டதும் புத்துணர்ச்சியோடு தொடங்கி வெற்றி பெறமுடியும்.

 

முகமலர்ச்சி வேண்டும்

  “அடுத்தது காட்டும் பளிங்கு போல நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்என்பார் திருவள்ளுவர். அகத்தில் குழப்பங்களும் தடுமாற்றங்களும் மிகுந்திருக்கும் போது அவை ஏற்படுத்துகின்ற கலவரத்தை முகம் பிரதிபலித்துவிடும். கடுமை முகத்தில் மட்டுமல்ல வாய் சொற்களிலும் வந்து விழும்.

  நடையிலும், பாவனையிலும் இனிய தன்மை வறண்டு போயிருக்கும். இத்தகைய ஒருவர்

இனிய சுபாவத்துடன் பிறரோடு பழக முடியாது. ஒரு குறிக்கோளை நோக்கி முன்னேற தன்னை சுற்றி இருக்கிறவர்களின் ஆதரவும் தோழமை உறவும் தேவைபடுகிறது.

  இனிய சுபாவமானது ஒருவர் எதை நோக்கிச் செல்கிறாரோ அதனை அடைவதற்கு உதவுகிற சக்திகளைத் திரட்டி தரும். இதனால் இவருக்கு கிட்டும் சிறுசிறு முன்னேற்றமும் தன்னம்பிக்கையை வளர்க்கும். இனிய சுபாவமும் தன்னம்பிக்கை வளர்க்கும்.                                                       

 

                                                                *   *   *   *   *

 

 

    9. நீங்கள் தன்னம்பிக்யையாளராக

          சிறந்து விளங்க

 

  ன்னம்பிக்கை மிகுந்தவராக இருந்திட வேண்டும் என்றால் சில நடைமுறைத் திட்டங்களைச் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளலாம். சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து, தவறு சிறிசா இருக்கையில் திருத்திக்கோ! தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா  அது திரும்பவும் வராம பார்த்துக்கோ என்று மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் கூறுவார்.

  நமது எண்ணங்களை நாமே பரீசிலனைக்கு உட்படுத்தி கொள்ளவேண்டும். நமது சிந்தனை எந்த வழியில் செல்கிறது என்பதை கண்காணிக்க வேண்டும். சரியான வழியில் ஆக்கபூர்வமான வழியில் செல்லவேண்டும் என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

  நான் திறமைசாலி, நான் தன்னம்பிக்கை மிக்கவன், நான் அறிவாளி, எப்போதும் ஊக்கமுடையவன். உத்வேகம் மிகுந்தவன் என்று சொல்லிக் கொள்ளுங்கள். இது தன்னம்பிக்கையை வளர்க்கும்.

  அப்படி தன்னம்பிக்கையோடு சிந்திக்கும் போது உங்களால் செய்து முடிக்க, எதிலெல்லாம் வெற்றி பெறமுடியுமோ அதையெல்லாம் முயன்று பார்க்க முடிவு செய்யுங்கள்.

  எடுத்துக்காட்டாக எதிர்காலத்தில் நீங்கள் சிறந்த எழுத்தாளராக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

  1. உங்கள் மொழிப்புலமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

  2. சொல்ல வந்த கருத்தை தெளிவாகச் சொல்லும் பழக்கம் வேண்டும்.

  3. எழுதும் போது சரியாக வருமா என்று தடுமாற்றம் கூடாது.

  4. ஆழமான அறிவாற்றலைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  5. தொடர்ச்சியாக உங்கள் எழுத்துக்கள் பத்திரிகைகளில் அல-லது புத்தக வடிவில் வெளிவந்து கொண்டிருக்க வேண்டும்.

  இவ்வாறே பேச்சாளராக வேண்டும் என்றால் மொழி வளம், தெளிவான குரல் வளம், நடுக்கமின்மை, விஷய ஞானம், பேச்சுப் பயிற்சி (மேடையில்) தேவை.

  இவ்வாறே விஞ்ஞானியாக, வர்த்தகராக என உங்கள் இயல்புக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப சாத்தியமானதைச் செயல் படுத்துவதை நோக்கி சிந்திக்கலாம். இப்படிச் செய்யும்போது உங்கள் தன்னம்பிக்கை மேலும் வளரும்.

  சிந்தனை செயலுக்கு வரும் போது ஏற்படும் பெருமிதமும் பூரிப்பும் தன்னம்பிக்கையாளனுக்கு அவசியம்.

 

காலமே உயிர்:

  காலம் பொன் போன்றது என்பார்கள். பொன்னை விலை கொடுத்து வாங்கி விடலாம். உயிரை இப்போதைக்கு வாங்குவது சாத்தியமில்லை. உயிர் போனாலும் காலம் போனாலும் போனது போனதுதான். எனவே காலத்தை விரயமாக்காமல் ஒரு செயலில் ஈடுபடும் போது உங்கள் செயல்களில் தன்னம்பிக்கை இருக்கும்.

  காலத்தின் முக்கியத்துவம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் யாரிடம் தெரிந்து கொள்ளலாம். தேர்வில் தோற்றுவிட்டால் ஒரு வருடம் வீணாகிவிடுமல்லவா அப்படி தோல்வி அடைந்த மாணவனிடம கேளுங்கள்! ஒரு வருடம் என்பது தனது மாணவப் பருவத்தில் எவ்வளவு முக்கியமானது என்பது அவனுக்கு மிக நன்றாய் புரிந்திருக்கும்.

  அன்னையின் வயிற்றில் கருவாகி குழந்தை உருவாகி பிறந்திட பத்து மாதம் தேவைபடுகிறது. அதில் ஒருமாதம் குறைந்து குழந்தை சீக்கிரம் பிறந்துவிட்டால் குறைபிரசவம் என்பார்கள். அதனால் ஏற்படும் குறைபாடுகள், அவதிகள் அந்த தாய்க்குத் தான் நன்றாக தெரியும். அந்தத்தாயிடம் கேளுங்கள் ஒரு மாதத்தின் அருமையை, நாளிதழ்கள், மாத இதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு வார காலத்தின் முக்கியம் வார இதழில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்குத் தெரியும்.

   காதலர்கள் ஒருவர் மற்றவருக்காக காத்திருக்கும் போது ஒரு மணி நேரம் காத்திருந்தாலே ஓராண்டு வீணாகிவிட்டது போல் துடிப்பார்கள். நேரத்தின் கடுமையை அவர்களிடம் கேளுங்கள்ரயிலுக்கு நேரமாச்சு, பள்ளிக்கு நேரமாச்சு விளையாட்டுக்கு நேரமாச்சு என்று துடிப்பவர்களுக்கு ஒரு நிமிடத்தின் முக்கியம் நிச்சயம் தெரிந்திருக்கும்.

  ரயில் தண்டவாளத்தை அல்லது பஸ் நெடுஞ்சாலையைக் கடக்கும் போது, ரயில், பஸ், கார், மோட்டார் சைக்கிள் எனப் பல வாகனங்களால் ஏற்படும் விபத்தை ஒரு நொடியில தவிர்த்து அப்பாடா உயிர் பிழைத்தோம்! என்று பெருமூச்சு விடுகிறார்களே அவர்களிடம் கேளுங்கள். ஒரு வினாடியின் அருமை பெருமையை!

  ஒலிம்பிக் போன்ற விளையாட்டு போட்டிகளில் அந்த ஒரு நொடியின் சிறிய பகுதி கூட ஒருவரது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். அப்படி வென்றவர்களுக்கும் அல்லது தோற்றவர்களுக்கும் அல்லது அதை அறிந்து தவிப்பவர்களுக்கும் ஒரு நொடியின் மிகச் சிறிய பகுதியின் முக்கியத்துவம் தெரிந்திருக்கும்.

  எனவே காலத்தின் அருமை அறிந்து செயல்பட வேண்டும். காலத்தின் அருமை அறிந்தவர்கள் அதிகாலையில் எழப் பழகிக் கொள்ளவேண்டும். சோம்பேறிகள் எழ மாட்டார்கள்.

 

ஊக்குவிப்பு தேவை

 

  பெற்றோர்கள் அல்லது நண்பர்கள் ஒருவரை அடிக்கடி கேலியும் கிண்டலும் செய்து வந்தால் கேலிக்கு இலக்கானவர்கள் வெட்கிப் போவார்கள். திரும்ப திரும்ப அவமானப்பட்டால் குற்ற உணர்வுடன் இருப்பார்கள்.

  இந்த ஆபத்திலிருந்து நாம் விலகிக் கொள்ளத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பெற்றோர் தமது குழந்தைகளைச் சகிப்புத்தன்மை கொண்டவர்களாக வளர்த்தால், அவர்கள் பொறுமைசாலிகளாக வளர்வார்கள். புகழ்ந்தால் பிறரை பாராட்டக் கூடியவர்களாக வளர்வார்கள்.

  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்தினால் அவர்களிடம் தன்னம்பிக்கை வளரும். எனவே நல்வழியில் செல்ல நல்ல செயல்களில் ஈடுபட நல்ல சிந்தனை செய்ய பெற்றோரும் உற்றாரும் நண்பர்களும் ஊக்குவித்தால் அவரோடு ஒட்டி உறவாடும் உள்ளங்களில் தன்னம்பிக்கை ஒளிபாயும்.

 

உடல் நலம் பேன வேண்டும்

 

  தன்னம்பிக்கையாளர்கள் நோஞ்சனாக இருக்கக் கூடாது. உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். போதுமான நலமுடன் இருக்கிறேன் என்ற உணர்வுடன் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உள்ளமும் ஆரோக்கியமான உடலும் தன்னம்பிக்கையாளர்களுக்கு மிக முக்கியம். நல்ல உணவு உட்கொள்வது அவசியம்.

  தன்னம்பிக்கையாளர்கள் அழுமூஞ்சியாக இருக்க கூடாது. மனம் விட்டு சிரியுங்கள். வாய் விட்டு சிரியுங்கள். நகைச்சுவை உணர்வுடன் பேசுங்கள்.

  நண்பர் ஒருவரிடம் கேட்டேன்: இந்தத் தொழிலில் வெற்றி பெற முடிந்ததே அந்த ரகசியம் சொல்லுங்கள் என்று.

  சரியான வாய்ப்யு கிடைத்தது தாவி விட்டேன் என்றார்!

  சரியான வாய்ப்பு எப்போது வரும் என்று ஆர்வமுடன் கேட்டேன்

  யாருக்கு தெரியும்! அது வரும் வரை கிளைக்கு கிளை தாவிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

  அதென்ன இப்படிச் சொல்கிறாரே என்று நினைத்தபோது கண்ணதாசன் சொன்னது (வனவாசத்தில்) ஞாபகம் வந்தது.

  சந்தர்பங்களுக்காக காத்திருக்க வேண்டும். சந்தர்ப்பங்கள் வரும்போது சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை கடற்கரை மணலில் ஒரு தகரப் பெட்டியுடன் மணலில் குழித்தோண்டி இரவில் தங்க இடமின்றி படுத்து கிடந்தாராம் கண்ணதாசன். அவர் நல்ல சந்தர்பங்களை எதிர்பாத்திருந்தார். எப்போது வருமென்று தெரியாமல் வந்தபோது பற்றிக் கொண்டார். கவியரசு கண்ணதாசனாக தமிழ் இலக்கிய உலகில் மகத்தான சாதனையாளராக காலத்தை வென்ற கவிஞனாக வாழ்வில் உயர்ந்தார்.

  தன்னம்பிக்கையாளர்கள் தனிமை பட்டுவிடக்கூடாது. பிறரை நேசிக்க வேண்டும். பிறரோடு இணக்கமாகப் பழக வேண்டும்.

 

     இனி என்ன செய்யலாம்?

 

  பதற்றமின்றி காரியங்களைச் செய்ய வேண்டும். பதற்றம் தணிக்கும் பயிற்சிகளில் ஈடுபடலாம். மூச்சை நன்றாக இழுத்து விட்டு அமைதிபடுத்தலாம் மனத்தை.

  வேலைநேரம், ஓய்வு நேரம், பொழுது போக்கு நேரத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். உடற்பயிற்சி, யோகாசனம் செய்யலாம். புத்தகம் வாசிப்பது, தொலைக்காட்சி, சினிமா, இசை போன்ற பொழுதுபோக்கில் மனத்தை செலுத்தி ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம். இதெல்லாம் செய்துவிட்டு ஒழுங்காகச் சாப்பிடாமல் இருந்து விடக்கூடாது.

  ஒரு காரியத்தில் நம்பிக்கை வைத்து செயல்படும் போது ஏற்படும் உற்சாகப் பெருக்குத் தன்னம்பிக்கையைத் தரும். ஒரு காரியத்ததை எவ்வாறு சிறப்பாகச் செய்வது எனக் கற்றுக் கொண்டாலும் தன்னம்பிக்கை வளரும்.

  ஒரு நேரத்தில் ஒரு வேலையில் கவனம் செலுத்துவது, ஒரு பிரச்சனையை நன்கு புரிந்து கொள்வது, கூர்ந்து விஷயங்களை கவனிப்பது, கேள்வி எழுப்புவது, எது அறிவீனம் என இனம் காணத் தெரிந்து வைத்திருப்பது, மாறுதல் வருவதை தவிர்க்க முடியாது எனப் புரிந்து கொண்டிருப்பது, தவறுகளை ஏற்று ஒப்புக் கொள்வது, திருத்திக் கொள்வது, கடுகடுப்பான முகம் காட்டாது புன்முறுவலுடன் இருப்பது போன்றவற்றின் மூலம் ஒரு காரியத்தை சிறப்பாக செய்யலாம். அவ்வாறு செய்வது தன்னம்பிக்கையை வளர்க்கும்.

  மகிழ்ச்சியை வளர்த்தால் பிறரிடம் பகிர்ந்து கொண்டால் அது பெருகும். எனவே எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க பழகிக் கொள்ள வேண்டும். பிறரது கருத்தைத் தெரிவிக்கும் போது எதிர்த்து பேசலாம். ஆனால் அது ஆக்கப்பூர்வமான யோசனையாக இல்லாமல் எதிர்மறையாகி விடக் கூடாது.

  பயிற்சியின் மூலம் எதிர்மறை சிந்தனை, தோல்வி மனப்பான்மையைப் போக்கலாம்ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் வெற்றிக்கு வழி அமைத்துக் கொடுக்கும்.

              

                        

 

-முற்றும் 

by Swathi   on 30 Sep 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா
தகைமை சால் தமிழறிஞர்கள் - பேராசிரியர் மறைமலை இலக்குவனார் தகைமை சால் தமிழறிஞர்கள் - பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
குலவை -தமிழர்கள் எழுப்பும் மங்கல ஒலி குலவை -தமிழர்கள் எழுப்பும் மங்கல ஒலி
வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா…? -பன்னாட்டுச் சிறப்புப் பட்டிமன்றம் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா…? -பன்னாட்டுச் சிறப்புப் பட்டிமன்றம்
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சதீஸ் குமார் வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சதீஸ் குமார்
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சுரேஷ் பாரதி வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சுரேஷ் பாரதி
வேர்மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ரவிச்சந்திரன் சோமு வேர்மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ரவிச்சந்திரன் சோமு
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ராமலிங்கம் கோவிந்தராஜ் வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ராமலிங்கம் கோவிந்தராஜ்
கருத்துகள்
22-Jan-2018 06:42:53 R. குப்பன் said : Report Abuse
அருமையான கட்டுரை. நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.