|
|||||
இதயத்தைக் காக்கும் செம்பரத்தை பூ(Hybiscus rosasinensis) சித்த மருத்துவர் முனைவர்.கோ.அன்புக்கணபதி |
|||||
![]() செம்பரத்தை மேகவெட்டை தீராப் பிரமியமும் வெம்பரத்தை வெள்ளை வழுவழுப்பும் - வெம்பும் பெரும்பா டிரத்தபித்த பேத மகற்றுங் கரும்பா மொருமயிலே காண். -தேரையார்
குருதி அழலைத் தனித்து இருதய நோயைத் தடுக்க வல்லது செம்பரத்தை மலர்.
ஒற்றைச் செம்பரத்தை ஒற்றை மூலிகையாகச் செம்பரத்தை மலர் பெரும்பாடு எனப்படும் மகளிருக்கு ஏற்படும் அதிஉதிரப் போக்கையும், (Menorrhoegia) வெள்ளைபடுதலையும் (Leucorrhoea), இரத்த அழுத்தத்தையும் (Blood pressure) சீர் செய்ய உதவுவது.
உட்கொள்ளும் முறை: 1) தோட்டத்தில் இச்செடிகள் இருந்தால் அன்றாடம் 10 மலரின் இதழ்களை மட்டும் பறித்து நன்றாக மென்று காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
2) நிறைய மலர்கள் இருந்தால் தினமும் மாலையில் அம்மலர்களைப் பறித்து ஒரு செய்தித்தாளை விரித்து அதன்மேல் இம்மலர்களைப் போட்டு வைத்தால் அவற்றை அழுகிப்போகாது. அப்படியே உலர்ந்துவிடும் (அ) பூசைஅறையில் சாமி படங்களுக்கு வைத்திருந்தால் அடுத்த நாள் காலையில் அம்மலர்களைத் தூக்கி எறிந்துவிடாமல் தினமும் செய்தித்தாள் மேல் போட்டுப் பரப்பி உலரவிடவும்.
மலர்கள் ஓரளவு சேர்ந்ததும் ஒருநாளைக்கு வெய்யிலில் உலர்த்தி உலர் அரவைக் கருவியிலிட்டு (மிக்ஸியில்)அரைத்து எடுத்து காற்று புகாமல் கண்ணாடிப் பாத்திரத்தில் சேமிக்கவும். தினம் ஒருதேக்கரண்டி (அ) ஒரு மேசைக்கரண்டி அளவு எடுத்து இரண்டு கோப்பைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து அரைக் கோப்பையாகக் சுண்டியதும் வடித்து அன்றாடம் காலையில் செம்பரத்தைத் தீநீராகக் குடிக்கலாம்.
செம்பரத்தை சுக்கு மல்லி பானகம்
தேவையான பொருட்கள் 1) செம்பரத்தைப்பூஉலர்ந்தது 100 கிராம் 2) தோல்சீவிய சுக்கு. 10 கிராம் 3). தனியா(கொத்தமல்லிவிதை) 50 கிராம்
இவற்றை உலர் அரவைக் கருவியிலிட்டு அரைத்து, சூரணமாச் சேமிக்கவும் 3 மாதத்திற்கு இதன் மருத்துவப் பண்பு குன்றாது. 3 மாதத்திற்கு ஒருமுறை புதிதாகத் தயாரிக்க வேண்டும். இந்த சூரணத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து தேனீர் தயாரிப்பது போல் தீநீர் தயாரித்து காலை மாலை குடிக்கலாம். நீரிழிவு இல்லாதவர்கள் மேற்படி சூரணம் தயாரிக்கும் போது பனங்கற்கண்டு. 25 கிராம் சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு சுவையான தீநீர் செய்து அருந்தலாம் செம்பரத்தை மிளகு சீரகம் பானகம் தேவையான பொருட்கள் 1) செம்பரத்தைப்பூ உலர்ந்தது 100 கிராம் 2) கரு (அ) குரு மிளகு. 5 கிராம் 3) நற்சீரகம். 50 கிராம்
இவற்றை உலர்அரவைக் கருவியிலிட்டு அரைத்து சூரணமாக சேமிக்கவும் 3 மாதத்திற்கு இதன் மருத்துவப் பண்பு குன்றாது. 3 மாத்த்திற்கு ஒருமுறை புதிதாகத் தயாரிக்க வேண்டும் இந்த சூரணத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து தேனீர் தயாரிப்பது போல் தீநீர் தயாரித்து காலை மாலை குடிக்கலாம். நீரிழிவு இல்லாதவர்கள் மேற்படி சூரணம் தயாரிக்கும் போது பனங்கற்கண்டு. 25 கிராம் சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு சுவையான தீநீர் செய்து அருந்தலாம். |
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
by Swathi on 28 Sep 2019 0 Comments | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|