|
|||||
அமெரிக்க நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்தியரை நியமிக்க அமெரிக்க செனட் சபை ஒப்புதல் ! |
|||||
அமெரிக்க நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்தியர் ஸ்ரீகாந்த் சீனிவாசனை நியமிக்க அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவின் சண்டீகர் மாநிலத்தில் பிறந்த சீனிவாசன் தற்போது அமெரிக்க அரசின் முதன்மை துணை சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்து வருகிறார். அவர் ஏற்கெனவே அந்நாட்டு உச்ச நீதிமன்ற
நீதிபதி சாண்ட்ரா டே ஓ கானரின் உதவியாளராகப் பணியாற்றினார். சீனிவாசனை கொலம்பியா மாவட்ட சர்க்யூட் நீதிபதியாக அதிபர் ஒபாமா கடந்த ஆண்டு நியமித்தார். அவரது நியமனத்திற்கு செனட்
நீதித் துறைக் குழு கடந்த வியாழன் அன்று ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்ததாக மேலவை ஒப்புதல் அளிக்க்கும் பட்சத்தில் அவர் கொலம்பியா மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்பார்.
அமெரிக்காவின் உயர்நிலை நீதிமன்றம் ஒன்றுக்கு நீதிபதியாக இந்தியர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.
அமெரிக்க நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்தியர் ஸ்ரீகாந்த் சீனிவாசனை நியமிக்க அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
|
|||||
by Swathi on 18 May 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|