LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம்

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அலு​வலக இயக்​குன​ராக பணி​யாற்​றும் தனது நெருங்​கிய நண்​பர் செர்​ஜியோ கோரை, இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக, அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் நெருங்​கிய நண்​பர் செர்​ஜியோ கோர். இவர் வாஷிங்​டனில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளி​கை​யில் உள்ள அதிபர் அலு​வலக இயக்​குன​ராக உள்​ளார். இவரை இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக அதிபர் ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார். இது குறித்து சமூக ஊடகத்​தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப்  "செர்​ஜியோ கோர் எனது மிகச் சிறந்த நண்​பர். இவர் பல ஆண்​டு​களாக என்​னுடன் இருப்​பவர். அவருக்கு பதவி உயர்வு அறி​விப்​ப​தில் மகிழ்ச்​சி​யடைகிறேன். அவர் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக பணி​யாற்​று​வார்.

மேலும் தெற்கு மற்​றும் மத்​திய ஆசிய விவ​காரங்​களில் அவர் சிறப்பு தூத​ராக​வும் செயல்​படு​வார். செர்​ஜியோ கோர் தலை​மையி​லான குழு, அமெரிக்க அரசுத் துறை​யில் நியமிக்க 4,000 அதி​காரி​களை குறித்த நேரத்​தில் தேர்வு செய்​தது.

தற்​போது அமெரிக்​கா​வில் அதி​காரி​களின் காலி பணி​யிடங்​களில் 95 சதவீதம் நிரப்​பப்​பட்​டுள்​ளது. எனது அதிபர் தேர்​தல் பிரச்​சா​ரத்​தி​லும், செர்​ஜியோ கோர் சிறப்​பாக பணி​யாற்​றி​னார், மிகச் சிறப்​பாக விற்​பனை​யாகும் எனது புத்​தகத்தை அவர்​தான் வெளி​யிட்​டார். எனது நிர்​வாகத்​தில் செர்​ஜியோ கோரின் பங்கு முக்​கிய​மானது. நான் நம்​பும் ஒரு​வர் எனது கொள்​கையை பரப்​பி, அமெரிக்​காவை மீண்​டும் சிறப்​பாக்​கு​வார். அவர் சிறந்த தூத​ராக செயல்​படு​வார். அவருக்கு வாழ்த்​துகள்" என்று தெரிவித்துள்ளார்.  

 

by hemavathi   on 27 Aug 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள்  -முனைவர்.சுபாஷினி இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள் -முனைவர்.சுபாஷினி
அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்!  கூட்ட அறிக்கை(Minutes Of Meeting) அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்! கூட்ட அறிக்கை(Minutes Of Meeting)
இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது -  ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது - ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர்
ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ் வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ்
ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம் ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம்
2025 இறுதிக்குள் ஒரு  மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம் 2025 இறுதிக்குள் ஒரு மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம்
அமெரிக்க நாட்டுக்கான தபால் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா அமெரிக்க நாட்டுக்கான தபால் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.