பாலிவுட் நடிகர் அமீர்கான், வித்தியாசமான கதைகளை தேடி நடிப்பதில் ஆர்வம் உள்ளவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பிகே என்ற ஹிந்தி படம் தற்போது உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு ஒரு சில அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புகள் வந்தாலும், ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சமீபத்தில் பிகே படத்தைப் பார்த்த இயக்குனர் ஷங்கர், தனது ட்விட்டர் பக்கத்தில், பிகே படத்தில் அமைந்துள்ள காமெடி காட்சிகளையும், அமீர்கானின் நடிப்பையும் பாராட்டி தள்ளி இருக்கிறாராம். அது மட்டுமல்லாமல், இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யவும், அதில் அமீர்கான் கதாபாத்திரத்தில் விஜயை நடிக்க வைக்கவும் ஷங்கர் திட்டமிட்டிருப்பதாக உறுதிபடுத்தாத தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஷங்கர், விஜயை வைத்து, அமீர்கான் நடித்த 3 இடியட்ஸ் படத்தை தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
|