LOGO

அருள்மிகு அமணீஸ்வரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு அமணீஸ்வரர் திருக்கோயில் [Arulmigu amaneeswarar Temple]
  கோயில் வகை   சிவன் கோயில்
  மூலவர்   அமணீஸ்வரர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு அமணீஸ்வரர் திருக்கோயில், தேவம்பாடி வலசு - 642 005. பொள்ளாச்சி அஞ்சல், கோயம்புத்தூர் மாவட்டம்.
  ஊர்   தேவம்பாடி வலசு
  மாவட்டம்   கோயம்புத்தூர் [ Coimbatore ] - 642 005
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

அமணீஸ்வரர் திருக்கோயில் தேவனாம்பாளையம் என்ற ஊரில் கோவையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.இக்கோவில் சுமார் 1500-2000 வருடங்கள் பழமையான கோவில் ஆகும்.
மும்மூர்த்திகளே தமக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என விரும்பிய அத்திரி மகரிஷிக்காகவும், அவரது மனைவி அனுசுயாவின் கற்பின் மகிமையை உலகிற்கு எடுத்துக்காட்டவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடியார் வேடமிட்டு அனுசூயாவிடம் பிச்சை கேட்டனர். அவள் உணவைப் பரிமாறச்சென்ற போது, அனுசுயாதேவி நிர்வாணமாக பரிமாறினால் மட்டுமே உணவினை ஏற்றுக்கொள்வோம் என்றனர். கலங்காத அனுசுயா, தனது பத்தினித்தன்மையால் கணவருக்கு செய்த பாதபூஜை தீர்த்தத்தை மும்மூர்த்திகள் மீது தெளிக்க மூவரும் குழந்தைகளாக மாறினர், பின் நிர்வாணமாக அவர்களுக்கு பாலூட்டினாள். இவ்வாறு, அனுசுயாவை சோதிக்கச்சென்ற மும்மூர்த்திகளும் ஆடைகள் இன்றி சுயம்புவாக உள்ளனர். இக்கோயிலை நளன் கட்டியதாகவும், பிற்காலத்தில் விக்கிரமசோழ மன்னர் சீரமைத்ததாகவும் புராணவரலாறு தெரிவிக்கிறது.
தியானம் செய்வதற்கு ஏற்ற அமைதியான இடமாக உள்ள இத்தலத்திற்கு சுவாமியை வணங்க, தேவர்கள் அடிக்கடி வருவராம். இதனால், தேவநகர் எனப்பட்ட இவ்வூர், பிற்காலத்தில் தேவனாம்பாளையம் என்றானது. 
இக்கோயில் கற்பக ஆற்றுக்கு நடுவே ஓர் பாறையின் மீது அமைந்துள்ளது. ஆற்றில் நீர் செல்லும் காலங்களில், கோயிலை சூழ்ந்தபடி நீர் செல்லும் என்பதால் அச்சமயங்களில் இறைவனை வணங்கச்செல்வது சற்று சிரமம். இங்கு நீண்ட காலமாக பாம்பு ஒன்று வசிப்பதாகவும், அது சில சமயங்களில் சுவாமி கருவறைக்குள் சென்று இறைவனை சுற்றுவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
நியமாமுனிவர், தேவர்கள், சித்தர்கள், அடியார்கள் உட்பட பலர் வணங்கிச்சென்றுள்ள இக்கோயிலில் சுவாமியை வணங்க பேண்ட், சட்டை அணிந்தவர்களுக்கு அனுமதியில்லை. வேட்டி கட்டிச் சென்றால் மட்டுமே இறைவனை அருகில் இருந்து தரிசிக்க முடியும்.
பொள்ளாச்சியில் இருந்து ( 18 கிமீ)நெகமம் வழியாக கோவில்பாளையம் செல்லும் பஸ்கள். கிணத்துக்கடவிலிருந்து (15 கி.மீ.)நெகமம் செல்லும் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இவ்வழியே செல்கிறது. தேவனாம்பாளையத்தில் ஊர் எல்லையில் ஆற்றுக்கு நடுவே கோயில் அமைந்துள்ளது.வாடகை கார்களில் செல்வது நல்லது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில் அவிநாசி , கோயம்புத்தூர்
    அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் போரூர் , சென்னை
    அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பெரியசேக்காடு , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நெமிலிச்சேரி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் வில்லிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு நல்லிணக்கீஸ்வரர் திருக்கோயில் எழுச்சூர் , சென்னை
    அருள்மிகு விஜயநாதகேஸ்வரர் திருக்கோயில் சின்னாண்டி , சென்னை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் நுங்கம்பாக்கம் , சென்னை
    அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சென்னை , சென்னை
    அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் குன்றத்தூர் , சென்னை
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் எழும்பூர் , சென்னை
    அருள்மிகு ஞானகிரீஸ்வரர் திருக்கோயில் மேலவலம் பேட்டை , சென்னை
    அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத வடகலீஸ்வரர் திருக்கோயில் ஆத்தூர் , சென்னை
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி , கோயம்புத்தூர்

TEMPLES

    மற்ற கோயில்கள்     முனியப்பன் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    தியாகராஜர் கோயில்     சிவாலயம்
    நட்சத்திர கோயில்     அம்மன் கோயில்
    வள்ளலார் கோயில்     சாஸ்தா கோயில்
    ஐயப்பன் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     சேக்கிழார் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     அய்யனார் கோயில்
    விநாயகர் கோயில்     சுக்ரீவர் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     விஷ்ணு கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்