காசியிலிருந்து எடுத்துவரப்பட்ட பாணலிங்கம் இங்கு அமைக்கப்பட்டிருப்பதும், இங்கு முருகன் மயில் மீது இருக்க, வள்ளி தெய்வானை இருவரும் யானை மீது
வீற்றிருப்பது சிறப்பு.பிரகாரத்தில் விஸ்வநாதர், விசாலாட்சி நாயகி, துர்க்கை, விஜயகணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியன், வராகி, பைரவர்,
மகிஷாசுரமர்த்தினி, அனுமான் சன்னதிகள் அமைந்துள்ளன.சுமார் 400 வருடங்களுக்கு முன் இப்பகுதியில் ஒரு சிவபக்தர் வாழ்ந்து வந்தார். திருவண்ணாமலை
அருணாச்சலேஸ்வரரின் தீவிர பக்தரான இவர் ஆண்டுதோறும் திருவண்ணாமலைக்கு சென்று திருக்கார்த்திகை தீபம் தரிசனம் செய்வார். வயதான காலத்தில்
இவரால் திருவண்ணாமலை செல்ல முடியாமல் போனது. வருந்தி கண்ணீர் விட்டு அழுதபோது சிவபெருமான் ஜோதி சொரூபமாக இவருக்கு காட்சி கொடுத்து
அசரீரியாக, உனக்கு கிடைக்கும் லிங்கத்தை வைத்து இங்கு கோயில் கட்டி வழிபாடு செய். திருவண்ணாமலையில் வழிபட்ட பலன் இங்கும் கிடைக்கும், என்று
கூறினார். இதனடிப்படையில் அந்த பெரியவர் தனக்கு நண்பர் மூலம் காசியிலிருந்து கிடைத்த பாணலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, அண்ணாமலையாராக
நினைத்து வழிபாடு செய்து வந்தார். அப்போது முதல் இக்கோயிலின் மேலேயும் திருக்கார்த்திகை தினத்தன்று திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
பக்தர்கள் சிவனை ஜோதி சொரூபமாக வழிபாடு செய்கின்றனர்.
காசியிலிருந்து எடுத்துவரப்பட்ட பாணலிங்கம் இங்கு அமைக்கப்பட்டிருப்பதும், இங்கு முருகன் மயில் மீது இருக்க, வள்ளி தெய்வானை இருவரும் யானை மீது வீற்றிருப்பது சிறப்பு. பிரகாரத்தில் விஸ்வநாதர், விசாலாட்சி நாயகி, துர்க்கை, விஜயகணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியன், வராகி, பைரவர், மகிஷாசுரமர்த்தினி, அனுமான் சன்னதிகள் அமைந்துள்ளன. சுமார் 400 வருடங்களுக்கு முன் இப்பகுதியில் ஒரு சிவபக்தர் வாழ்ந்து வந்தார்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரின் தீவிர பக்தரான இவர் ஆண்டுதோறும் திருவண்ணாமலைக்கு சென்று திருக்கார்த்திகை தீபம் தரிசனம் செய்வார். வயதான காலத்தில் இவரால் திருவண்ணாமலை செல்ல முடியாமல் போனது. வருந்தி கண்ணீர் விட்டு அழுதபோது சிவபெருமான் ஜோதி சொரூபமாக இவருக்கு காட்சி கொடுத்து அசரீரியாக, உனக்கு கிடைக்கும் லிங்கத்தை வைத்து இங்கு கோயில் கட்டி வழிபாடு செய்.
திருவண்ணாமலையில் வழிபட்ட பலன் இங்கும் கிடைக்கும், என்று கூறினார். இதனடிப்படையில் அந்த பெரியவர் தனக்கு நண்பர் மூலம் காசியிலிருந்து கிடைத்த பாணலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, அண்ணாமலையாராக நினைத்து வழிபாடு செய்து வந்தார். அப்போது முதல் இக்கோயிலின் மேலேயும் திருக்கார்த்திகை தினத்தன்று திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. பக்தர்கள் சிவனை ஜோதி சொரூபமாக வழிபாடு செய்கின்றனர். |