|
||||||||
வித்தியாசமாகப் பணிவிலகல் கடிதம் கொடுத்து அதிர வைத்த ஊழியர் |
||||||||
![]()
ஊழியர் ஒருவர் டிஷ்யூ காகிதத்தில் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து சிங்கப்பூர் நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஆஞ்சிலா யோஹ் என்ற பெண் தொழிலதிபர் இச்சம்பவத்தைத் தனது ‘லிங்க்டுஇன்’ (LINKEDIN) பக்கத்தில் பதிவிட்டு, ஊழியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.
பரவலாகி வரும் அந்தப் பணி விலகல் கடிதத்தில், “நான், தேவைப்படும்போது பயன்படுத்தப்படும் கழிப்பறை காகிதத்தைப் போல உணர்ந்தேன், எந்தவொரு இரண்டாம்பட்சச் சிந்தனையைக் கூட இல்லாமல் தூக்கி எறியப்பட்டேன்” எனக் கவலையுடன் பதிவிட்டுள்ளார். மேலும், “இந்த நிறுவனம் என்னை எவ்வாறு நடத்தியது என்பதற்கான அடையாளமாகத் தான், இந்த வகையான காகிதத்தை எனது ராஜினாமா கடிதத்தை எழுதத் தேர்ந்தெடுத்துள்ளேன்" என்று எழுதப்பட்டிருந்தது.
நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை எப்படி நடத்த வேண்டும் என ஆஞ்சிலா யோஹ் கருத்து தெரிவித்துள்ளார். “உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை நல்ல செயல்களுக்காகப் பாராட்ட வேண்டும். அவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்தாலும் கூட, மனக்கசப்புடன் வெளியே செல்லக் கூடாது, நன்றி உணர்வுடன் வெளியேற வேண்டும். பாராட்டு என்பது ஒருவரைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு கருவி மட்டுமல்ல. ஒரு நபர் எவ்வளவு மதிக்கப்படுகிறார் என்பதற்கான பிரதிபலிப்பு, அடையாளம். ஒருவரைப் பாராட்டுவதில் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டால் கூட, அது அவருக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன” எனப் பதிவிட்டுள்ளார்
|
||||||||
by hemavathi on 15 Apr 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|