LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

தற்கால விஞ்ஞானிகளால் இன்று கண்டுபிடிக்கப்படும் இயற்கை ரகசியங்களை, அன்று கருவி, ஆராய்ச்சிக்கூடம் இன்றி சித்தர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள் ??

இன்றுவரை கண்ட விஞ்ஞானம் அனைத்தும் மனித உடலுக்குள் நடைபெறும் அதிசயங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. சுத்தவெளியிலிருந்து பரமாணுக்கள் தோன்றின.


பரமாணுக்கள் சேர்க்கையால் பஞ்சபூதங்கள் ஏற்பட்டன. நிலம், நீர், நெருப்பு, காற்று என்ற நான்கு பூதங்களுடன் விண் என்ற ஐந்தாவது பூதமான உயிர்ச்சக்தி சுழலும்பொழுது, அதன் தடை உணர்தலாக உணர்ச்சிநிலை பெற்று, ஓரறிவு முதற்கொண்டு தொடங்கிய பரிணாமத்தின் உச்சமாக வந்த ஆறறிவு பெற்றவன் தான் மனிதன்.

 

இந்த மனித உடலிலே, உயிர், ஜீவகாந்தம், மனம் என்ற நான்கும் சேர்ந்து இயங்கும் போது ஏற்படக்கூடிய ரசாயன இயக்கம், மின்சார இயக்கம், காந்த இயக்கம் இவற்றை கடந்து இப்பிரபஞ்சம் முழுவதும் நடைபெறக்கூடிய இயக்கங்கள் வேறெதுவும் இல்லை.


இந்த உடலில் நடைபெறாத இரகசியத்தை இதுவரை எந்த விஞ்ஞானமும் கண்டுபிடிக்கவில்லை. கண்டுபிடிக்கவும் இயலாது.

 

அத்தகைய முறையில் பரிணாமத்தின் உச்சமாக உள்ள மனித உடலின் அற்புதமான அமைப்பையும், இயக்கத்தையும் அகத்தவச்சாதனையால் அறிந்தவர்கள் சித்தர்கள். “இந்த உடலிலுள்ள அணுக்கள், பேரணுக்கள், செல்கள் இவைகள் எவ்வாறு அடுக்கப்பட்டும், சேர்த்துப்பிடித்துக்கொள்ளப்பட்டும் இருக்கின்றன” என்பதையெல்லாம் அறிந்தவர்கள் சித்தர்கள்.


அப்படி செல்களாலான கட்டிடமாகிய உடலின் கட்டுமானத்திற்கும், கட்டுக்கோப்புக்கும், உறுதிக்கும், நீடிப்புக்கும் வேண்டிய காந்த சக்தியை எவ்வாறு பெற்று, எவ்வாறு அதை மின் சக்தியாக மாற்றி, ஆங்காங்கே பல ரசாயனங்களை தோற்றுவித்து இயக்கநியதியோடு உடல் என்ற அற்புதமான நிலையம் இயங்குகின்றது என்பதையெல்லாம் அறிந்தவர்கள் சித்தர்கள்.


“மனித உடலின் இயக்கங்களையெல்லாம் உணர்ந்துகொள்வதோடு, பிற உயிரில் ஏற்படும் இன்ப துன்பங்களையும், பிற பொருட்களின் இயக்கங்களையும் கூட அறிவு எவ்வாறு உள்நுழைந்து அறிந்து வருகிறது” என்றும் சிந்தித்துப்பார்த்தார்கள்.


ஒவ்வொரு பொருளிலிருந்தும் வருகின்ற அலைகள் மோதுதல், பிரதிபலித்தல்,சிதறுதல், ஊடுறுவுதல், இரண்டினிடையே முன் பின்னாக ஓடுதல் என்ற ஐந்து தன்மைகளைப் பெறுகின்றன. என்பதை சித்தர்கள் உணர்ந்தார்கள்.


இந்த அலைகள் பஞ்ச பூதங்களாலான பருப்பொருட்களில் மோதும்போது அழுத்தம், ஒலி. ஒளி, சுவை, மணம் அத்துடன் மனித உடலிலே புலன் கடந்த நிலையில் மனமாகவும் மார்ச்சி பெறுகின்றன என்பதையும் தங்கள் தவ வலிமையால் உணர்ந்துகொண்டார்கள்.


அந்த விரிந்த மனநிலையிலே பிரபஞ்ச உற்பத்தி இரகசியங்கள் எல்லாம் அவர்கள் உள்ளத்திலே நிறைந்திருக்கும்.


எல்லா வினாக்களுக்குமான விடைகளும் அவர்களுக்குள்ளாகவே இருக்கின்றன. எனவே அங்கிருந்தே தங்கள் உள் நோக்கால் எடுத்துக்கொண்டார்கள். சித்தர்களுக்கு தனியாக ஆராய்ச்சி சாலை எதுவும் தேவையில்லை.


ஆராய்ச்சி சாலை என்று வைத்தால் ஏதாவது ஒரு பொருளைப் பற்றித்தான் ஆராய இடமிருக்கிறது. இந்த உடலையே எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ரகசியங்களையும் பற்றி ஆராய முடியும்.


அந்த முறையில் உடல் விஞ்ஞானத்தை அறிந்தவர்கள் சித்தர்கள். நீங்களும் முயன்றால் ஒரு சித்தராக சிறப்புறலாம். அத்தகைய ஆற்றல் மனிதனாகப் பிறந்த எல்லோரிடத்திலுமே அடங்கியுள்ளது.


வாழ்க வளமுடன்


-வேதாத்திரி மகரிஷி

by Swathi   on 28 Sep 2014  0 Comments
Tags: சித்தர்கள்   சித்தர்கள் மருத்துவம்   Siddhars   Siddhars Maruthuvam   Siddhas Maruthuvam        
 தொடர்புடையவை-Related Articles
தற்கால விஞ்ஞானிகளால் இன்று கண்டுபிடிக்கப்படும் இயற்கை ரகசியங்களை, அன்று கருவி, ஆராய்ச்சிக்கூடம் இன்றி சித்தர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள் ?? தற்கால விஞ்ஞானிகளால் இன்று கண்டுபிடிக்கப்படும் இயற்கை ரகசியங்களை, அன்று கருவி, ஆராய்ச்சிக்கூடம் இன்றி சித்தர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள் ??
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.