தேவையானவை :
1. சிவப்பு அரிசி மாவு - கால் கிலோ
2. கேழ்வரகு மாவு - கால் கிலோ
3. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் சிவப்பு அரிசி மாவு, கேழ்வரகு மாவு ஆகியவற்றை தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி, இலகுவான பதத்தில் பிசையவும்.
இந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டு, இடியாப்பமாகப் பிழியவும். பிறகு, குக்கரிலோ இட்லி பாத்திரத்திலோ வைத்து வேகவிடவும். சூடான இடியாப்பத்துடன் தேங்காய் பால், பால் சேர்த்துச் சாப்பிடலாம்.
பலன்கள் :
வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு மிகவும் நல்ல உணவு. எனவே, காலை அல்லது இரவு வேளைகளில் சாப்பிடலாம்.
கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் அனைவரும் சாப்பிட ஏற்றது. கேழ்வரகில் கால்சியம் சத்து நிறைந்திருப்பதால் பல், எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும்.
தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்.
|