சிலம்பாட்டம் என்ற கலை போர்க்கலைகளில் ஒன்றாக இருப்பினும் பொழுது போக்குக் கலையாகவும், கரகாட்டத்தின் துணை ஆட்டமாகவும் நிகழ்கிறது. இக்கலை குறித்து ஆராய்ந்தவர்கள் இது மிகவும் பழமையான கலை என்று கூறியுள்ளனர். இக்கலை பொழுதுபோக்கும் உடல் பயிற்சியும் சார்ந்தது. இதற்குக் கோவில் தொடர்போ வழிபாட்டுக் கூறுகளோ இல்லை. எனவே, இக்கலை நிகழ்த்த காலவரையறை கிடையாது. இக்கலை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெருமளவு நிகழ்த்தப்படுகிறது. இன்றைய நிலையில் இக்கலை வழக்கில் உள்ளது. இக்கலையை பயில்வதால் வர்மக் கலையையும் அறியமுடியும் என்பதால் இக்கலையைப் பயில்வதற்கு படித்தவர்களும் முன்வருகின்றனர்.
|