LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

சிலேடை

காட்டு வழியில் சென்றுகொண்டிருந்த இரு தமிழ் புலவர்களின் உரையாடல் இதோ –
 
நடந்து சென்று கொண்டிருந்த ஒரு புலவர் காலில் நெருஞ்சி முள் ஒன்று குத்தியது. அவர் குனிந்து அதைப் பிடுங்கி எறிந்தார். நெருஞ்சி முள்ளுக்கு ஐந்து தலை நாகம் என்று ஒரு வழக்குப் பெயர் உண்டு. அவர் மற்ற புலவரிடம்,"ஐந்து தலை நாகம் ஒன்று என் காலைக் குத்தியது, என் செய்ய?" என்று கேட்டார். அதற்கு அடுத்தவர்,

"பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் காலை எடுத்துத் தேய் சரியாகிவிடும்"

என்று பதிலுரைத்தார்.

இங்கே பத்துரதன் என்றது தசரதன் (பத்து = தசம்)
தசரதனின் புத்திரன் என்றது இராமன் (புத்திரன் = மகன்)
இராமனின் மித்திரன் என்றது சுக்ரீவன் (மித்திரன் = நண்பன்)
சுக்ரீவனின் சத்துரு என்றது வாலி (சத்துரு = எதிரி)
வாலியின் பத்தினி என்றது தாரை (பத்தினி = மனைவி)
தாரையின் கால் என்றது தாரை என்ற சொல்லில் உள்ள கால் (ா)

மேற்கூறிய வாசகத்தின் பொருள்,
தசரதனின் மகனான இராமனின் நண்பன் சுக்ரீவன். அவன் எதிரி வாலி. வாலியின் மனைவி தாரை. அந்தத் தாரை என்ற சொல்லில் உள்ள காலை நீக்கினால் தரை என்றாகும்.

மேற்கூறிய வாசகத்தின் உட்பொருள், முள் குத்திய காலைத் தரையில் தேய் என்பதே. 

by varun   on 28 Jul 2016  7 Comments
Tags: Siledai   சிலேடை                 
 தொடர்புடையவை-Related Articles
சிலேடை சிலேடை
கருத்துகள்
11-Sep-2020 16:13:07 Kanthimathi said : Report Abuse
Very good What fond to use to write in Tamil
 
23-Feb-2018 14:29:12 பத்மநாபன் க said : Report Abuse
எனது தந்தை இப்பாடலை சொல்லி தந்துள்ளார் . அதன் முழுமையான அர்த்தத்தை இப்போது தெரிந்து கொண்டேன் நன்றிகள் ,!! ஐயா எனக்கு தஞ்சாவூரில் மூன்று நாயக்க மன்னர்களுக்கு முதலமைச்சர் ஆக இருந்த கோவிந்தா தீக்ஷிதர் அவர்களை பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன் . அவர் பற்றிய நூல் எங்கே கிடைக்கும். தயவு செஎய்து தெரிவிக்கவும் நன்றி
 
15-Feb-2017 03:55:47 priyanga said : Report Abuse
அற்புதம்
 
29-Oct-2016 03:23:57 அருண் said : Report Abuse
@ ஜீவா குமார், நண்பரின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!! நாயக்கர் காலப்பாடல் தொகுப்பு தற்சமயம் என்னிடமில்லை, கிடைத்தால் நிச்சயம் பகிர்ந்துகொள்கிறேன்.
 
29-Oct-2016 03:13:13 அருண் said : Report Abuse
@ லாவண்யா, தங்களின் வருகைக்கும் கருத்தளித்தமைக்கும் நன்றிகள். பெயரின் முதல் எழுத்து என்னென்னவென்பதை அறிந்தால் பரிந்துரைக்க முயல்வேன்.
 
06-Oct-2016 11:08:57 Lavanya said : Report Abuse
All are very informative. Please do suggest a unique Tamil baby girl name.except venpa. Searching for a unique and sweet Tamil name.
 
17-Aug-2016 14:57:22 Jeevakumar said : Report Abuse
உங்களுடய அனைத்து தகவல்களும் பயனுடையதாக இருக்கின்றது தயவுசெய்து எனக்கு நாயக்கர் காலப்பாடல்கள் தொகுப்பு தேவைப்படுகின்றது தரமுடியுமா
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.