தஞ்சை, திருச்சி போன்ற மாவட்டங்களில் நடத்தப்படும் இந்நடனத்தில் பாம்பைப்போல் வளைந்து ஆடும் ஆட்டம் பாம்பு நடனம் எனப்படும். கரகாட்டம் நிகழும் கோவில் விழாக்களில் மேடைகளில் மட்டும் இது நிகழ்த்தப்பெறும். கரகாட்டப் பெண் கலைஞர்களில் இளவயதுப் பெண்ணே இந்நடனத்தை ஆடுகிறார். பாம்பு நடனம் ஆடுபவரின் ஆட்டத்துக்கேற்ப நாதஸ்வரக்காரர் மகுடி வாசிப்பார்.
|