LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சிந்துப்பாவியல்

சிந்துகளைப் பாடும் முறை

எவ்வகைச் சிந்தும் இசைக்குங் காலை
எதுகை மோனைத் தொடைபெறும் இடங்களால்
அடியின் தொடக்கமும் அரையடித் தொடக்கமும்
தாளச் செயல்களில் தட்டுடன் ஒன்றி
அமையப் பாடுதல் அழகுடைத் தாகும்.
கருத்து : பலவகைச் சிந்துப் பாடல்களில், அது எவ்வகைச் சிந்துப் பாடலாக இருந்தாலும் அதைத் தாளத்தோடு இசைத்து பாடும்போது எதுகைத் தொடைபெறும் இடங்களில் அடியின் தொடக்கமும், மோனைத் தொடை பெறும் இடங்களில் அரையடித் தொடக்கமும் கொண்டு இருப்பதால், தாளச் செயலில் அவ்வெதுகை, மோனை பெறும் இடங்களில் தாளத்தின் தட்டுகள் ஒன்றுமாறு பாடுதல் பாட்டுக்கும் தாளத்திற்கும் அழகைத் தரும். 
விளக்கம் : சிந்துப் பாடலில் அடிகளின் தொடக்கத்தில் எதுகைச்சீர் இருக்கும். தாளங்கள் தட்டிலிருந்து தொடங்குகின்றன. எதுகைச்சீர் தாளத்தின் தட்டுடன் தொடங்குகிறது. அதுபோல், பெரும்பாலும் அவ்வடியில் பாதியில் உள்ள மோனைச் சீரும் தாளத்தின் மற்றொரு தட்டில் தொடங்க வேண்டும். அப்போதுதான் அந்த அடியைப் பாடுகையில் எதுகை மோனைகளினால் உண்டாகும் ஒலியின்பம் கிடைக்கும். ஆதிதாள வட்டணை எட்டு எண்ணிக்கை உடையது. அதன் தொடக்கத்தில் கோலின் தட்டு விழுகிறது; சரி பாதியில், அதாவது ஐந்தாம் எண்ணிக்கையில் முதல் சுழியின் தட்டு விழுகிறது. கோலின் தட்டில் எதுகைச்சீர் தொடங்கினால் முதல் சுழியின் தட்டில், அடியின் பாதியில் அமையும் மோனைச்சீர் தொடங்குகிறது. இது பாட்டின் ஒலிநயத்திற்கு துணை செய்கிறது. 
எண்சீரடிகளை எட்டு எண்ணிக்கையுடைய வேறு தாளங்களில் பாடினால் மோனைச்சீர் உள்ள அரையடி எடுப்பில் தட்டு விழாது. அதனால் பாட்டின் ஒலியின்பம் முழுமையாகக் கிடைக்காது. அடித் தொடக்கத்தில் போலவே அடியடியின் தொடக்கங்களில் தட்டு விழும்போது சற்று அழுத்தம் கொடுத்துப் பாடுவது மரபு. இது இசையின்பத்தை மிகுவிக்கும். 
1400 
காட்டு :
கணப திரா . யன் . அ - வனிரு
காலைப்பி டித்திடு வோம் . . . . .
என்ற அடியில் மோனைச்சீர் ‘காலைப்பி’ என்பது. இதை ஆதிதாளத்தில் பாடினால், ‘கா’ என்ற இடத்தில் தட்டு விழும். ஆனால் இப்பாடலை அதே எட்டு எண்ணிக்கையுடைய மும்மை இன மட்டிய தாளத்தில் பாடினால் ஒரு வட்டணையில் அடி முடியும்; ஆனால் மோனை எழுத்தில் தட்டு விழாது. அதனைக் கீழே காண்க. 
1303
காட்டு :
கணப திரா . யன் . அ
வனிரு காலைப்பி
டித்திடு வோம் . . . . .
இதில் ‘கா’ என்னும் மோனை தட்டில் விழாமல் திருப்பத்தில் விழுவது காண்க. 
சில சிந்துப் பாக்களில் சீர் எண்ணிக்கை மிகுதியாக உள்ள அடிகள் வரும். அதில் பலவிடங்களில் மோனை அமைந்திருக்கும். அவற்றிலும் இந்நெறிமுறை பின்பற்றப் படவேண்டும்; காட்டாக, 
1400
வன்னத்தி னைமாவைத் தெள்ளியே - உண்ணும்
வாழ்க்கைக்கு றக்குல வள்ளியே - . உயிர்
வாங்கப்பி றந்திட்ட கள்ளியே - . இரு
வடமேருவை நிகராகிய புயமீதணி பலமாமணி
மாலைப டீரெனத் துள்ளியே - . விழ
வான்மதி வீசுந்தீ யள்ளியே . . .
(கா.சி.க.வ.ப.180)
என்ற அடியில் வாழ்க்கை, வாங்க, வட, மாலை, வான்மதி ஆகிய ஐந்து இடங்களில் மோனை வருகிறது. இது ஆதி தாளத்தில் அடங்கும் பாடல். இம்மோனைச் சீர்கள் வருமிடங்களில் கோல் அல்லது சுழியில் தட்டு விழுவதைத் தாளம் போட்டு உணரலாம். 
நான்மையின ஏக தாளத்தில் அடங்கும் அடிகளில் மோனைச்சீர்கள் யாமும் கோலில் தொடக்கத்திலேயே தட்டுகளில் வருவதைக் காணலாம். 
காட்டு : 14
பத்மினி சாதிப்பெண் மானே - பாம்பன்
பார்க்கவ ருவாய்சீ தானே - அங்குப்
பாலசுப் ரமண்யர் ஆலயத் தில்விதிப்
பான்மையில் கும்பாபி டேகம் - அதைப்
பார்ப்பவர்க் கெய்தும்வை போகம் - குறப்
பாவையின் மீதினில் மோகம் - கொண்ட
பண்பதனால் மேவும்நல் யோகம் - மலர்
(பாம்பன் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வழிநடைச் சிந்து)
என்று தொடங்கும் இப்பாடலில் பத்மினி, பார்க்க, பால, பான்மை, பார்ப்ப, பாவை, பண்ப என்ற மோனைச் சீர்கள் கோலின் தொடக்கத்திலேயே தட்டுகளில் வருவதைப் பாடி உணரலாம். ஆகவே சிந்துப் பாடல்களில் எதுகை அமையும் இடங்களிலும், மோனை அமையும் இடங்களிலும் தாளத்தட்டு விழுமாறு பாடுவது அழகுடையதாகும். 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.