|
|||||
சிங்கம் 2 திரை விமர்சனம் |
|||||
![]() நடிகர் : சூர்யா,
நடிகைகள் : அனுஷ்கா, ஹன்சிகா,
இயக்கம் : ஹரி
காமெடி : விவேக், சந்தானம்,
வில்லன் : டேனி
ஒளிப்பதிவு : ப்ரியன்
இசை: தேவி ஸ்ரீபிரசாத்
தயாரிப்பு: பிரின்ஸ் பிக்சர்ஸ்
விமர்சனம் :
தமிழ் சினிமாவை பொறுத்தவரை வெற்றிபெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகம் வெற்றிபெறுவது என்பது ஒரு மிக பெரிய சவாலான விஷயம். அப்படி ஒரு சவாலான விஷயத்தை தான் ஹரி - சூர்யா கூட்டணி சாதனையாக மாற்றியுள்ளது. போலீஸ் வேலையை ராஜினாமா செய்வது போல் நடித்துவிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் என்சிசி மாஸ்டர் வேடத்தில் சமூக விரோதிகளின் ஆயுதக் கடத்தலைக் கண்காணித்து வருகிறார் சூர்யா. அப்போது கடத்தப்படுவது, ஆயுதமல்ல, போதை பொருட்கள் தான் என கண்டுபிடிக்கிறார் சூர்யா. அப்போது தான் இந்த போதை பொருள் கடத்தலுக்கு உள்ளூரில் உள்ள மூன்று தாதாக்களுக்கும், வெளிநாட்டில் உள்ள டோனிக்கும் தொடர்பிருப்பது தெரியவருகிறது. மேலும் தூத்துக்குடி காவல் துறையிலேயே சில தவறான அதிகாரிகள் இருப்பதை அறியும் சூர்யா, பிறகு தூத்துக்குடி டிஎஸ்பியாக பொறுபேற்று கடத்தல் காரர்களை நாடு விட்டு நாடு தாண்டி எப்படி பிடிக்கிறார் எனபது தான் படத்தின் மீதி கதை. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் பரவாயில்லை.
பலம் :
1.படத்தின் கதை சுமாராக இருந்தாலும், சூரியாவின் நடிப்பால் படத்தை வெற்றி படமாக மாற்றியிருக்கிறார்.
2.வில்லன்கள் போடும் திட்டத்தை எல்லாம் புத்திசாலி தனமாக முறியடிப்பது தான் படத்தின் விறுவிறுப்புக்கு காரணம்.
3.வசனங்களும், பஞ்ச் டயலாக்குகளும் காட்சிகளுக்கு தகுந்தாற்போல் நச்சுனு பொருந்தியுள்ளது.
4.காமெடிக்கு சந்தானம், விவேக் என இரண்டு பேர் இருந்தாலும், சந்தானம் தான் படத்தின் கலகலப்புக்கு ஆதாரம். தவறு செய்துவிட்டு மன்னிப்புக் கேட்கும் ஒவ்வொரு முறையும் பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே என மண்டியிட்டு பேண்டை கழட்டுவது திரை அரங்கை சிரிப்பலையில் அதிர வைக்கிறது. மேலும் படத்தின் பாதியில் வரும் விவேக் ரசிகர்களை ஆங்காங்கே சிரிக்க வைத்திருக்கிறார்.
5.படம் இரண்டரை மணி நேரம் என்றாலும், ஒரு நிமிடம் கூட சலிப்படையாமல் ரசிகர்களை பார்க்க வைத்திருப்பது, இயக்குனர் ஹரியுடைய மேஜிக் என்றே சொல்லலாம்.
6.சர்வதேச போதை மருந்து கடத்தல்காரனாக வரும் டேனி தனது கதா பத்திரத்தை வைத்து ரசிகர்களை மிரட்டியுள்ளார்.
7.சிங்கம் டான்ஸ் பாட்டிற்கு அனுஷ்கா ஆடியிருப்பது ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளுகிறது.
பலவீனம் :
1.ஹன்சிகாவை ப்ளஸ்டூ மாணவியாகக் காட்டுவது கதைக்கு எடுபடவில்லை, (இவர்கள் ஜெனிலியாவை ட்ரை பண்ணியிருக்கலாம்)
2.படத்தில் இரண்டு ஹீரோயின்கள் வந்தாலும் அனுஷ்காதான் சூர்யாவுக்கு ஜோடி. ஆனால் இதிலும் இருவருக்கும் திருமணம் ஆகாமலே படம் முடிக்கப்பட்டுள்ளது.
3.தென்னாப்பிரிக்காவிற்கு வில்லனை தேடி போகும் சூர்யா, அந்த நாட்டுப் போலீசுக்கே தெரியாத ரூட்டிலெல்லாம் சர்சர்ரென்று பாய்ந்து வில்லனை வீழ்த்துவதை தவிர்த்திருக்கலாம். (இடையில் இதான் இந்தியன் போலீஸ் மாஜிக் என்ற வசனம் வேறு)
மொத்தத்தில் சிங்கம் 2 காமெடியுடன் சேர்ந்த விறுவிறுப்பு !
|
|||||
by Swathi on 06 Jul 2013 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|