LOGO
  முதல் பக்கம்    மற்றவை     Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

கல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி

தமிழகத்தின் எந்தவித பரபரப்பையும் தன்மேல் பூசிக்கொள்ளாத ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு ஆரம்பபள்ளிக்கூடம் முழுக்க முழுக்க மேம்படுத்தப்பட்டு, தமிழகக்கல்வி வியாபாரத்திற்கு சவால் விடும் நிலையில் நிமிர்ந்து நிற்கிறது என்பதை அறிந்த போது, ஆச்சரியத்தின் எல்லைக்குச் சென்றது உண்மை.
 
பள்ளி முகப்பு
மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் சாலையில் 5வது கல் தொலைவில் இருக்கும் காரமடை, சிறுமுகைக்குப் பிரியும் நான்குசாலைப் பிரிவில் சிறுமுகை செல்லும் சாலையில் சென்றால் அப்பகுதி மக்களால் பெரிதும் புகழ்பெற்ற தென் திருப்பதிக் கோவில் வரும். ஆனால் அதற்கு செல்லும் வழியில் வலதுபுறம் பிரியும் சாலையில் இராமாம்பாளையம் வரவேற்கிறது என்கிறது உறுதியானதொரு வரவேற்பு வளைவு.அதனுள் நுழைந்து சில வீடுகளைத்தாண்டி விவசாய நிலங்களைக் கடந்தால் அடர் நீலம், வெளிர்நீல ஆடை அணிந்து தனக்குள் பொதிந்துகிடக்கும் அதிசயங்களை மௌனமாய்ச் சுமந்து கொண்டு அமைதியாய் வரவேற்கிறது இராமாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி. கல்வி வியாபாரப் போட்டியில் தமிழகத்தின் கல்வி வியாபாரத்தில் நோஞ்சானாய்ப் போட்டியிடும் ஒரு நோஞ்சான் குழந்தையின் அடையாளாமாய் வெளிப்புறத்தில் தெரிகிறது அந்த அரசு ஆரம்பப் பள்ளி.
 
தலைமையாசிரியை திருமதி. சரஸ்வதி, ஆசிரியர் திரு. ப்ராங்ளின்
  
பள்ளி முகப்பை அடையும் போது, பள்ளியின் தலைமையாசிரியை சரஸ்வதியும்,ஆசிரியர் ஃப்ராங்ளினும் நம்மை அன்போடு வரவேற்கிறார்கள். முதல் சந்திப்பெனினும்,பார்வைகளிலேயே அன்பு வழிந்தோடுகிறது. கடும் போட்டியில் வென்ற நகரத்துச் சாயம் படியாத ஒரு வெள்ளந்தியைப் பாராட்டும்போது கசியும் வெட்கம் போல்,அவர்களிருவரும் நம்மைப் பார்க்கும்போது அவர்களிடமிருந்து வழிந்தோடுவதைப் பார்க்க முடிந்தது. 
 
வகுப்பறை
மனதில் பொங்கும் பெருமையோடு அந்த வகுப்பறைக்குள் அழைக்க உள்ளே நுழைந்த போது, அந்த அற்புதச் சூழலை விவரிக்க வார்த்தைகள் போதாது. அந்த வகுப்பறையின் தரமும் வடிவமைப்பும் மூச்சடைக்க வைத்தது. 
 
எழுதுபலகை, குடிநீர், முதலுதவிப்பெட்டி
பளபளக்கும் தரை,  
தரமான பச்சை வண்ணப்பலகை,  
வகுப்பறைக்குள்ளே குடிநீர் குழாய், 
அதில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்,  
வெந்நீருக்கென தனித்தனி குழாய்கள்,  
தெர்மோகூல் கூரை,  
மின்விசிறிகள், 
உயர்தர நவீன விளக்குகள், 
கூரையில் பொருத்தப்பட்ட நவீன ஒலிபெருக்கிகள், 
மாணவர்கள் எழுதிப்பழக மட்டஉயர பச்சை வண்ணப்பலகை, 
வேதியியல் உபகரணங்கள்,
கணித ஆய்வக உபகரணங்கள்,
முனைகளில் இடித்து பாதிக்கப்படாமல் மாணவ மாணவியர் அமர்ந்து படிக்க வட்டமேசைகள்,  
மேசைகளின் கீழ்ப்பகுதியில் ஒருவரையொருவர் உதைக்காவண்ணம் தடுப்புகள், 
அமரும் நாற்காலிகளிலேயே புத்தகங்களை வைத்துச்செல்ல பெட்டி வசதி,
மாணவர்களின் செய்முறைத் திறமையை வெளிப்படுத்தப் பலகை,
அனைவருக்கும் தரமான சீருடை,
காலுறைகளுடன் கூடிய காலணி,
முதலுதவிப்பெட்டி,
தீயணைப்புக்கருவி,
உயர்திறன் வாய்ந்த கனிணி,
காணொளிகளை ஒளி(லி)பரப்ப டிவிடி சாதனம்
..... என எல்லாமே தரமாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டு சேகரித்த பொக்கிஷமாய் அந்தக் கிராமத்துக் குழந்தைகளின் எதிர்காலத்தை உலகத் தரத்திற்கு உயர்த்த தயாராக இருக்கிறது.
 
கணினி உட்பட கல்வி உபகரணங்கள்
இதையெல்லாம் செய்யவைத்தது எந்தக் கல்விக்கொள்கையோ, ஐந்தாண்டுத் திட்டமோ அல்லது பெருங்கூட்டமாய்க்கூடி விவாதித்து எடுத்தமுடிவோ அல்ல. ஒரே ஒரு மனிதன், தன் சிந்தையில் கருவாக்கி தனக்குள் அடைகாத்து சரியான நேரத்தில்,சரியான இடத்தில் பிரசவித்ததின் விளைவே இது. ஆம், இது அத்தனையும் ஆசிரியர் திரு. பிராங்கிளின் அவர்களின் கனவுத் திட்டமே. 
 
மேசை, பெட்டியுடன் கூடிய நாற்காலி
தான் செய்யும் பணியை ஒரு வழக்கமான பணி என நகர்த்தாமல், அதை உயிராய் நேசித்ததன் விளைவுதான் இது. பாரதியின் அக்னிக்குஞ்சு போல்,அவருக்குள் இருந்த மாற்றம் எனும் நெருப்புக்கங்குதான், இன்றைக்கு தமிழகத்தின் கல்வி வியாபாரத்திற்கு சவால் விடும் வண்ணம், ஒரு சாயம் வெளுத்துப்போன உள்ளடங்கிய கிராமத்துப் பள்ளியை உலகத்தரத்திற்கு மாற்றிக்காட்டியுள்ளது.
 
பில்லூர் அருகே மலைவாழ் மக்கள் பகுதியில் இருந்த ஓராசிரியர் பள்ளி ஆசிரியராக நியமிக்கப் பட்டபோதே, ஃப்ராங்ளின் மிகுந்த சிரத்தையெடுத்து வெறும் பதினேழு பிள்ளைகள் படித்த நிலையில் இருந்து 30 பிள்ளைகளாக உயர்த்தியிருக்கிறார். 
சில வருடங்களுக்கு முன் இந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வந்த ஃப்ராங்கிளின், தனக்குள் இருந்த கனவுத்திட்டத்தை செயல்படுத்த துவங்கினார். ஒரு காலத்தில் நூறு பிள்ளைகள் படித்த அந்தப்பள்ளியில் 5ம்வகுப்பு வரை மொத்தமே வெறும் 30பிள்ளைகள் மட்டுமே படிக்கும் நிலைக்கு சுருங்கிப்போனது. கல்வி வியாபாரத்தில் தங்களை முதலீடு செய்ய வசதி இல்லாதவர்களின் கடைசிப்புகலிடமாக அரசுப்பள்ளிகள் மாறிப்போன கட்டம் அது. ஆண்டாண்டு காலமாக இருந்த அந்த அரசுப்பள்ளியில் ஆயிரமாயிரம் பேர் படித்து பலனடைந்த வரலாறு ஒரு முற்றுப்புள்ளியை எட்டிவிடுமோ என்ற அச்சத்தைப் போக்க மிக அவசியத் தேவை மாற்றம் என்பதே. 
காசு கொடுக்க முடியாத பிள்ளைகளுக்கு கல்வியை சரியாய் அளிக்க வேண்டும் எனும் வேட்கையில் யோசிக்க ஆரம்பித்தவர், தனக்கு மனதில் தோன்றியதையெல்லாம் செதுக்கி, பட்டை தீட்டி, இன்றைக்கு தமிழகத்தின் எந்த ஒரு பள்ளியும் தரமுடியாத ஒரு தரத்தை, ஆரோக்கியத்தை, சுகாதாரமான கல்வியை செய்துகாட்டத் தொடங்கியுள்ளார்.
 
ஊர்மக்களுடன் ஆசிரியர்கள்
நன்றி: கதிர்
     தமிழகத்தின் எந்தவித பரபரப்பையும் தன்மேல் பூசிக்கொள்ளாத ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு ஆரம்பபள்ளிக்கூடம் முழுக்க முழுக்க மேம்படுத்தப்பட்டு, தமிழகக்கல்வி வியாபாரத்திற்கு சவால் விடும் நிலையில் நிமிர்ந்து நிற்கிறது என்பதை அறிந்த போது, ஆச்சரியத்தின் எல்லைக்குச் சென்றது உண்மை.
 
பள்ளி முகப்பு
     மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் சாலையில் 5வது கல் தொலைவில் இருக்கும் காரமடை, சிறுமுகைக்குப் பிரியும் நான்குசாலைப் பிரிவில் சிறுமுகை செல்லும் சாலையில் சென்றால் அப்பகுதி மக்களால் பெரிதும் புகழ்பெற்ற தென் திருப்பதிக் கோவில் வரும். ஆனால் அதற்கு செல்லும் வழியில் வலதுபுறம் பிரியும் சாலையில் இராமாம்பாளையம் வரவேற்கிறது என்கிறது உறுதியானதொரு வரவேற்பு வளைவு.அதனுள் நுழைந்து சில வீடுகளைத்தாண்டி விவசாய நிலங்களைக் கடந்தால் அடர் நீலம், வெளிர்நீல ஆடை அணிந்து தனக்குள் பொதிந்துகிடக்கும் அதிசயங்களை மௌனமாய்ச் சுமந்து கொண்டு அமைதியாய் வரவேற்கிறது இராமாம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி. கல்வி வியாபாரப் போட்டியில் தமிழகத்தின் கல்வி வியாபாரத்தில் நோஞ்சானாய்ப் போட்டியிடும் ஒரு நோஞ்சான் குழந்தையின் அடையாளாமாய் வெளிப்புறத்தில் தெரிகிறது அந்த அரசு ஆரம்பப் பள்ளி.
 
தலைமையாசிரியை திருமதி. சரஸ்வதி, ஆசிரியர் திரு. ப்ராங்ளின்
  
     பள்ளி முகப்பை அடையும் போது, பள்ளியின் தலைமையாசிரியை சரஸ்வதியும்,ஆசிரியர் ஃப்ராங்ளினும் நம்மை அன்போடு வரவேற்கிறார்கள். முதல் சந்திப்பெனினும்,பார்வைகளிலேயே அன்பு வழிந்தோடுகிறது. கடும் போட்டியில் வென்ற நகரத்துச் சாயம் படியாத ஒரு வெள்ளந்தியைப் பாராட்டும்போது கசியும் வெட்கம் போல்,அவர்களிருவரும் நம்மைப் பார்க்கும்போது அவர்களிடமிருந்து வழிந்தோடுவதைப் பார்க்க முடிந்தது. 
 
வகுப்பறை
     மனதில் பொங்கும் பெருமையோடு அந்த வகுப்பறைக்குள் அழைக்க உள்ளே நுழைந்த போது, அந்த அற்புதச் சூழலை விவரிக்க வார்த்தைகள் போதாது. அந்த வகுப்பறையின் தரமும் வடிவமைப்பும் மூச்சடைக்க வைத்தது. 
 
• எழுதுபலகை, குடிநீர், முதலுதவிப்பெட்டி
பளபளக்கும் தரை,  
தரமான பச்சை வண்ணப்பலகை,  
வகுப்பறைக்குள்ளே குடிநீர் குழாய், 
அதில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்,  
வெந்நீருக்கென தனித்தனி குழாய்கள்,  
தெர்மோகூல் கூரை,  
மின்விசிறிகள், 
உயர்தர நவீன விளக்குகள், 
கூரையில் பொருத்தப்பட்ட நவீன ஒலிபெருக்கிகள், 
மாணவர்கள் எழுதிப்பழக மட்டஉயர பச்சை வண்ணப்பலகை, 
வேதியியல் உபகரணங்கள்,
கணித ஆய்வக உபகரணங்கள்,
முனைகளில் இடித்து பாதிக்கப்படாமல் மாணவ மாணவியர் அமர்ந்து படிக்க வட்டமேசைகள்,  
மேசைகளின் கீழ்ப்பகுதியில் ஒருவரையொருவர் உதைக்காவண்ணம் தடுப்புகள், 
அமரும் நாற்காலிகளிலேயே புத்தகங்களை வைத்துச்செல்ல பெட்டி வசதி,
மாணவர்களின் செய்முறைத் திறமையை வெளிப்படுத்தப் பலகை,
அனைவருக்கும் தரமான சீருடை,
காலுறைகளுடன் கூடிய காலணி,
முதலுதவிப்பெட்டி,
தீயணைப்புக்கருவி,
உயர்திறன் வாய்ந்த கனிணி,
காணொளிகளை ஒளி(லி)பரப்ப டிவிடி சாதனம்
..... என எல்லாமே தரமாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டு சேகரித்த பொக்கிஷமாய் அந்தக் கிராமத்துக் குழந்தைகளின் எதிர்காலத்தை உலகத் தரத்திற்கு உயர்த்த தயாராக இருக்கிறது.
 
கணினி உட்பட கல்வி உபகரணங்கள்
     இதையெல்லாம் செய்யவைத்தது எந்தக் கல்விக்கொள்கையோ, ஐந்தாண்டுத் திட்டமோ அல்லது பெருங்கூட்டமாய்க்கூடி விவாதித்து எடுத்தமுடிவோ அல்ல. ஒரே ஒரு மனிதன், தன் சிந்தையில் கருவாக்கி தனக்குள் அடைகாத்து சரியான நேரத்தில்,சரியான இடத்தில் பிரசவித்ததின் விளைவே இது. ஆம், இது அத்தனையும் ஆசிரியர் திரு. பிராங்கிளின் அவர்களின் கனவுத் திட்டமே. 
 
மேசை, பெட்டியுடன் கூடிய நாற்காலி
     தான் செய்யும் பணியை ஒரு வழக்கமான பணி என நகர்த்தாமல், அதை உயிராய் நேசித்ததன் விளைவுதான் இது. பாரதியின் அக்னிக்குஞ்சு போல்,அவருக்குள் இருந்த மாற்றம் எனும் நெருப்புக்கங்குதான், இன்றைக்கு தமிழகத்தின் கல்வி வியாபாரத்திற்கு சவால் விடும் வண்ணம், ஒர மேசை, பெட்டியுடன் கூடிய நாற்காலி தான் செய்யும் பணியை ஒரு வழக்கமான பணி என நகர்த்தாமல், அதை உயிராய் நேசித்ததன் விளைவுதான் இது. பாரதியின் அக்னிக்குஞ்சு போல்,அவருக்குள் இருந்த மாற்றம் எனும் நெருப்புக்கங்குதான், இன்றைக்கு தமிழகத்தின் கல்வி வியாபாரத்திற்கு சவால் விடும் வண்ணம்.
by Swathi   on 22 Sep 2011  2 Comments
 தொடர்புடையவை-Related Articles
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ?
வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்! வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்!
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு! தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு
பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி
இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது! இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது!
கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை! கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை!
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு!
கருத்துகள்
28-Sep-2011 12:32:01 பிராங்கிளின் said : Report Abuse
எங்கள் பள்ளி செய்தியினை வெளியிட்ட வலைதமிழ்.காம்- மிற்கு,எம் பள்ளி மற்றும் இராமம்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பாக நன்றிகள். எங்கள் பள்ளியின் இவ்வசதிகளைச் செய்ய நிதி ஆதாரம் குறித்து அறிய திரு.குரு அவர்கள் வாசகர் பதிவில் கேட்டுள்ளார்.எங்கள் இராமம்பாளையம் பகுதி ஊர் பொதுமக்கள்,எங்கள் நண்பர்கள் வட்டாரம் மற்றும் எங்கள் பங்களிப்பு ஆகியவற்றின் மூலமே இவற்றினை செய்தோம்.நன்றி. -பிராங்கிளின், 99424 72672
 
19-Sep-2011 10:33:31 குரு said : Report Abuse
This is certainly an insightful article.Kudos to the team that made this a reality. You've only mentioned that it's Mr.Franklin's Dream project. But what about the source of funds for this infrastructure? You could have mentioned that aswell ie., what kind of people are behind this impressive project?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.