LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

சிறையிலும் செம்மை

தங்களின் சுய நலனுக்காக நாட்டு மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் நாட்டு நன்மைக்காக வீட்டு உணர்ச்சிகளைக் கூட விலக்கி வைத்தவர் பெருந்தலைவர் .

உப்புச் சத்தியாகிரகம் நடந்த நேரம் . உப்பு வரியை ஒழிக்க வேண்டும் என்று பெருந்தலைவர் கடும் குரல் கொடுத்தார் . அந்த ஆண்டுதான் பெருந்தலைவர் வாழ்க்கையில் முக்கியமான ஆண்டு ஆகும் . அந்த ஆண்டில்தான் முதன்முதலாக இரண்டு வருட சிறைத் தண்டனை அனுபவித்தார் .

சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பது போல பெருந்தலைவரும் வாழ்ந்து வந்தார் . பெல்லாரிச் சிறையிலே அவர் இருந்தபோது அவரது சிறைவாசத்தை தாங்கிக்கொள்ள முடியாத பாட்டியார் பார்வதியம்மாள் படுக்கையில் விழுந்து நோயுற்றார் . உடலும் , உள்ளமும் சோர்ந்து போனது . பிழைப்பது அரிது என்றாகிவிட்ட நிலையில் , காமராசர் வந்தால் தான் உயிர் தாங்கும் என்றார்கள் .

சீரும் சிறப்புமாக பாலூட்டி , சீராட்டி வளர்த்த பாட்டியிடம் காமராசருக்கு அன்பு அதிகம் இருந்தது . உறவினர்கள் தலைவர் சத்தியமூர்த்தி அவர்களிடம் கூறி பரோலுக்கு ஏற்பாடு செய்தார்கள் . காமராசரை அழைத்துச்செல்ல வந்த அவரின் தாய்மாமனிடம் நாட்டு நடப்பை விசாரித்தார் .

“உங்களைக் காணாமல் பாட்டியார் உயிருடன் போராடிக்கொண்டிருக்கிறார். உங்களைப் பரோலில் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தாகிவிட்டது”என்றார். ஆனால் காமராசர் “தண்டனை முடியாமல், நான் பரோலில் வர முடியாது. ஊரிலே எத்தனையோபேர் இருக்காங்களே! முனிசிபாலிடி இருக்கில்லே. அவங்க எடுத்துப் போடுவாங்க. பாட்டி அனாதையாய் போகாது கவலைப்படாதீங்க”என்று கூறி அனுப்பி வைத்தார்.

பொதுவாழ்வு என்ற பெயரில் ஆடம்பர வாழ்க்கை நடத்துபவர்கள் எத்தனை பிறவி எடுத்தாலும் பெருந்தலைவரின் தளராத உறுதியைப் பெறுவது அரிது .

by Swathi   on 20 Aug 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.