LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 769 - படையில்

Next Kural >

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றி பெறும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் - தான் தேய்ந்து சிறிதாகலும், மனத்தினின்று நீங்காத வெறுப்பும், நல்குரவும் தனக்கு இல்லையாயின்: படைவெல்லும் - படை பகையை வெல்லும். (விட்டுப்போதலும் நின்றது நல்கூர்தலும் அரசன் பொருள் கொடாமையான் வருவன. செல்லாத் துனியாவது: மகளிரை வௌவல் , இளிவரவாயின செய்தல் முதலியவற்றான் வருவது. இவையுள் வழி அவன் மாட்டு அன்பு இன்றி உற்றுப் பொராமையின், 'இல்லாயின் வெல்லும்' என்றார்.)
மணக்குடவர் உரை:
தான் தேய்ந்து சிறிதாகலும், மனத்தினின்று நீங்காத வெறுப்பும், நல்குரவும் தனக் கில்லை யாயின், படை பகையை வெல்லும்.
தேவநேயப் பாவாணர் உரை:
தானை-படை; அடல்தகையும் ஆற்றலும் இல் எனினும்-பகைவர்மேற் சென்று கொல்லும் மறத்திறமும் அவர் தன்னை வந்து தாக்கினால் தாங்கும் வலிமையும் தனக்கில்லாவிடினும்; படைத்தகையால் பாடு பெறும்-தன் தோற்றப்பொலிவாலும் வடிவு வகுப்புச் சிறப்பாலும் பெருமை பெறும். இல்லெனினும் என்னும் இழிவுசிறப் பும்மை அவற்றின் இன்றியமையாமையைக் காட்டிற்று. தோற்றப் பொலிவானது. சுவடிக்கப்பட்ட தேர்களும் படாம்போர்த்த யானைகளும் அணி பூட்டிய குதிரைகளும், குடை கொடி பதாகை முதலிய கண்கவர் எடுபிடிகளும், பல்லியமும் காள வகைகளும் செய்யும் ஓசை முழக்கமும், கூடிய ஆரவாரம். படை வகுப்பு, மேற் கூறப்பட்டது. பாடு பார்த்தவுடன் பகைவர் அஞ்சும் பெருமை. தென்னாலியிராமனின் 'எட்சண் டெருமைத்தோல்' (திலகாஷ்ட மகிஷபந்தனம்) கண்டோடிய வடநாட்டுப் புலவன்போல், வெளியாரவாரத்தைக் கண்டு வெருளும் படையும் உலகத்திலிருப்பதால், படைத்தகையாலும் பகைவரை மரூட்டலாம் என்றார். பதாகை-பெருங்கொடி
கலைஞர் உரை:
சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்து விடாமலும், பயன்படாத நிலை இல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்.
சாலமன் பாப்பையா உரை:
எண்ணிக்கையில் சிறுமை, அரசி்ன் மீது மனத்தை விட்டு விலகாத வெறுப்பு, வறுமை இவை எல்லாம் இல்லை என்றால் அந்தப் படை வெற்றி பெறும்.
Translation
Where weakness, clinging fear and poverty Are not, the host will gain the victory.
Explanation
An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty.
Transliteration
Sirumaiyum Sellaath Thuniyum Varumaiyum Illaayin Vellum Patai

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >