LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சைவ சித்தாந்த சாத்திரம்

சிவஞான சித்தியார் பகுதி -5

 

சுபக்கம்
இரண்டாஞ் சூத்திரம் (91 -186 )
உலகெலா மாகி வேறாய் உடனுமாய் ஒளியாய் ஓங்கி 
அலகிலா உயிர்கள் கன்மத் தாணையின் அமர்ந்து செல்லத் 
தலைவனாய் இவற்றின் தன்மை தனக்கெய்த லின்றித் தானே 
நிலவுசீர் அமல னாகி நின்றனன் நீங்கா தெங்கும். 91
ஒன்றென மறைக ளெல்லாம் உரைத்திட உயிர்கள் ஒன்றி 
நின்றனன் என்று பன்மை நிகழ்த்துவ தென்னை யென்னின் 
அன்றவை பதிதான் ஒன்றென் றறையும்அக் கரங்கள் தோறும் 
சென்றிடும் அகரம் போல நின்றனன் சிவனுஞ் சேர்ந்தே. 92
உருவொடு கருவி யெல்லாம் உயிர்கொடு நின்று வேறாய் 
வருவது போல ஈசன் உயிர்களின் மருவி வாழ்வன் 
தருமுயி ரவனை யாகா உயிரவை தானு மாகான் 
வருபவ னிவைதா னாயும் வேறுமாய் மன்னி நின்றே. 93
இருவினை இன்பத் துன்பத் திவ்வுயிர் பிறந்தி றந்து 
வருவது போவ தாகும் மன்னிய வினைப்ப லன்கள் 
தருமரன் தரணி யோடு தராபதி போலத் தாமே 
மருவிடா வடிவுங் கன்ம பலன்களும் மறுமைக் கண்ணே. 94
இருவினை யென்னை இன்பத் துன்பங்கள் இயல்ப தென்னின் 
ஒருதன்மை இயல்புக் குள்ள தொருவனுக் கிரண்டு செய்தி 
வருவதென் மலருந் தீயும் மருவலின் வாசம் வெம்மை 
தருவதென் நீரென் செய்து தானியல் பாகு மன்றே. 95
தன்னியல் பொழியப் பூவும் தழலும்வந் தணைய நீரின் 
மன்னிய திரண்டு செய்தி வருமிரு வினையி னானும் 
உன்னிய இன்பத் துன்பம் உறும்உயி ருணர்வி லாத 
துன்னிய அசித்தை இன்பத் துன்பங்கள் சூழ்ந்தி டாவே. 96
இம்மையின் முயற்சி யாலே இருநிதி ஈட்டி இன்பம் 
இம்மையே நுகர்வர் செய்தி இலாதவர் பொருளு மின்றி 
இம்மையே இடரு ழப்பர் வேறிரு வினைய துண்டேல் 
இம்மையின் முயற்சி யின்றி எய்திட வேண்டும் இங்கே. 97
இருவினைச் செயல்காண் இம்மை இரும்பொரு ளின்பம் வேண்டி 
வருவினை செய்யுங் காலை மடிவரும் மடியு மின்றித் 
தருவினை யதனில் அந்தந் தானறும் துயருந் தங்கும் 
ஒருவினை செய்யா தோரும் உடையர்இவ் வுலகத் துள்ளே. 98
பேறிழ வின்ப மோடு பிணிமூப்புச் சாக்கா டென்னும் 
ஆறுமுன் கருவுட் பட்ட தவ்விதி அனுப வத்தால் 
கூறிடும் முன்பு செய்த கன்மமிங் கிவற்றிற் கேது 
தேறுநீ இனிச்செய் கன்மம் மேலுடற் சேரு மென்றே. 99
உடற்செயல் கன்மம் இந்த உடல்வந்த வாறே தென்னின் 
விடப்படு முன்னு டம்பின் வினைஇந்த உடல்வி ளைக்கும் 
தொடர்ச்சியால் ஒன்றுக் கொன்று தொன்றுதொட் டநாதி வித்தின் 
இடத்தினின் மரம்ம ரத்தின் வித்தும்வந் தியையு மாபோல். 100
முற்செயல் விதியை இந்த முயற்சியோ டனுப வித்தான் 
இச்செயல் பலிக்கு மாறென் இதமகி தங்கள் முன்னர் 
அச்செய லானால் இங்கும் அவைசெயின் மேலைக் காகும் 
பிற்செயா தனுப விப்ப தின்றுபின் தொடருஞ் செய்தி. 101
மேலைக்கு வித்து மாகி விளைந்தவை உணவு மாகி 
ஞாலத்து வருமா போல நாம்செய்யும் வினைக ளெல்லாம் 
மேலத்தான் பலமாச் செய்யும் இதமகி தங்கட் கெல்லாம் 
மூலத்த தாகி யென்றும் வந்திடும் முறைமை யோடே. 102
இதமகி தங்கள் என்ப திகல்மன வாக்குக் காயத்(து) 
இதமுயிர்க் குறுதி செய்தல் அகிதமற் றதுசெய் யாமை 
இதமகி தங்க ளெல்லாம் இறைவனே ஏற்றுக் கொண்டிங்(கு) 
இதமகி தத்தால் இன்பத் துன்பங்கள் ஈவ னன்றே. 103
இறைவனிங் கேற்ப தென்னை இதமகி தங்க ளென்னின் 
இறைபர னுயிர்க்கு வைத்த நேசத்தின் நிலைமை யாகும் 
அறமலி இதஞ்செய் வோருக் கனுக்கிர கத்தைச் செய்வன் 
மறலி அகிதஞ் செய்யின் நிக்கிர கத்தை வைப்பன். 104
நிக்கிர கங்கள் தானும் நேசத்தால் ஈசன் செய்வ(து) 
அக்கிர மத்தால் குற்றம் அடித்துத்தீர்த் தச்சம் பண்ணி 
இக்கிர மத்தி னாலே ஈண்டறம் இயற்றி டென்பன் 
எக்கிர மத்தி னாலும் இறைசெயல் அருளே யென்றும். 105
தந்தைதாய் பெற்ற தத்தம் புதல்வர்கள் தம்சொ லாற்றின் 
வந்திடா விடின் உறுக்கி வளாரினால் அடித்துத் தீய 
பந்தமும் இடுவர் எல்லாம் பார்த்திடில் பரிவே யாகும் 
இந்தநீர் முறைமை யன்றோ ஈசனார் முனிவு மென்றும். 106
செயல்களே பலத்தைச் செய்யும் தெய்வம்வேண் டாஇங் கென்னின் 
முயலுமிச் செயல்க ளிங்கே முழுவதும் அழியு மெங்கே 
பயனளிப் பனவ ழிந்தே பலன்களைப் பண்ணுங் கெட்டே 
வயலிடும் தழையும் தின்னும் மருந்தும்பின் பலிக்கு மாபோல். 107
செய்க்கிடுந் தழையும் தின்னுந் திரவிய மதுவும் போல 
உய்த்திடுஞ் செய்தி கெட்டே உறுவிக்கும் பலத்தை யென்னி 
வைத்திடுஞ் சோறும் பாக்கும் அருந்தினர் வயிற்றின்மாய்ந்தால் 
மெய்த்திடும் பலம்உனக்கு மலமலான் வேறு முண்டோ. 108
திரவியம் உவமை யன்று செய்திக்கண் திரவி யங்கள் 
விரவிய விடத்தே வீந்து பலந்தரும் இம்மை அம்மை 
பரவிநீ பார்நீர் அங்கி பாததிரத் திட்ட வெல்லாம் 
கரவிடு மிங்கே எங்கே பலன்கொளக் கருதி னாயே. 109
செய்தவர் மனத்தே எல்லாச் செய்தியும் கிடந்து பின்னர் 
எய்தவே பலன்க ளீனும் என்றிடின் இருஞ் சுவர்க்கம் 
பொய்யர்வாழ் நரகம் பூமி புந்தியிற் கிடந்து போந்த(து) 
ஐயனே அழகி துன்சொல் இந்திர சால மாய்த்தே. 110
தானஞ்செய் பொருள் தரித்தோர் செய்தவர் தக்க செய்தி 
ஊனம்பின் னுறவே காண்டும் பலமுறு விப்பான் வேண்டும் 
ஈனமில் செய்தி ஈச னிடும்பணி இவைநாம் செய்தால் 
நூனங்கள் அதிக நோக்கி நகர்விப்பன் வினைநோய் தீர. 111
உலகுடல் கரணங் காலம் உறுபலம் நியதி செய்தி 
பலவிவை கொண்டுகன்மம் பண்ணுவ துண்பதானால் 
நிலவிடா திவைதாம் சென்று நினைந்துயிர் நிறுத்திக் கொள்ளா(து) 
அலகிலா அறிவ னாணை அணைத்திடும் அருளி னாலே. 112
ஒழுக்கம்அன் பருள்ஆ சாரம் உபசாரம் உறவு சீலம் 
வழுக்கிலாத் தவம்தா னங்கள் வந்தித்தல் வணங்கல் வாய்மை 
அழுக்கிலாத் துறவ டக்கம் அறிவொடர்ச் சித்த லாதி 
இழுக்கிலா அறங்க ளானால் இரங்குவான் பணிய றங்கள். 113
மனமது நினைய வாக்கு வழுத்தமந் திரங்கள் சொல்ல 
இனமலர் கையிற் கொண்டங் கிச்சித்த தெய்வம் போற்றிச் 
சினமுத லகற்றி வாழும் செயலற மானா லியார்க்கும் 
முனமொரு தெய்வ மெங்கும் செயற்குமுன் னிலையா மன்றே. 114
யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே 
மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள் 
வேதனைப் படும் இறக்கும் பிறக்கும்மேல் வினையுஞ் செய்யும் 
ஆதலான் இவையி லாதான் அறிந்தருள் செய்வ னன்றே. 115
இங்குநாம் சிலர்க்குப் பூசை இயற்றினால் இவர்களோவந்(து) 
அங்குவான் தருவா ரன்றேல் அத்தெய்வ மத்த னைக்காண் 
எங்கும்வாழ் தெய்வமெல்லாம் இறைவனாணையினால் நிற்ப(து) 
அங்குநாம் செய்யுஞ் செய்திக் காணைவைப் பால ளிப்பன். 116
காண்பவன் சிவனே யானால் அவனடிக் கன்பு செய்கை 
மாண்பறம் அரன்றன் பாதம் மறந்துசெய் அறங்களெல்லாம் 
வீண்செய லிறைவன் சொன்ன விதியறம் விருப்பொன்றில்லான் 
பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே. 117
தாபர சங்க மங்க ளென்றிரண் டுசரவில் நின்று 
மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க் கருளை வைப்பன் 
நீபரன் தன்னை நெஞ்சில் நினைவையேல் நிறைந்த பூசை 
யாய்பரம் பொருளை நாளும் அர்ச்சிநீ அன்பு செய்தே. 118
அரனடிக் கன்பர் செய்யும் பாவமும் அறம தாகும் 
பரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவ மாகும் 
வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி 
நரரினிற் பாலன் செய்த பாதகம் நன்மை யாய்த்தே. 119
மறைகளீ சன்சொல் அச்சொல் வழவாரா உயிரை வைக்கும், 
சிறைகள்மா நிரயம் இட்ட பணிசெய்வோர் செல்வத் தோடும், 
உறையும்மா பதிகள் உம்ப ருலங்கள் யோனிக் கெல்லாம், 
இறைவனா ணையினால் இன்பத் துன்பங்கள் இயைவதாகும். 120
ஆணையால் அவனி மன்னன் அருமறை முறைசெய் யாரை 
ஆணையில் தண்டஞ் செய்தும் அருஞ்சிறை யிட்டும் வைப்பன் 
ஆணையின் வழிசெல் வோருக் கரும்பதி செல்வம் நல்கி 
ஆணையும் வைப்பன் எங்கும் ஆணையே ஆணை யேகாண். 121
அரசனும் செய்வ தீசன் அருள்வழி அரும்பா வங்கள் 
தரையுளோர் செய்யில் தீய தண்டலின் வைத்துத் தண்டத் 
துரைசெய்து தீர்ப்பன் பின்பு சொல்வழி நடப்பர் தூயோர் 
நிரயமும் சேரார் அந்த நிரயமுன் நீர்மை ஈதாம். 122
அருளினால் உரைத்த நூலின் வழிவாரா ததன்மஞ் செய்யின் 
இருளுலா நிரயத் துன்பத் திட்டிரும் பாவந் தீர்ப்பன்
பொருளுலாஞ் சுவர்க்க மாதி போகத்தாற் புணியந் தீர்ப்பன் 
மருளுலா மலங்கள் தீர்க்கும் மருந்திவை வயித்ய நாதன். 123
மருத்துவன் உரைத்த நூலின் வழிவரிற் பிணிகள் வாரா 
வருத்திடும் பிணிகள் தப்பில் தப்பிய வழியுஞ் செய்யத் 
திருத்தினன் மருந்து செய்யா துறும்பிணி சென்றுந் தீர்ப்பன் 
உரைத்தநூற் சிவனுமின்னே உறுங்கன்ம மூட்டித் தீர்ப்பன். 124
மண்ணுளே சிலவி யாதி மருத்துவன் அருத்தி யோடும் 
திண்ணமா யறுத்துக் கீறித் தீர்த்திடுஞ் சிலநோ யெல்லாம் 
கண்ணிய கட்டி பாலும் கலந்துடன் கொடுத்துத் தீர்ப்பன் 
அண்ணலும் இன்பத் துன்பம் அருத்தியே வினைய றுப்பன். 125
பூதனா சரீரம் போனால் புரியட்ட ரூபந் தானே 
யாதனா சரீர மாகி இன்பத்துன் பங்க ளெல்லாம் 
நாதனார் ஆணை யுய்க்க நரகொடு சுவர்க்கம் துய்த்துத் 
தீதிலா அணுவா யோனி சேர்ந்திடும் சீவ னெல்லாம். 126
உடல்விடா யோனி பற்றி உதிப்பினும் உதிக்கு மொன்றிற் 
படர்வுறா துறும்பா வத்தாற் பாடாணம் போற்கி டந்து 
கடனதாம் காலஞ் சென்றாற் கடுநர கதனில் வீழ்ந்தங்(கு) 
இடருறும் உருவங்கன்மத் தளவினில் எடுக்கு மன்றே. 127
பன்னகம் அண்ட சங்கள் பரகாயந் தன்னிற் பாய்வோர் 
துன்னுதோல் முட்டை யாக்கை துறந்துசெல் வதுவே போல 
உன்னிய வுயிர்கள் தூல வுடல்விட்டு வானி னூடு 
மன்னிடு நனவு மாறிக் கனவினை மருவு மாபோல். 128
தன்மமோ டதன்ம வாகித் தானிரு பயனுந் தந்து 
நன்மைதீ மையினு மின்பத் துன்பினு நாடிக் காண 
முன்னமே ஆன்மா வின்தன் மும்மலத் தொன்ற தாகிக் 
கன்மமு மூலங் காட்டிக் காமிய மலமாய் நிற்கும். 129
இருவினை அநாதி யாதி இயற்றலால் நுகர்வால் அந்தம் 
வருமலஞ் சார்ந்து மாயா உருவுகள் மருவி யார்த்துத் 
தருசெயல் முறைமை யாலே தான்பல பேதங் காட்டி 
அருவதாய் நின்ற ரன்தன் ஆணையின் அமர்ந்து செல்லும். 130
சங்கமம் தாப ரங்கள் தத்தம்கன் மத்துக் கீடா 
அங்குரு யோனி மாறும் அச்சுமா றாதிங் கென்னின் 
இங்குமா னுடரி யற்றும் புண்ணியத் தின்ப ஈட்டம் 
இங்குவான் சுரர்ளாயோ நரர்களாய் அருந்து வாரோ. 131
நரர்களாய்த் துய்ப்ப ரென்னின் நரர்பதி சுரரு லோகம் 
சுரர்களாய்த் துய்ப்ப ரென்னிற் சொன்னஅச் சழியு மாகும் 
சுரர்களாய்ப் பலன்கள் துய்த்துத் தாமிங்குத் தோன்றும் போது 
நரர்களாய்ப் பிறப்பர் ஞாலத் தமரராய் நண்ணிடாரே. 132
வண்டுக ளாகி மாறும் மயிர்க்குட்டி மற்றோர் செந்துப் 
பண்டைய உருவந் தானே வேட்டுவ னாய்ப்பி றக்கும் 
கண்டுகொள் யோனி யெல்லாம் கன்மத்தால் மாறு மென்றே 
கொண்டன சமய மெல்லாம் இச்சொல் நீ கொண்ட தெங்கே. 133
அகலியை கல்ல தானாள் அரிபல பிறவி யானான் 
பகலவன் குலத்திற் றோன்றிப் பாரெலா முழுதும் ஆண்டு 
நிகரிலா அரச னாகும் நிலந்திநீ டுலகம் போற்றச் 
சகமதில் எலிதா னன்றோ மாவலி யாய்த்துத் தானே. 134
செப்பினாய் மாற வேறு சிலர்விதி யாலே கன்மால் 
வைப்புறு மியோனி எல்லாம் மாறிவந் திடாவிங் கென்னின் 
எப்படி யானுஞ் செய்திக் கிறைகரி யாவ னென்றே 
முற்பட மொழிந்தே னெல்லாம் முதல்வன்தன் விதியே யாகும். 135
அவ்வவ யோனி தோறும் அவ்வவ உலகந் தோறும் 
செவ்விதின் அறிந்து கன்மம் சேர்ந்திடா சீவன் சேரா 
இவ்வகை தம்மிற் சேர்வும் இறைசெய லானாற் செய்த 
எவ்வுரு வுந்தன் கன்மான் மாற்றுவன் இறைவன் தானே. 136
மாறியிவ் வுருவ மெல்லாம் வருவதெங் கேநின் றென்னில் 
கூறிய சூக்கு மத்தாம் உருவெனிற் குறியொன் றென்னின் 
வேறொரு குறியா மாரம் வீரசங் கிலியு மாகும் 
தேறுநீ யொருவ னாலிச் செயலெலாம் சிவனா லாகும். 137
சூக்குமங் கெட்டுத் தூலந் தோன்றிடா சூக்கு மத்தின் 
ஆக்கியோ ருடல்கி டப்ப தின்றுட லாக்குந் தன்மைக்(கு) 
ஓக்கிய சத்தி யுண்டாய் உடல்தருங் காலம் உற்று 
நீக்கிட மரம்பின் வேரோர் நீள்மர நிகழ்த்து மாபோல். 138
விதிப்படிச் சூக்கு மத்தே உருவரும் வினையா லிங்கே 
உதித்திடா உருவ மாக உருவரு மரங்கள் வித்தில் 
கதித்தெழு மரமும் வித்தும் கழியும்பின் அழியுஞ் சூக்க 
மதிக்கெழு கலைகள் போல வருவது போவ தாமே. 139
தூலமா முருவி னுக்குச் சூக்கும முதல தற்கு 
மூலமா னதற்கு மூல மோகினி அதன்மு தற்றான் 
மேலதாம் விந்து சத்தி சிவமிவை மிசையா மெல்லாம் 
சாலவின் றாகும் ஆன்மாச் சிவத்தினைச் சார்ந்த போது. 140
அரன்விதி யருள தென்றே அறைந்தனம் அதுவு முன்னே 
தரைநர கருந்து றக்கம் தனுகர ணாதி யெல்லாம் 
வருவதுஞ் செய்த நாதி மலங்களிம் மருந்தால் தீர்த்துப் 
பரகதி யதுவுந் தந்து பாதபங் கயமும் சூட்டும். 141
எழுமுடல் கரண மாதி இவைமலம் மலம லத்தாற் 
கழுவுவ னென்று சொன்ன காரண மென்னை யென்னில் 
செழுநவ அறுவை சாணி உவர்செறி வித்த ழுக்கை 
முழுவதுங் கழிப்பன்மாயை கொடுமல மொழிப்பன் முன்னோன். 142
நித்தமாய் அருவாய் ஏக நிலையதாய் உலகத் திற்கோர் 
வித்துமாய் அசித்தா யெங்கும் வியாபியாய் விமல னுக்கோர் 
சத்தியாய்ப் புவன போகந் தனுகர ணமும்உ யிர்க்காய் 
வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யு மன்றே. 143
மாயையிற் கால மோடு நியதிபின் கலாதி தோன்றும் 
ஆயஅக் கால மூன்றாய் ஆக்கியு மளித்தும் போக்கிக் 
காயமோ டுலகுக் கெல்லாம் காலசங் கையினைப் பண்ணி 
நாயக னாணை யாலே நடத்திடுஞ் சகத்தை யெல்லாம். 144
நியதிபின் தோன்றிக் கன்ம நிச்சயம் பண்ணி நிற்கும் 
அயர்விலாக் கலைபின் தோன்றி ஆணவம் ஒதுக்கிச் சித்தின் 
செயல்புரி கிரியா சத்தி தெரிவிக்குஞ் சிறிதே வித்தை 
உயர்கலை யதனில் தோன்றி அறிவினை உதிக்கப் பண்ணும். 145
விச்சையின் அராகந் தோன்றி வினைவழி போகத் தின்கண் 
இச்சையைப் பண்ணி நிற்கும் தொழிலறி விச்சை மூன்றும் 
வைச்சபோ திச்சா ஞானக் கிரியைமுன் மருவி ஆன்மா 
நிச்சயம் புருட னாகிப் பொதுமையின் நிற்ப னன்றே. 146
வருங்குண வடிவாய் மூலப் பிரகிருதி கலையில் தோன்றித் 
தருங்குண மூன்றாய் ஒன்றிற் றான்மூன்றாய் மும்மூன் றாகும் 
இருங்குண ரூப மாகி இயைந்திடு மெங்கும் ஆன்மாப் 
பெருங்குண வடிவாய்ப் போக சாதனம் பெந்த மாமே. 147
சித்தமாம் அவ்வி யத்தம் சிந்தனை யதுவுஞ் செய்யுஞ் 
புத்திஅவ் வியத்தில் தோன்றிப் புண்ணிய பாவஞ் சார்ந்து 
வத்துநிச் சயமும் பண்ணி வருஞ்சுக துக்க மோகப் 
பித்தினின் மயங்கி ஞானக் கிரியையும் பேணி நிற்கும். 148
ஆங்காரம் புத்தி யின்கண் உதித்தகந் தைக்கு வித்தாய் 
ஈங்கார்தான் என்னோ டொப்பார் என்றியான் என்ன தென்றே 
நீங்காதே நிற்குந் தானும் மூன்றதாய் நிகழு மென்பர் 
பாங்கார்பூ தாதி வைகா ரிகம்தைச தம்தா னென்றே. 149
மதுமது தைச தத்தின் வந்தொரு பொருளை முந்தி 
நினைவதுஞ் செய்தங் கைய நிலைமையின் நிற்கு மாங்கே 
இனமல சோத்தி ராதி கன்மஇந் திரிய மெல்லாம் 
முனமுரை செய்த வைகா ரிகம்தரு மென்பர் முன்னோர். 150
நற்செவி துவக்குக் கண்நா நாசிஐந் தினையு நல்லோர் 
புத்திஇந் திரிய மென்று புகன்றனர் இவைத மக்குச் 
சத்தநற் பரிச ரூப இரதகந் தங்க ளைந்தும் 
வைத்தனர் விடய மாக அடைவினின் மருவு மென்றே. 151
வாக்கொடு பாதம் பாணி பாயுவோ டுபத்த மைந்து 
நீக்கினர் முன்னே கன்மேந் திரியங்க ளெனநி னைந்தே 
ஆக்கிய வசன கமன தானமும் விசர்க்கா னந்தம் 
ஊக்கமார் ஐந்து மைந்தின் தொழிலென ஓதி னாரே. 152
வாயாதி சோத்தி ராதி புறத்துவாழ் கருவி யாகும் 
ஓயாத மனாதி காயத் துணருமுட் கருவி யாகும் 
ஆய்வார்கட் கராக மாதி அவற்றினுட் கருவி யென்பர் 
மாயாள்தன் வயிற்றி வற்றால் துடக்குண்டு வாழு மான்மா. 153
ஓசைநற் பரிச ரூப இரதகந் தங்க ளென்று 
பேசுமாத் திரைக ளைந்தும் பிறக்கும்பூ தாதி கத்தின் 
நேசஇந் திரியங் கட்கு நிகழறி விதனாற் காண்டும் 
ஆசைசேர் மனாதி தன்மாத் திரைபுரி யட்ட கந்தான். 154
சாற்றிய பஞ்ச தன்மாத் திரைகளிற் சத்த முன்னாத் 
தோற்றும்வான் வளிதீ நீர்மண் தொடக்கியே ஒன்றுக்கொன்றங்(கு) 
ஏற்ற மாமோசை யாதி இருங்குண மியைந்து நிற்கும் 
ஆற்றவே விடய பூதம் அங்காங்கி பாவத் தாமே. 155
இரந்தர மாகி வான்றான் இடங்கொடுத் திடும்ச லித்துப் 
பரந்தவை திரட்டும் கால்தீச் சுட்டொன்று வித்தல் பண்ணும் 
நிரந்தரங் குளிர்ந்து நின்று பதஞ்செயும் நீர்மண் தானும் 
உரந்தரு கடின மாகித் தரித்திடும் உணர்ந்து கொள்ளே. 156
மண்புனல் அனல்கான் வான்பால் படிவுநாற் கோண மாகும் 
தண்பிறை மூன்று கோணம் தகுமறு கோணம் வட்டம் 
வண்பொன்மை வெண்மை செம்மைகறுப்பொடு தூமவன்னம் 
எண்தரும் எழுத்துத் தானும் லவரய ஹவ்வு மாமே. 157
குறிகள்வச் சிரத்தி னோடு கோகந தஞ்சு வத்தி 
அறுபுள்ளி அமுத விந்து அதிதெய்வம் அயன்மா லாதி 
செறிபுக ழீச னோடு சதாசிவம் பூத தெய்வம் 
நெறிதரு கலைஐந் திற்கும் நிகழ்த்துவர் இந்த நீர்மை. 158
சுத்ததத் துவங்க ளென்று முன்னமே சொன்ன ஐந்தும் 
இத்தகை மையின்இ யம்பும் இவைமுப்பத் தொன்று மாகத் 
தத்துவ முப்பத் தாறாஞ் சைதன்னி யங்க ளைந்து 
சித்தசித் தான்மா வொன்று முப்பதும் அசித்தே செப்பில். 159
ஐந்துசுத் தத்தின் கீழேழ் சுத்தாசுத் தம்அ சுத்தந் 
தந்திடும் புமான்கீ ழெண்மூன் றாயதத் துவஞ்சீ வற்கு 
வந்திடும் பிரேர காண்டம் மருவுபோக சயித்தி ரத்தோ(டு) 
அந்தமில் அணுக்க ளுக்குப் போக்கிய காண்ட மாமே. 160
தத்துவ ரூப மாகும் தரும்அரு வுருவ மெல்லாம் 
தத்துவம் தூல சூக்க பரங்களு மாகி நிற்கும் 
தத்துவம் தன்னிற் சாரும் அணுக்கள்சா தாக்கி யத்தில் 
தத்துவ சத்தம் சாரும் சகலமும் தத்து வங்காண். 161
தத்துவம் எண்மூன் றும்சென்(று) ஆன்மதத் துவத்தொ டுங்கும், 
வித்தையி னொடுங்கும் ஆறும் சிவத்தினி னொடுங்கும் மூன்றும், 
நித்ததத் துவம்இம் மூன்றும் என்பர்கள் இரண்டு நின்ற, 
சுத்தமாம் சிவத்தொ டுங்கும் தோற்றமும் இதுபோ லாகும். 162
மொய்தரு பூத மாதி மோகினி அந்த மாகப் 
பொய்தரு சமய மெல்லாம் புக்குநின் றிடும்பு கன்று 
மெய்தருஞ் சைவ மாதி இருமூன்றும் வித்தை யாதி 
எய்துதத் துவங்க ளேயும் ஒன்றுமின் றெம்மி றைக்கே. 163
சிவஞ்சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன் 
உவந்தருள் உருத்தி ரன்தான் மால்அயன் ஒன்றினொன்றாய்ப் 
பவந்தரும் அருவ நாலிங் குருவநா லுபய மொன்றாய் 
நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்ப னென்பர். 164
சத்தியாய் விந்து சத்தி யாய்மனோன் மனிதா னாகி 
ஒத்துறு மகேசை யாகி உமைதிரு வாணி யாகி 
வைத்துறும் சிவாதிக் கிங்ஙன் வருஞ்சத்தி யொருத்தி யாகும் 
எத்திற நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள். 165
சத்திதான் நாத மாதி தானாகுஞ் சிவமு மந்தச் 
சத்திதா னாதி யாகும் தரும்வடி வான வெல்லாம் 
சத்தியும் சிவமு மாகும் சத்திதான் சத்த னுக்கோர் 
சத்தியாம் சத்தன் வேண்டிற் றெல்லாமாஞ் சத்திதானே. 166
சிவம்சத்தி தன்னை ஈன்றும் சத்திதான் சிவத்தை ஈன்றும் 
உவந்திரு வரும்பு ணர்ந்திங் குலகுயி ரெல்லா மீன்றும் 
பவன்பிரம சாரி யாகும் பான்மொழி கன்னி யாகும் 
தவந்தரு ஞானத் தோர்க்கித் தன்மைதான் தெரியுமன்றே. 167
தனுகரண புவன போகம் தற்பரம் பந்தம் வீடென்(று) 
அணுவினோ டெல்லா மாகி அடைந்திடுந் தத்து வங்கள் 
இனிதறிந் திவைநி விர்த்தி முதல்கலை யிடத்தே நீக்கி 
நனிபர முணர்ந்தோ னந்தத் தத்துவ ஞானி யாவன். 168
எல்லாமாய்த் தத்துவங்கள் இயைந்ததென் அணுவுக் கென்னில் 
தொல்லாய கன்மமெல்லாம் துய்ப்பித்துத் துடைத்தற் கும்பின் 
நில்லாமை முற்று வித்து நீக்கவும் கூடி நின்ற 
பொல்லாத ஆணவத்தைப் போக்கவும் புகுந்த தன்றே. 169
ஒன்றதாய் அநேக சத்தி யுடையதாய் உடனாய் ஆதி 
அன்றதாய் ஆன்மா வின்தன் அறிவொடு தொழிலை ஆர்த்து 
நின்றுபோத் திருத்து வத்தை நிகழ்த்திச்செம் பினிற்களிம்பேய்ந்(து) 
என்றும்அஞ் ஞானங் காட்டும் ஆணவம் இயைந்து நின்றே. 170
மலமென வேறொன் றில்லை மாயாகா ரியம தென்னின் 
இலகுயிர்க் கிச்சா ஞானக் கிரியைகள் எழுப்பும் மாயை 
விலகிடும் மலமி வற்றை வேறுமன் றதுவே றாகி 
உலகுடல் கரண மாகி உதித்திடும் உணர்ந்து கொள்ளே. 171
மாயையே ஆன்ம ஞானக் கிரியையை மறைத்து நிற்கும் 
தூயவெம் பரிதி தன்னைச் சுடர்முகில் மறைத்தாற் போலப் 
போய்முகில் அகலச் சோதி புரிந்திடு மதுவே போலக் 
காயமு மகல ஞானத் தொழில்பிர காச மாமே. 172
பரிதியை முகில் மறைப்பப் பாயொளி பதுங்கி னாற்போல் 
உருவுயிர் மறைக்கின் ஞானக் கிரியைகள் ஔ¤க்கு மாகும் 
கருதிடும் இச்சா ஞான காரியம் காயம் பெற்றால் 
மருவிடும் உயிர்க்குக் காயம் வந்திடா விடின்மறைப்பே. 173
போதகா ரியம்ம றைத்து நின்றது புகல்ம லங்காண் 
ஓதலாம் குணமு மாக உயிரினுள் விரவ லாலே 
காதலால் அவித்தை சிந்தத் தரும்கலை யாதி மாயை 
ஆதலா லிரண்டுஞ் சோதி இருளென வேறா மன்றே. 174
புருடன்தன் குணம் அவித்தை யெனில்சடம் புருட னாகும் 
குருடன்தன் கண்ணின் குற்றம் கண்ணின்தன் குணமோ கூறாய் 
மருள்தன்றன் குணம தாகி மலம்அசித் தாகி நிற்கும் 
தெருள்தன்றன் குணம தாகிச் சித்தென நிற்கும் சீவன். 175
மும்மலம் நெல்லி னுக்கு முளையொடு தவிடு மிப்போல் 
மம்மர்செய் தணுவி னுண்மை வடிவினை மறைத்து நின்று 
பொய்ம்மைசெய் போக பந்த போத்திருத் துவங்கள் பண்ணும் 
இம்மலம் மூன்றி னோடும் இருமல மிசைப்பன் இன்னும். 176
மாயையின் காரி யத்தை மாயேய மலம தென்றும் 
ஏயும்மும் மலங்கள் தத்தந் தொழிலினை இயற்ற ஏவும் 
தூயவன் தனதோர் சத்தி திரோதான கரிய தென்றும் 
ஆய்வர்இம் மலங்கள் ஐந்தும் அணுக்களை அணைந்து நிற்கும். 177
மலம்மாயை கன்மம் மாயே யம்திரோ தாயி மன்னிச் 
சலமாரும் பிறப்பி றப்பில் தங்கிஇத் தரைகீழ் மேலும் 
நிலையாத கொள்ளி வட்டங் கறங்கென நிமிடத் தின்கண் 
அலமாரும் இறைவ னாணை யால்உயிர் நடக்கு மன்றே. 178
அண்டசம் சுவேத சங்கள் உற்பிச்சம் சராயு சத்தோ(டு) 
எண்தரு நாலெண் பத்து நான்குநூ றாயி ரத்தால் 
உண்டுபல் யோனி யெல்லாம் ஒழித்துமா னுடத்து தித்தல் 
கண்டிடில் கடலைக் கையால் நீந்தினன் காரி யங்காண். 179
நரர்பயில் தேயந் தன்னில் நான்மறை பயிலா நாட்டில் 
விரவுத லொழிந்து தோன்றல் மிக்கபுண் ணியந்தா னாகும் 
தரையினிற் கீழை விட்டுத் தவஞ்செய்சா தியினில் வந்து 
பரசம யங்கள் செல்லாப் பாக்கியம் பண்ணொ ணாதே. 180
வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாம் சிறுமை தப்பித் 
தாழ்வெனும் தன்மை யோடும் சைவமாம் சமயம் சாரும் 
ஊழ்பெற லரிது சால உயர்சிவ ஞானத் தாலே 
போழிள மதியி னானைப் போற்றுவார் அருள்பெற் றாரே. 181
மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காயம் 
ஆனிடத் தைந்து மாடும் அரன்பணிக் காக வன்றோ 
வானிடத் தவரும் மண்மேல் வந்தரன் றனைஅர்ச் சிப்பர் 
ஊனெடுத் துழலும் ஊமர் ஒன்றையும் உணரார். 182
கருவினுள் அழிவ தாயும் கழிந்திடா தழிவ தாயும் 
பரிணமித் தழிவ தாயும் பாலனாய் அழிவ தாயும் 
தருணனாய் அழிவ தாயும் தான்நரைத் தழிவ தாயும் 
உருவமே யழியே யானால் உள்ளபோ தேபார் உய்ய. 183
ஒருபுலன் நுகரும் போதங் கொன்றில்லை ஒன்றன் பாலும் 
வருபயன் மாறி மாறி வந்திடும் எல்லாம் மாறும் 
ஒருபொழு துணரி னுண்டாம் அல்லதிவ் வல்லல் வாழ்க்கை 
மருள்கன வதுவும் போல மாயும்பின் மாயு மன்றே. 184
அரிசனம் பூசி மாலை அணிந்துபொன் னாடை சாத்திப் 
பரிசனம் பின்பு செல்லப் பாரகர் பரிக்கக் கொட்ட 
வரிசின்ன மூதத் தொங்கல் வந்திட வுணர்வு மாண்டு 
பெரியவர் பேச்சு மின்றிக் கிடத்தலால் பிணத்தோ டொப்பர். 185
பிணத்தினை ஒத்து வாழ்வோர் பின்னடைப் பிணங்கள் போல 
உணக்கியே உழல்வீர் உங்க ளுடலுயிர் உணர்வு மெல்லாம் 
கணத்திடைத் தோன்றி மாயும் காயமென் றறிந்தொ ருக்கால் 
வணக்குறீர் அரனை என்றும் வானவர் வணங்க வைப்பன். 186
மூன்றாஞ் சூத்திரம் (187- 190)
உயிரெனப் படுவ திந்த உடலின்வே றுளதாய் உற்றுச் 
செயிருறும் இச்சா ஞானச் செய்திக ளுடைய தாகிப் 
பயில்வுறும் இன்பத் துன்பப் பலங்களும் நுகரும் பார்க்கில் 
துயிலொடும் அஞ்ச வத்தைப் படும்உண்மை துரியா தீதம். 187
உடலின்வே றுயிரேன் இந்த உடலன்றோ உணர்வ தென்னின் 
உடல்சவ மான போதும் உடலினுக் குணர்வுண் டோதான் 
உடலினின் வாயுப் போனால் உணர்ச்சியின் றுடலுக்கென்னின் 
உடலினின் வாயுப் போகா துறக்கத்தும் உணர்வ தின்றே. 188
அறிவதைம் பொறியே யென்னின் உறக்கத்தி னறியாவாகும் 
அறிவதும் ஒன்றொன் றாக ஒன்றொன்றாய் அறியு மென்னின் 
அறிவுக ளொன்றை யொன்றங் கறிந்திடா ஐந்தையுங் கொண்(டு) 
அறிவதொன் றுண்ட தான்மா ஐம்பொறி அறிந்தி டாவே. 189
அறிந்திடும் பிராண வாயு அடங்குதல் விடுதல் செய்தால் 
அறிந்திடா துடலு றக்கத் தறிவின்மை கரண மின்மை 
அறிந்திடு முதலி யாகின் அதுநிற்கக் கரணம் போகா 
அறிந்திடும் பிராணன் தன்னை அடக்கியும் விட்டும் ஆன்மா. 190
இலக்கணவியல்
நான்காஞ் சூத்திரம் (191 - 230)
உணர்வன கரண மென்னின் ஒன்றையொன் றுணரா வெவ்வே(று) 
அணைதருஞ் செயல்கள் நான்கும் அறிந்தவை அடக்கி ஆக்கிப் 
புணருமுட் கரண மாக்கிப் புறக்கரு வியினும் போக்கி 
இணைதரு மிவற்றின் வேறாய் யானென தென்ப தான்மா. 191
கருவியாம் மனமும் புத்தி அகங்காரம் சித்தம் நான்கும் 
மருவிஆன் மாவே என்ன வரும்தீப மெனத்தெ ரிந்தாங்(கு) 
ஒருவியான் மாவி னுண்மை உணர்ந்தவர் தமையு ணர்ந்தோர் 
தருமிது பசுஞா னம்பின் சிவஞானந் தனக்கு மேலாம். 192
அவ்வுடன் உவ்வும் மவ்வும் மனம் மனம்புத்தி அகங்கா ரங்கள் 
செவ்விய விந்து நாதஞ் சித்தமோ டுள்ள மாகும் 
ஒவ்வெனும் எழுத்தாம் ஐந்தும் உணர்வுதித் தொடுங்குமா 
பவ்வமும் திரையும் போலும் பார்க்கில்இப் பண்புந் தோன்றும். 193
அயன்அரி அரனு மீசர் சதாசிவம் அதிதெய் வங்கள் 
உயவரும் அவ்வோ டுவ்வு மவ்விந்து நாதங் கட்குப் 
பயனுறும் அஞ்சில் ஆன்மாப் பரவிடில் அசித்தாம் பார்க்கில் 
சயமுறு வளியி ரண்டும் தவிர்த்துறில் தானுந் தோன்றும். 194
ஆன்மாவின் வடிவு தானே அநேகார்த்தக் கூட்ட மென்னில் 
பார்ப்பார்கட் கான்மா இன்றாய்ப் பலபொரு ளுண்மையாகும் 
சேர்ப்பாய பலவே உண்மை என்றிடில் சென்றி வற்றை 
ஓர்ப்பான்வே றுணர்வோர்க் கெல்லாம் உணர்பொருள் வேறதாமே. 195
அறிவிச்சை செயல்களெல்லாம் அடைந்தனல் வெம்மை யும்போல் 
குறியுற்றங் கேகா நேக குணகுணி பாவ மாகி 
நெறியுற்று நிற்கு மென்னில் நிகழபுலன் கரண மெல்லாம் 
செறிவுற்றங் கறிவு கொள்ள வேண்டுமா சீவ னார்க்கே. 196
குணங்களை யின்றி யொன்றாம் குறியு டைத்தான்மா வென்னின் 
இணங்கிடா இச்சா ஞானக் கிரியைகள் இவையு டற்கட் 
பிணங்கிடுஞ் சந்நி திக்கண் எனிற்பிணத் துறக்கத் தின்றாம் 
உணங்கிடும் கரண மென்னில் சந்நிதி ஒழிந்த தன்றே. 197
சந்நிதி குணம தாகும் தானென்போல் என்னிற் காந்தம் 
முன்னிரும் பென்றா யீர்க்கு முறைமையுண் டகற்ற லின்றாம் 
உன்னுத லொடுங்கல் ஓடல் இருத்தலே கிடத்தல் நிற்றல் 
என்னுமித் தொழில்கள் மற்றும் இயற்றுவ தான்மா வென்னே. 198
உருவுயி ரென்னின் இந்த உடலினுட் காண வேண்டும் 
வருவது பரிணா மத்தாய் அநித்தமாம் பூத மாகும் 
கருவினில் நுழையு மாறும் காட்டிட வேண்டும் கண்ணின் 
மருவிடா தென்னின் உன்றன் வாயினால் உருவன் றென்னே. 199
சூக்கும உருவ தென்னில் தூலகா ரணம் தாகும் 
ஆக்கிய மனாதி தன்மாத் திரைவடி வசேத னம்பின் 
நீக்கிய சூக்கு மத்தே நிற்பதோ ருருவுண் டென்னின் 
ஆக்கிடும் உருவமெல்லாம் அசித்துமாய் அநித்த மாமே. 200
அருவுரு வென்னில் ஆன்மா அருவுரு வாவ தின்றாம் 
உருவரு வாகா தாகும் ஒருபொருட் கிரண்டு தன்மை 
வருவது மில்லை காட்ட வன்னிபோல் மருவு மென்னின் 
உருவமுங் காண வேண்டும் உண்மையும் ஒழிந்து போமே. 201
சந்திரன் வடிவு போலத் தான்அரு வுருவ மென்னின் 
வந்துநங் கண்ணிற் றோனறும் வடிவுள தாமு யிர்க்கும் 
இந்தவூ னுருவந் தானாய் எழுவது முயிரே யென்னில் 
பந்தமாய் அசித்தா யான்மாப் பவுதிக மாகு மன்றே. 202
அருவவி காரி யான்மா ஆகாயம் போல வென்னின் 
உருவினைக் கட்டி யாட்டி ஓட்டிமீட் டுலாவப் பண்ணி 
மருவிநிற் பிதி ருத்திக் கிடத்திமண் புரட்டி மற்றும் 
பெருவிகா ரங்க ளெல்லாம் தருவதென் பேசி டாயே. 203
அசித்தெனின் உணராதான்மா அசித்துச்சித் தாகுமென்னின் 
அசித்துச்சித் தாகா தாகும் சித்தசித் தாவ தில்லை 
அசித்தொரு புறமா யொன்றில் சித்தொரு புறமாய்நில்லா(து) 
அசித்துறாச் சித்தே யென்னின் அசித்தடைந் தறிவ தின்றாம். 204
உயிரினை அணுவ தென்னின் உடல்பல துவார மோடும் 
பயில்வுறக் கட்டு ணாது பாரமும் தரித்துச் செல்லா(து) 
அயர்வுறும் அசித்தாய்ப் பூத அணுக்களி னொன்ற தாகும் 
இயல்புறும் அவய வத்தால் அணுவுரு இறக்கு மன்றே. 205
உடலினின் ஏக தேசி உயிரெனின் உருவாய் மாயும் 
படர்வுறு மறிவின் றெங்கும் சுடரொளிப் பண்ப தென்னில் 
சுடர்தொடிற் சுடுவ தெங்கும் தொட்டிடம் அறிவுண் டாகும் 
அடர்புலன் இடத்து மொக்க அறிவெழ வேண்டுமன்றே. 206
உருவினில் நிறைந்து நின்றங் குணர்ந்திடும் உயிர தென்னின் 
மருவிடா துறக்கம் வாயில் அறிவொக்க வழங்க வேண்டும் 
பெருகிடும் சுருங்கும் போதம் பேருடல் சிற்று டற்கண் 
வருமுடற் குறைக்க வொக்கக் குறைந்துபின் மாயுமன்றே. 207
எங்குந்தான் வியாபி யாய்நின் றுணரும்இவ் வான்மா வென்னில், 
தங்கிடும் அவத்த போக்கு வரவுகள் சாற்றால் வேண்டும், 
பங்கமார் புலனொன் றொன்றாய்ப் பார்த்திடல் பகரல் வேண்டும், 
இங்கெலாம் ஒழிந்தான் நிற்ப தெங்ஙனம் இயம்பல் வேண்டும். 208
சுத்தமாம் ஆன்ம சித்தைத் துகளுடல் மறைத்த தென்னின் 
வைத்துறா துடற்கண் வாயில் கரணங்கள் வழியால் ஞானம் 
ஒத்துறும் மலமற் றாலும் உறுமலம் வீடு மின்றாம் 
பெத்தமு மடையான் முத்த னாய்ப்பிர காச னாமே. 209
அசித்தரு வியாப கம்போல் வியாபகம் அருவ மின்றாய் 
வசித்திட வரும்வி யாபி யெனும்வழக் குடைய னாகி 
நசித்திடா ஞானச் செய்தி அநாதியே மறைத்து நிற்கும் 
பசுத்துவ முடைய னாகிப் பசுவென நிற்கு மான்மா. 210
மாயையின் வயிற்றுள் மன்னி வருஞ்செயல் ஞான மிச்சை 
ஏயுமக் கலாதி மூன்றால் ஏகதே சத்தி னேய்ந்திங்(கு) 
ஆயுமுக் குணங்கள் அந்தக் கரணங்க ளாதி யெல்லாம் 
காயபெத் தங்க ளாகிக் கலந்துடன் நிற்கு மான்மா. 211
சூக்கும தேகி யாகித் தூலரூ பத்தின் மன்னிச் 
சாக்கிர முதலா யுள்ள அவத்தையுள் தங்கி யெங்கும் 
போக்கொடு வரவு மெல்லாம் புரிந்துபுண் ணியங்கள் பாவம் 
ஆக்கியும் பலன்க ளெல்லாம் அருந்தியும் நிற்கு மான்மா. 212
மருவா னந்தம் விஞ்ஞான மனோபி ராணன் அன்னமயம் 
உருவாந் தன்மை யுண்டாய்மு ஒன்றுக் கொன்று சூக்குமமாய் 
வருமாம் அன்ன மயம்பற்றி மாயை முதற்கா ரணமாகும் 
அருவா யான்மாஐங் கோசத்தார்ப் புண்டவற்றின் அகம் புறமாம். 213
தோற்பாவைக் கூத்தும் தொல்லை மரப்பாவை இயக்கமும் சீர்த் 
தேர்ப்பாரிற் செலவும்வேறாய்ச் செலுத்துவோர் செய்திதானும் 
பார்ப்பாய வேடங் கட்டி ஆடுவோர் பரிசு போலும் 
ஆர்ப்பாய காயந் தன்னை ஆன்மாநின் றாட்டு மாறே. 214
என்னுடல் பொறிபி ராணன் கரணம்என் னுணர்வென் றக்கால் 
தன்னின்வே றாகும் நீஎன் றன்மனை யென்ற வெல்லாம் 
நின்னின்வே றாகும் என்னின் நீங்கிடா இவையிங் கென்னின் 
உன்னின வாகும் நீயாம் உகிர்மயிர் உகவுங் காண்டி. 215
பொன்னணி யாடை மாலை போதுமே லான போதிங்(கு) 
என்னணி யானென் றுன்னி இருந்தனை பிரிந்த போது 
நின்னணி நீயு மல்ல வாயினை காய நின்னில் 
அன்னிய மாகும் உன்னை அறிந்துநீ பிரிந்து பாரே. 216
உடலியா னல்லேன் இந்த உணர்வுயான் அல்ல வான 
கடனியா தென்னின் வேறு கண்டுணர் வென்ன தென்னகை 
இடரிலா என்ற னான்மா என்றபோ தான்மா வேறோ 
திடனதா உயிரை வேறு கண்டிடார் செப்ப லேகாண். 217
புந்தியை மனம தென்றும் மனமது புந்தி யென்றும் 
சிந்தையைச் சீவ னென்றும் சீவனைச் சிந்தை யென்றும் 
முந்தனை யான்மா வென்றும் ஆன்மாவை முந்த னென்றும் 
வந்திடு மென்ற னான்மா என்றது மற்றொன் றைக்காண். 218
அறிவுடல் சிந்தை யான்மா அணைதலால் ஆன்மா வென்பர் 
எறிசுடர் விளக்கி ருக்கு மிடத்தையும் விளக்கென்றாற்போல் 
பொறிபுலன் கரண மெல்லாம் புலப்படும் அபேத மாகிப் 
பிறிதரா தறிவ தான்மர அறிபொருள் பின்ன மாமே. 219
கண்டுணர் புருடன் வேறு கனவுகண் டொடுங்கிக் காயம் 
உண்டியும் வினையு மின்றிக் கிடந்துயிர்த் திடவு ணர்ந்து 
கண்டிடுங் கனவுஞ் சொல்லி ஒடுக்கமுங் கருதி வேறாய் 
உண்டியும் வினையும் உற்றிங் குணர்த்திட உணரா நிற்கும். 220
புருடனே அறிவ னாகில் பொறிபுல னாதி போதம் 
தருவதென் அறிவு மாயா தனுகர ணாதி பற்றி 
வருவதிங் கநாதி யாக மலத்தினின் மறைந்து நிற்பன் 
அருவனாய் இவற்றோ டாளும் அமைச்சரும் அரசும் போல்வன். 221
படைகொடு பவனி போதும் பார்மன்னன் புகும்போ தில்லில் 
கடைதொறும் விட்டு விட்டுக் காவலு மிட்டுப் பின்னர் 
அடைதருந் தனியே அந்தப் புரத்தினில் அதுபோ லான்மா 
உடலினின் அஞ்ச வத்தை உறுமுயிர் காவ லாக. 222
சாக்கிர முப்பத் தைந்து நுதலினிற் கனவு தன்னில் 
ஆக்கிய இருபத் தைந்து களத்தினிற் சுழுமுனை மூன்று 
நீக்கிய இதயந் தன்னில் துரியத்தி லிரண்டு நாபி 
நோக்கிய துரியா தீதம் நுவலின்மூ லத்தி னொன்றே. 223
இருவகைச் சாக்கி ராதி அவத்தைக ளியல்பு தானும் 
இருவகை கீழே நூக்கி உற்பவங் காட்டு மொன்று 
பெருகமேல் நோக்கித் தீய பிறப்பறுந் திடுமி யோகில் 
தருவதோர் சமாதி தானும் தாந்துபின் சனனஞ் சாரும். 224
அறிதரு முதல வத்தை அடைதரு மிடத்தே ஐந்தும் 
செறிதருங் கரணந் தன்னில் செயல்தொறுபே கண்டு கொள்நீ 
பிறிவிலா ஞானத் தோரும் பிறப்பற அருளா லாங்கே 
குறியொடும் அஞ்ச வத்தை கூடுவர் வீடு கூட. 225
ஐந்துசாக் கிரத்தின் நான்கு கனவினில் சுழுனை மூன்று 
வந்திடுந் துரியந் தன்னின் இரண்டொன்று துரியா தீதம் 
தந்திடும் சாக்கி ராதி அவத்தைகள் தானந் தோறும் 
உந்திடுங் கரணந்தன்னில் செயல்தொறு முணர்ந்து கொள்ளே. 226
கேவல சகல சுத்தம் என்றுமூன் றவத்தை யான்மா 
மேவுவன் கேவ லந்தன் னுண்மைமெய் பொறிக ளெல்லாம் 
காவலன் கொடுத்த போது சகலனா மலங்க ளெல்லாம் 
ஓவின போது சுத்த முடையன்உற் பவந்து டைத்தே. 227
அறிவிலன் அமூர்த்தன் நித்தன் அராகாதி குணங்க ளோடும் 
செறிவிலன் கலாதி யோடும் சேர்விலன் செயல்க ளில்லான் 
குறியிலன் கருத்தா வல்லன் போகத்திற் கொள்கை யில்லான் 
பிறிவிலன் மலத்தி னோடும் வியாபிகேவலத்தில் ஆன்மா. 228
உருவினைக் கொண்டு போக போக்கியத் துன்னல் செப்பல் 
வருசெயல் மருவிச் சத்த மாதியம் விடயம் தன்னில் 
புரிவதுஞ் செய்திங் கெல்லா யோனியும் புக்கு ழன்று 
திரிதரும் சகல மான அவத்தையிற் சீவன் சென்றே. 229
இருவினைச் செயல்க ளொப்பின் ஈசன்தன் சத்தி தோயக் 
குருவருள் பெற்று ஞான யோகத்தைக் குறுகி முன்னைத் 
திரிமல மறுத்துப் பண்டைச் சிற்றறி வொழிந்து ஞானம் 
பெருகிநா யகன்தன் பாதம் பெறுவது சுத்த மாமே.

சுபக்கம்

இரண்டாஞ் சூத்திரம் (91 -186 )
உலகெலா மாகி வேறாய் உடனுமாய் ஒளியாய் ஓங்கி அலகிலா உயிர்கள் கன்மத் தாணையின் அமர்ந்து செல்லத் தலைவனாய் இவற்றின் தன்மை தனக்கெய்த லின்றித் தானே நிலவுசீர் அமல னாகி நின்றனன் நீங்கா தெங்கும். 91
ஒன்றென மறைக ளெல்லாம் உரைத்திட உயிர்கள் ஒன்றி நின்றனன் என்று பன்மை நிகழ்த்துவ தென்னை யென்னின் அன்றவை பதிதான் ஒன்றென் றறையும்அக் கரங்கள் தோறும் சென்றிடும் அகரம் போல நின்றனன் சிவனுஞ் சேர்ந்தே. 92
உருவொடு கருவி யெல்லாம் உயிர்கொடு நின்று வேறாய் வருவது போல ஈசன் உயிர்களின் மருவி வாழ்வன் தருமுயி ரவனை யாகா உயிரவை தானு மாகான் வருபவ னிவைதா னாயும் வேறுமாய் மன்னி நின்றே. 93
இருவினை இன்பத் துன்பத் திவ்வுயிர் பிறந்தி றந்து வருவது போவ தாகும் மன்னிய வினைப்ப லன்கள் தருமரன் தரணி யோடு தராபதி போலத் தாமே மருவிடா வடிவுங் கன்ம பலன்களும் மறுமைக் கண்ணே. 94
இருவினை யென்னை இன்பத் துன்பங்கள் இயல்ப தென்னின் ஒருதன்மை இயல்புக் குள்ள தொருவனுக் கிரண்டு செய்தி வருவதென் மலருந் தீயும் மருவலின் வாசம் வெம்மை தருவதென் நீரென் செய்து தானியல் பாகு மன்றே. 95
தன்னியல் பொழியப் பூவும் தழலும்வந் தணைய நீரின் மன்னிய திரண்டு செய்தி வருமிரு வினையி னானும் உன்னிய இன்பத் துன்பம் உறும்உயி ருணர்வி லாத துன்னிய அசித்தை இன்பத் துன்பங்கள் சூழ்ந்தி டாவே. 96
இம்மையின் முயற்சி யாலே இருநிதி ஈட்டி இன்பம் இம்மையே நுகர்வர் செய்தி இலாதவர் பொருளு மின்றி இம்மையே இடரு ழப்பர் வேறிரு வினைய துண்டேல் இம்மையின் முயற்சி யின்றி எய்திட வேண்டும் இங்கே. 97
இருவினைச் செயல்காண் இம்மை இரும்பொரு ளின்பம் வேண்டி வருவினை செய்யுங் காலை மடிவரும் மடியு மின்றித் தருவினை யதனில் அந்தந் தானறும் துயருந் தங்கும் ஒருவினை செய்யா தோரும் உடையர்இவ் வுலகத் துள்ளே. 98
பேறிழ வின்ப மோடு பிணிமூப்புச் சாக்கா டென்னும் ஆறுமுன் கருவுட் பட்ட தவ்விதி அனுப வத்தால் கூறிடும் முன்பு செய்த கன்மமிங் கிவற்றிற் கேது தேறுநீ இனிச்செய் கன்மம் மேலுடற் சேரு மென்றே. 99
உடற்செயல் கன்மம் இந்த உடல்வந்த வாறே தென்னின் விடப்படு முன்னு டம்பின் வினைஇந்த உடல்வி ளைக்கும் தொடர்ச்சியால் ஒன்றுக் கொன்று தொன்றுதொட் டநாதி வித்தின் இடத்தினின் மரம்ம ரத்தின் வித்தும்வந் தியையு மாபோல். 100
முற்செயல் விதியை இந்த முயற்சியோ டனுப வித்தான் இச்செயல் பலிக்கு மாறென் இதமகி தங்கள் முன்னர் அச்செய லானால் இங்கும் அவைசெயின் மேலைக் காகும் பிற்செயா தனுப விப்ப தின்றுபின் தொடருஞ் செய்தி. 101
மேலைக்கு வித்து மாகி விளைந்தவை உணவு மாகி ஞாலத்து வருமா போல நாம்செய்யும் வினைக ளெல்லாம் மேலத்தான் பலமாச் செய்யும் இதமகி தங்கட் கெல்லாம் மூலத்த தாகி யென்றும் வந்திடும் முறைமை யோடே. 102
இதமகி தங்கள் என்ப திகல்மன வாக்குக் காயத்(து) இதமுயிர்க் குறுதி செய்தல் அகிதமற் றதுசெய் யாமை இதமகி தங்க ளெல்லாம் இறைவனே ஏற்றுக் கொண்டிங்(கு) இதமகி தத்தால் இன்பத் துன்பங்கள் ஈவ னன்றே. 103
இறைவனிங் கேற்ப தென்னை இதமகி தங்க ளென்னின் இறைபர னுயிர்க்கு வைத்த நேசத்தின் நிலைமை யாகும் அறமலி இதஞ்செய் வோருக் கனுக்கிர கத்தைச் செய்வன் மறலி அகிதஞ் செய்யின் நிக்கிர கத்தை வைப்பன். 104
நிக்கிர கங்கள் தானும் நேசத்தால் ஈசன் செய்வ(து) அக்கிர மத்தால் குற்றம் அடித்துத்தீர்த் தச்சம் பண்ணி இக்கிர மத்தி னாலே ஈண்டறம் இயற்றி டென்பன் எக்கிர மத்தி னாலும் இறைசெயல் அருளே யென்றும். 105
தந்தைதாய் பெற்ற தத்தம் புதல்வர்கள் தம்சொ லாற்றின் வந்திடா விடின் உறுக்கி வளாரினால் அடித்துத் தீய பந்தமும் இடுவர் எல்லாம் பார்த்திடில் பரிவே யாகும் இந்தநீர் முறைமை யன்றோ ஈசனார் முனிவு மென்றும். 106
செயல்களே பலத்தைச் செய்யும் தெய்வம்வேண் டாஇங் கென்னின் முயலுமிச் செயல்க ளிங்கே முழுவதும் அழியு மெங்கே பயனளிப் பனவ ழிந்தே பலன்களைப் பண்ணுங் கெட்டே வயலிடும் தழையும் தின்னும் மருந்தும்பின் பலிக்கு மாபோல். 107
செய்க்கிடுந் தழையும் தின்னுந் திரவிய மதுவும் போல உய்த்திடுஞ் செய்தி கெட்டே உறுவிக்கும் பலத்தை யென்னி வைத்திடுஞ் சோறும் பாக்கும் அருந்தினர் வயிற்றின்மாய்ந்தால் மெய்த்திடும் பலம்உனக்கு மலமலான் வேறு முண்டோ. 108
திரவியம் உவமை யன்று செய்திக்கண் திரவி யங்கள் விரவிய விடத்தே வீந்து பலந்தரும் இம்மை அம்மை பரவிநீ பார்நீர் அங்கி பாததிரத் திட்ட வெல்லாம் கரவிடு மிங்கே எங்கே பலன்கொளக் கருதி னாயே. 109
செய்தவர் மனத்தே எல்லாச் செய்தியும் கிடந்து பின்னர் எய்தவே பலன்க ளீனும் என்றிடின் இருஞ் சுவர்க்கம் பொய்யர்வாழ் நரகம் பூமி புந்தியிற் கிடந்து போந்த(து) ஐயனே அழகி துன்சொல் இந்திர சால மாய்த்தே. 110
தானஞ்செய் பொருள் தரித்தோர் செய்தவர் தக்க செய்தி ஊனம்பின் னுறவே காண்டும் பலமுறு விப்பான் வேண்டும் ஈனமில் செய்தி ஈச னிடும்பணி இவைநாம் செய்தால் நூனங்கள் அதிக நோக்கி நகர்விப்பன் வினைநோய் தீர. 111
உலகுடல் கரணங் காலம் உறுபலம் நியதி செய்தி பலவிவை கொண்டுகன்மம் பண்ணுவ துண்பதானால் நிலவிடா திவைதாம் சென்று நினைந்துயிர் நிறுத்திக் கொள்ளா(து) அலகிலா அறிவ னாணை அணைத்திடும் அருளி னாலே. 112
ஒழுக்கம்அன் பருள்ஆ சாரம் உபசாரம் உறவு சீலம் வழுக்கிலாத் தவம்தா னங்கள் வந்தித்தல் வணங்கல் வாய்மை அழுக்கிலாத் துறவ டக்கம் அறிவொடர்ச் சித்த லாதி இழுக்கிலா அறங்க ளானால் இரங்குவான் பணிய றங்கள். 113
மனமது நினைய வாக்கு வழுத்தமந் திரங்கள் சொல்ல இனமலர் கையிற் கொண்டங் கிச்சித்த தெய்வம் போற்றிச் சினமுத லகற்றி வாழும் செயலற மானா லியார்க்கும் முனமொரு தெய்வ மெங்கும் செயற்குமுன் னிலையா மன்றே. 114
யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள் வேதனைப் படும் இறக்கும் பிறக்கும்மேல் வினையுஞ் செய்யும் ஆதலான் இவையி லாதான் அறிந்தருள் செய்வ னன்றே. 115
இங்குநாம் சிலர்க்குப் பூசை இயற்றினால் இவர்களோவந்(து) அங்குவான் தருவா ரன்றேல் அத்தெய்வ மத்த னைக்காண் எங்கும்வாழ் தெய்வமெல்லாம் இறைவனாணையினால் நிற்ப(து) அங்குநாம் செய்யுஞ் செய்திக் காணைவைப் பால ளிப்பன். 116
காண்பவன் சிவனே யானால் அவனடிக் கன்பு செய்கை மாண்பறம் அரன்றன் பாதம் மறந்துசெய் அறங்களெல்லாம் வீண்செய லிறைவன் சொன்ன விதியறம் விருப்பொன்றில்லான் பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே. 117
தாபர சங்க மங்க ளென்றிரண் டுசரவில் நின்று மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க் கருளை வைப்பன் நீபரன் தன்னை நெஞ்சில் நினைவையேல் நிறைந்த பூசை யாய்பரம் பொருளை நாளும் அர்ச்சிநீ அன்பு செய்தே. 118
அரனடிக் கன்பர் செய்யும் பாவமும் அறம தாகும் பரனடிக் கன்பி லாதார் புண்ணியம் பாவ மாகும் வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி நரரினிற் பாலன் செய்த பாதகம் நன்மை யாய்த்தே. 119
மறைகளீ சன்சொல் அச்சொல் வழவாரா உயிரை வைக்கும், சிறைகள்மா நிரயம் இட்ட பணிசெய்வோர் செல்வத் தோடும், உறையும்மா பதிகள் உம்ப ருலங்கள் யோனிக் கெல்லாம், இறைவனா ணையினால் இன்பத் துன்பங்கள் இயைவதாகும். 120
ஆணையால் அவனி மன்னன் அருமறை முறைசெய் யாரை ஆணையில் தண்டஞ் செய்தும் அருஞ்சிறை யிட்டும் வைப்பன் ஆணையின் வழிசெல் வோருக் கரும்பதி செல்வம் நல்கி ஆணையும் வைப்பன் எங்கும் ஆணையே ஆணை யேகாண். 121
அரசனும் செய்வ தீசன் அருள்வழி அரும்பா வங்கள் தரையுளோர் செய்யில் தீய தண்டலின் வைத்துத் தண்டத் துரைசெய்து தீர்ப்பன் பின்பு சொல்வழி நடப்பர் தூயோர் நிரயமும் சேரார் அந்த நிரயமுன் நீர்மை ஈதாம். 122
அருளினால் உரைத்த நூலின் வழிவாரா ததன்மஞ் செய்யின் இருளுலா நிரயத் துன்பத் திட்டிரும் பாவந் தீர்ப்பன்பொருளுலாஞ் சுவர்க்க மாதி போகத்தாற் புணியந் தீர்ப்பன் மருளுலா மலங்கள் தீர்க்கும் மருந்திவை வயித்ய நாதன். 123
மருத்துவன் உரைத்த நூலின் வழிவரிற் பிணிகள் வாரா வருத்திடும் பிணிகள் தப்பில் தப்பிய வழியுஞ் செய்யத் திருத்தினன் மருந்து செய்யா துறும்பிணி சென்றுந் தீர்ப்பன் உரைத்தநூற் சிவனுமின்னே உறுங்கன்ம மூட்டித் தீர்ப்பன். 124
மண்ணுளே சிலவி யாதி மருத்துவன் அருத்தி யோடும் திண்ணமா யறுத்துக் கீறித் தீர்த்திடுஞ் சிலநோ யெல்லாம் கண்ணிய கட்டி பாலும் கலந்துடன் கொடுத்துத் தீர்ப்பன் அண்ணலும் இன்பத் துன்பம் அருத்தியே வினைய றுப்பன். 125
பூதனா சரீரம் போனால் புரியட்ட ரூபந் தானே யாதனா சரீர மாகி இன்பத்துன் பங்க ளெல்லாம் நாதனார் ஆணை யுய்க்க நரகொடு சுவர்க்கம் துய்த்துத் தீதிலா அணுவா யோனி சேர்ந்திடும் சீவ னெல்லாம். 126
உடல்விடா யோனி பற்றி உதிப்பினும் உதிக்கு மொன்றிற் படர்வுறா துறும்பா வத்தாற் பாடாணம் போற்கி டந்து கடனதாம் காலஞ் சென்றாற் கடுநர கதனில் வீழ்ந்தங்(கு) இடருறும் உருவங்கன்மத் தளவினில் எடுக்கு மன்றே. 127
பன்னகம் அண்ட சங்கள் பரகாயந் தன்னிற் பாய்வோர் துன்னுதோல் முட்டை யாக்கை துறந்துசெல் வதுவே போல உன்னிய வுயிர்கள் தூல வுடல்விட்டு வானி னூடு மன்னிடு நனவு மாறிக் கனவினை மருவு மாபோல். 128
தன்மமோ டதன்ம வாகித் தானிரு பயனுந் தந்து நன்மைதீ மையினு மின்பத் துன்பினு நாடிக் காண முன்னமே ஆன்மா வின்தன் மும்மலத் தொன்ற தாகிக் கன்மமு மூலங் காட்டிக் காமிய மலமாய் நிற்கும். 129
இருவினை அநாதி யாதி இயற்றலால் நுகர்வால் அந்தம் வருமலஞ் சார்ந்து மாயா உருவுகள் மருவி யார்த்துத் தருசெயல் முறைமை யாலே தான்பல பேதங் காட்டி அருவதாய் நின்ற ரன்தன் ஆணையின் அமர்ந்து செல்லும். 130
சங்கமம் தாப ரங்கள் தத்தம்கன் மத்துக் கீடா அங்குரு யோனி மாறும் அச்சுமா றாதிங் கென்னின் இங்குமா னுடரி யற்றும் புண்ணியத் தின்ப ஈட்டம் இங்குவான் சுரர்ளாயோ நரர்களாய் அருந்து வாரோ. 131
நரர்களாய்த் துய்ப்ப ரென்னின் நரர்பதி சுரரு லோகம் சுரர்களாய்த் துய்ப்ப ரென்னிற் சொன்னஅச் சழியு மாகும் சுரர்களாய்ப் பலன்கள் துய்த்துத் தாமிங்குத் தோன்றும் போது நரர்களாய்ப் பிறப்பர் ஞாலத் தமரராய் நண்ணிடாரே. 132
வண்டுக ளாகி மாறும் மயிர்க்குட்டி மற்றோர் செந்துப் பண்டைய உருவந் தானே வேட்டுவ னாய்ப்பி றக்கும் கண்டுகொள் யோனி யெல்லாம் கன்மத்தால் மாறு மென்றே கொண்டன சமய மெல்லாம் இச்சொல் நீ கொண்ட தெங்கே. 133
அகலியை கல்ல தானாள் அரிபல பிறவி யானான் பகலவன் குலத்திற் றோன்றிப் பாரெலா முழுதும் ஆண்டு நிகரிலா அரச னாகும் நிலந்திநீ டுலகம் போற்றச் சகமதில் எலிதா னன்றோ மாவலி யாய்த்துத் தானே. 134
செப்பினாய் மாற வேறு சிலர்விதி யாலே கன்மால் வைப்புறு மியோனி எல்லாம் மாறிவந் திடாவிங் கென்னின் எப்படி யானுஞ் செய்திக் கிறைகரி யாவ னென்றே முற்பட மொழிந்தே னெல்லாம் முதல்வன்தன் விதியே யாகும். 135
அவ்வவ யோனி தோறும் அவ்வவ உலகந் தோறும் செவ்விதின் அறிந்து கன்மம் சேர்ந்திடா சீவன் சேரா இவ்வகை தம்மிற் சேர்வும் இறைசெய லானாற் செய்த எவ்வுரு வுந்தன் கன்மான் மாற்றுவன் இறைவன் தானே. 136
மாறியிவ் வுருவ மெல்லாம் வருவதெங் கேநின் றென்னில் கூறிய சூக்கு மத்தாம் உருவெனிற் குறியொன் றென்னின் வேறொரு குறியா மாரம் வீரசங் கிலியு மாகும் தேறுநீ யொருவ னாலிச் செயலெலாம் சிவனா லாகும். 137
சூக்குமங் கெட்டுத் தூலந் தோன்றிடா சூக்கு மத்தின் ஆக்கியோ ருடல்கி டப்ப தின்றுட லாக்குந் தன்மைக்(கு) ஓக்கிய சத்தி யுண்டாய் உடல்தருங் காலம் உற்று நீக்கிட மரம்பின் வேரோர் நீள்மர நிகழ்த்து மாபோல். 138
விதிப்படிச் சூக்கு மத்தே உருவரும் வினையா லிங்கே உதித்திடா உருவ மாக உருவரு மரங்கள் வித்தில் கதித்தெழு மரமும் வித்தும் கழியும்பின் அழியுஞ் சூக்க மதிக்கெழு கலைகள் போல வருவது போவ தாமே. 139
தூலமா முருவி னுக்குச் சூக்கும முதல தற்கு மூலமா னதற்கு மூல மோகினி அதன்மு தற்றான் மேலதாம் விந்து சத்தி சிவமிவை மிசையா மெல்லாம் சாலவின் றாகும் ஆன்மாச் சிவத்தினைச் சார்ந்த போது. 140
அரன்விதி யருள தென்றே அறைந்தனம் அதுவு முன்னே தரைநர கருந்து றக்கம் தனுகர ணாதி யெல்லாம் வருவதுஞ் செய்த நாதி மலங்களிம் மருந்தால் தீர்த்துப் பரகதி யதுவுந் தந்து பாதபங் கயமும் சூட்டும். 141
எழுமுடல் கரண மாதி இவைமலம் மலம லத்தாற் கழுவுவ னென்று சொன்ன காரண மென்னை யென்னில் செழுநவ அறுவை சாணி உவர்செறி வித்த ழுக்கை முழுவதுங் கழிப்பன்மாயை கொடுமல மொழிப்பன் முன்னோன். 142
நித்தமாய் அருவாய் ஏக நிலையதாய் உலகத் திற்கோர் வித்துமாய் அசித்தா யெங்கும் வியாபியாய் விமல னுக்கோர் சத்தியாய்ப் புவன போகந் தனுகர ணமும்உ யிர்க்காய் வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யு மன்றே. 143
மாயையிற் கால மோடு நியதிபின் கலாதி தோன்றும் ஆயஅக் கால மூன்றாய் ஆக்கியு மளித்தும் போக்கிக் காயமோ டுலகுக் கெல்லாம் காலசங் கையினைப் பண்ணி நாயக னாணை யாலே நடத்திடுஞ் சகத்தை யெல்லாம். 144
நியதிபின் தோன்றிக் கன்ம நிச்சயம் பண்ணி நிற்கும் அயர்விலாக் கலைபின் தோன்றி ஆணவம் ஒதுக்கிச் சித்தின் செயல்புரி கிரியா சத்தி தெரிவிக்குஞ் சிறிதே வித்தை உயர்கலை யதனில் தோன்றி அறிவினை உதிக்கப் பண்ணும். 145
விச்சையின் அராகந் தோன்றி வினைவழி போகத் தின்கண் இச்சையைப் பண்ணி நிற்கும் தொழிலறி விச்சை மூன்றும் வைச்சபோ திச்சா ஞானக் கிரியைமுன் மருவி ஆன்மா நிச்சயம் புருட னாகிப் பொதுமையின் நிற்ப னன்றே. 146
வருங்குண வடிவாய் மூலப் பிரகிருதி கலையில் தோன்றித் தருங்குண மூன்றாய் ஒன்றிற் றான்மூன்றாய் மும்மூன் றாகும் இருங்குண ரூப மாகி இயைந்திடு மெங்கும் ஆன்மாப் பெருங்குண வடிவாய்ப் போக சாதனம் பெந்த மாமே. 147
சித்தமாம் அவ்வி யத்தம் சிந்தனை யதுவுஞ் செய்யுஞ் புத்திஅவ் வியத்தில் தோன்றிப் புண்ணிய பாவஞ் சார்ந்து வத்துநிச் சயமும் பண்ணி வருஞ்சுக துக்க மோகப் பித்தினின் மயங்கி ஞானக் கிரியையும் பேணி நிற்கும். 148
ஆங்காரம் புத்தி யின்கண் உதித்தகந் தைக்கு வித்தாய் ஈங்கார்தான் என்னோ டொப்பார் என்றியான் என்ன தென்றே நீங்காதே நிற்குந் தானும் மூன்றதாய் நிகழு மென்பர் பாங்கார்பூ தாதி வைகா ரிகம்தைச தம்தா னென்றே. 149
மதுமது தைச தத்தின் வந்தொரு பொருளை முந்தி நினைவதுஞ் செய்தங் கைய நிலைமையின் நிற்கு மாங்கே இனமல சோத்தி ராதி கன்மஇந் திரிய மெல்லாம் முனமுரை செய்த வைகா ரிகம்தரு மென்பர் முன்னோர். 150
நற்செவி துவக்குக் கண்நா நாசிஐந் தினையு நல்லோர் புத்திஇந் திரிய மென்று புகன்றனர் இவைத மக்குச் சத்தநற் பரிச ரூப இரதகந் தங்க ளைந்தும் வைத்தனர் விடய மாக அடைவினின் மருவு மென்றே. 151
வாக்கொடு பாதம் பாணி பாயுவோ டுபத்த மைந்து நீக்கினர் முன்னே கன்மேந் திரியங்க ளெனநி னைந்தே ஆக்கிய வசன கமன தானமும் விசர்க்கா னந்தம் ஊக்கமார் ஐந்து மைந்தின் தொழிலென ஓதி னாரே. 152
வாயாதி சோத்தி ராதி புறத்துவாழ் கருவி யாகும் ஓயாத மனாதி காயத் துணருமுட் கருவி யாகும் ஆய்வார்கட் கராக மாதி அவற்றினுட் கருவி யென்பர் மாயாள்தன் வயிற்றி வற்றால் துடக்குண்டு வாழு மான்மா. 153
ஓசைநற் பரிச ரூப இரதகந் தங்க ளென்று பேசுமாத் திரைக ளைந்தும் பிறக்கும்பூ தாதி கத்தின் நேசஇந் திரியங் கட்கு நிகழறி விதனாற் காண்டும் ஆசைசேர் மனாதி தன்மாத் திரைபுரி யட்ட கந்தான். 154
சாற்றிய பஞ்ச தன்மாத் திரைகளிற் சத்த முன்னாத் தோற்றும்வான் வளிதீ நீர்மண் தொடக்கியே ஒன்றுக்கொன்றங்(கு) ஏற்ற மாமோசை யாதி இருங்குண மியைந்து நிற்கும் ஆற்றவே விடய பூதம் அங்காங்கி பாவத் தாமே. 155
இரந்தர மாகி வான்றான் இடங்கொடுத் திடும்ச லித்துப் பரந்தவை திரட்டும் கால்தீச் சுட்டொன்று வித்தல் பண்ணும் நிரந்தரங் குளிர்ந்து நின்று பதஞ்செயும் நீர்மண் தானும் உரந்தரு கடின மாகித் தரித்திடும் உணர்ந்து கொள்ளே. 156
மண்புனல் அனல்கான் வான்பால் படிவுநாற் கோண மாகும் தண்பிறை மூன்று கோணம் தகுமறு கோணம் வட்டம் வண்பொன்மை வெண்மை செம்மைகறுப்பொடு தூமவன்னம் எண்தரும் எழுத்துத் தானும் லவரய ஹவ்வு மாமே. 157
குறிகள்வச் சிரத்தி னோடு கோகந தஞ்சு வத்தி அறுபுள்ளி அமுத விந்து அதிதெய்வம் அயன்மா லாதி செறிபுக ழீச னோடு சதாசிவம் பூத தெய்வம் நெறிதரு கலைஐந் திற்கும் நிகழ்த்துவர் இந்த நீர்மை. 158
சுத்ததத் துவங்க ளென்று முன்னமே சொன்ன ஐந்தும் இத்தகை மையின்இ யம்பும் இவைமுப்பத் தொன்று மாகத் தத்துவ முப்பத் தாறாஞ் சைதன்னி யங்க ளைந்து சித்தசித் தான்மா வொன்று முப்பதும் அசித்தே செப்பில். 159
ஐந்துசுத் தத்தின் கீழேழ் சுத்தாசுத் தம்அ சுத்தந் தந்திடும் புமான்கீ ழெண்மூன் றாயதத் துவஞ்சீ வற்கு வந்திடும் பிரேர காண்டம் மருவுபோக சயித்தி ரத்தோ(டு) அந்தமில் அணுக்க ளுக்குப் போக்கிய காண்ட மாமே. 160
தத்துவ ரூப மாகும் தரும்அரு வுருவ மெல்லாம் தத்துவம் தூல சூக்க பரங்களு மாகி நிற்கும் தத்துவம் தன்னிற் சாரும் அணுக்கள்சா தாக்கி யத்தில் தத்துவ சத்தம் சாரும் சகலமும் தத்து வங்காண். 161
தத்துவம் எண்மூன் றும்சென்(று) ஆன்மதத் துவத்தொ டுங்கும், வித்தையி னொடுங்கும் ஆறும் சிவத்தினி னொடுங்கும் மூன்றும், நித்ததத் துவம்இம் மூன்றும் என்பர்கள் இரண்டு நின்ற, சுத்தமாம் சிவத்தொ டுங்கும் தோற்றமும் இதுபோ லாகும். 162
மொய்தரு பூத மாதி மோகினி அந்த மாகப் பொய்தரு சமய மெல்லாம் புக்குநின் றிடும்பு கன்று மெய்தருஞ் சைவ மாதி இருமூன்றும் வித்தை யாதி எய்துதத் துவங்க ளேயும் ஒன்றுமின் றெம்மி றைக்கே. 163
சிவஞ்சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன் உவந்தருள் உருத்தி ரன்தான் மால்அயன் ஒன்றினொன்றாய்ப் பவந்தரும் அருவ நாலிங் குருவநா லுபய மொன்றாய் நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்ப னென்பர். 164
சத்தியாய் விந்து சத்தி யாய்மனோன் மனிதா னாகி ஒத்துறு மகேசை யாகி உமைதிரு வாணி யாகி வைத்துறும் சிவாதிக் கிங்ஙன் வருஞ்சத்தி யொருத்தி யாகும் எத்திற நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள். 165
சத்திதான் நாத மாதி தானாகுஞ் சிவமு மந்தச் சத்திதா னாதி யாகும் தரும்வடி வான வெல்லாம் சத்தியும் சிவமு மாகும் சத்திதான் சத்த னுக்கோர் சத்தியாம் சத்தன் வேண்டிற் றெல்லாமாஞ் சத்திதானே. 166
சிவம்சத்தி தன்னை ஈன்றும் சத்திதான் சிவத்தை ஈன்றும் உவந்திரு வரும்பு ணர்ந்திங் குலகுயி ரெல்லா மீன்றும் பவன்பிரம சாரி யாகும் பான்மொழி கன்னி யாகும் தவந்தரு ஞானத் தோர்க்கித் தன்மைதான் தெரியுமன்றே. 167
தனுகரண புவன போகம் தற்பரம் பந்தம் வீடென்(று) அணுவினோ டெல்லா மாகி அடைந்திடுந் தத்து வங்கள் இனிதறிந் திவைநி விர்த்தி முதல்கலை யிடத்தே நீக்கி நனிபர முணர்ந்தோ னந்தத் தத்துவ ஞானி யாவன். 168
எல்லாமாய்த் தத்துவங்கள் இயைந்ததென் அணுவுக் கென்னில் தொல்லாய கன்மமெல்லாம் துய்ப்பித்துத் துடைத்தற் கும்பின் நில்லாமை முற்று வித்து நீக்கவும் கூடி நின்ற பொல்லாத ஆணவத்தைப் போக்கவும் புகுந்த தன்றே. 169
ஒன்றதாய் அநேக சத்தி யுடையதாய் உடனாய் ஆதி அன்றதாய் ஆன்மா வின்தன் அறிவொடு தொழிலை ஆர்த்து நின்றுபோத் திருத்து வத்தை நிகழ்த்திச்செம் பினிற்களிம்பேய்ந்(து) என்றும்அஞ் ஞானங் காட்டும் ஆணவம் இயைந்து நின்றே. 170
மலமென வேறொன் றில்லை மாயாகா ரியம தென்னின் இலகுயிர்க் கிச்சா ஞானக் கிரியைகள் எழுப்பும் மாயை விலகிடும் மலமி வற்றை வேறுமன் றதுவே றாகி உலகுடல் கரண மாகி உதித்திடும் உணர்ந்து கொள்ளே. 171
மாயையே ஆன்ம ஞானக் கிரியையை மறைத்து நிற்கும் தூயவெம் பரிதி தன்னைச் சுடர்முகில் மறைத்தாற் போலப் போய்முகில் அகலச் சோதி புரிந்திடு மதுவே போலக் காயமு மகல ஞானத் தொழில்பிர காச மாமே. 172
பரிதியை முகில் மறைப்பப் பாயொளி பதுங்கி னாற்போல் உருவுயிர் மறைக்கின் ஞானக் கிரியைகள் ஔ¤க்கு மாகும் கருதிடும் இச்சா ஞான காரியம் காயம் பெற்றால் மருவிடும் உயிர்க்குக் காயம் வந்திடா விடின்மறைப்பே. 173
போதகா ரியம்ம றைத்து நின்றது புகல்ம லங்காண் ஓதலாம் குணமு மாக உயிரினுள் விரவ லாலே காதலால் அவித்தை சிந்தத் தரும்கலை யாதி மாயை ஆதலா லிரண்டுஞ் சோதி இருளென வேறா மன்றே. 174
புருடன்தன் குணம் அவித்தை யெனில்சடம் புருட னாகும் குருடன்தன் கண்ணின் குற்றம் கண்ணின்தன் குணமோ கூறாய் மருள்தன்றன் குணம தாகி மலம்அசித் தாகி நிற்கும் தெருள்தன்றன் குணம தாகிச் சித்தென நிற்கும் சீவன். 175
மும்மலம் நெல்லி னுக்கு முளையொடு தவிடு மிப்போல் மம்மர்செய் தணுவி னுண்மை வடிவினை மறைத்து நின்று பொய்ம்மைசெய் போக பந்த போத்திருத் துவங்கள் பண்ணும் இம்மலம் மூன்றி னோடும் இருமல மிசைப்பன் இன்னும். 176
மாயையின் காரி யத்தை மாயேய மலம தென்றும் ஏயும்மும் மலங்கள் தத்தந் தொழிலினை இயற்ற ஏவும் தூயவன் தனதோர் சத்தி திரோதான கரிய தென்றும் ஆய்வர்இம் மலங்கள் ஐந்தும் அணுக்களை அணைந்து நிற்கும். 177
மலம்மாயை கன்மம் மாயே யம்திரோ தாயி மன்னிச் சலமாரும் பிறப்பி றப்பில் தங்கிஇத் தரைகீழ் மேலும் நிலையாத கொள்ளி வட்டங் கறங்கென நிமிடத் தின்கண் அலமாரும் இறைவ னாணை யால்உயிர் நடக்கு மன்றே. 178
அண்டசம் சுவேத சங்கள் உற்பிச்சம் சராயு சத்தோ(டு) எண்தரு நாலெண் பத்து நான்குநூ றாயி ரத்தால் உண்டுபல் யோனி யெல்லாம் ஒழித்துமா னுடத்து தித்தல் கண்டிடில் கடலைக் கையால் நீந்தினன் காரி யங்காண். 179
நரர்பயில் தேயந் தன்னில் நான்மறை பயிலா நாட்டில் விரவுத லொழிந்து தோன்றல் மிக்கபுண் ணியந்தா னாகும் தரையினிற் கீழை விட்டுத் தவஞ்செய்சா தியினில் வந்து பரசம யங்கள் செல்லாப் பாக்கியம் பண்ணொ ணாதே. 180
வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாம் சிறுமை தப்பித் தாழ்வெனும் தன்மை யோடும் சைவமாம் சமயம் சாரும் ஊழ்பெற லரிது சால உயர்சிவ ஞானத் தாலே போழிள மதியி னானைப் போற்றுவார் அருள்பெற் றாரே. 181
மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காயம் ஆனிடத் தைந்து மாடும் அரன்பணிக் காக வன்றோ வானிடத் தவரும் மண்மேல் வந்தரன் றனைஅர்ச் சிப்பர் ஊனெடுத் துழலும் ஊமர் ஒன்றையும் உணரார். 182
கருவினுள் அழிவ தாயும் கழிந்திடா தழிவ தாயும் பரிணமித் தழிவ தாயும் பாலனாய் அழிவ தாயும் தருணனாய் அழிவ தாயும் தான்நரைத் தழிவ தாயும் உருவமே யழியே யானால் உள்ளபோ தேபார் உய்ய. 183
ஒருபுலன் நுகரும் போதங் கொன்றில்லை ஒன்றன் பாலும் வருபயன் மாறி மாறி வந்திடும் எல்லாம் மாறும் ஒருபொழு துணரி னுண்டாம் அல்லதிவ் வல்லல் வாழ்க்கை மருள்கன வதுவும் போல மாயும்பின் மாயு மன்றே. 184
அரிசனம் பூசி மாலை அணிந்துபொன் னாடை சாத்திப் பரிசனம் பின்பு செல்லப் பாரகர் பரிக்கக் கொட்ட வரிசின்ன மூதத் தொங்கல் வந்திட வுணர்வு மாண்டு பெரியவர் பேச்சு மின்றிக் கிடத்தலால் பிணத்தோ டொப்பர். 185
பிணத்தினை ஒத்து வாழ்வோர் பின்னடைப் பிணங்கள் போல உணக்கியே உழல்வீர் உங்க ளுடலுயிர் உணர்வு மெல்லாம் கணத்திடைத் தோன்றி மாயும் காயமென் றறிந்தொ ருக்கால் வணக்குறீர் அரனை என்றும் வானவர் வணங்க வைப்பன். 186

மூன்றாஞ் சூத்திரம் (187- 190)
உயிரெனப் படுவ திந்த உடலின்வே றுளதாய் உற்றுச் செயிருறும் இச்சா ஞானச் செய்திக ளுடைய தாகிப் பயில்வுறும் இன்பத் துன்பப் பலங்களும் நுகரும் பார்க்கில் துயிலொடும் அஞ்ச வத்தைப் படும்உண்மை துரியா தீதம். 187
உடலின்வே றுயிரேன் இந்த உடலன்றோ உணர்வ தென்னின் உடல்சவ மான போதும் உடலினுக் குணர்வுண் டோதான் உடலினின் வாயுப் போனால் உணர்ச்சியின் றுடலுக்கென்னின் உடலினின் வாயுப் போகா துறக்கத்தும் உணர்வ தின்றே. 188
அறிவதைம் பொறியே யென்னின் உறக்கத்தி னறியாவாகும் அறிவதும் ஒன்றொன் றாக ஒன்றொன்றாய் அறியு மென்னின் அறிவுக ளொன்றை யொன்றங் கறிந்திடா ஐந்தையுங் கொண்(டு) அறிவதொன் றுண்ட தான்மா ஐம்பொறி அறிந்தி டாவே. 189
அறிந்திடும் பிராண வாயு அடங்குதல் விடுதல் செய்தால் அறிந்திடா துடலு றக்கத் தறிவின்மை கரண மின்மை அறிந்திடு முதலி யாகின் அதுநிற்கக் கரணம் போகா அறிந்திடும் பிராணன் தன்னை அடக்கியும் விட்டும் ஆன்மா. 190

இலக்கணவியல்
நான்காஞ் சூத்திரம் (191 - 230)
உணர்வன கரண மென்னின் ஒன்றையொன் றுணரா வெவ்வே(று) அணைதருஞ் செயல்கள் நான்கும் அறிந்தவை அடக்கி ஆக்கிப் புணருமுட் கரண மாக்கிப் புறக்கரு வியினும் போக்கி இணைதரு மிவற்றின் வேறாய் யானென தென்ப தான்மா. 191
கருவியாம் மனமும் புத்தி அகங்காரம் சித்தம் நான்கும் மருவிஆன் மாவே என்ன வரும்தீப மெனத்தெ ரிந்தாங்(கு) ஒருவியான் மாவி னுண்மை உணர்ந்தவர் தமையு ணர்ந்தோர் தருமிது பசுஞா னம்பின் சிவஞானந் தனக்கு மேலாம். 192
அவ்வுடன் உவ்வும் மவ்வும் மனம் மனம்புத்தி அகங்கா ரங்கள் செவ்விய விந்து நாதஞ் சித்தமோ டுள்ள மாகும் ஒவ்வெனும் எழுத்தாம் ஐந்தும் உணர்வுதித் தொடுங்குமா பவ்வமும் திரையும் போலும் பார்க்கில்இப் பண்புந் தோன்றும். 193
அயன்அரி அரனு மீசர் சதாசிவம் அதிதெய் வங்கள் உயவரும் அவ்வோ டுவ்வு மவ்விந்து நாதங் கட்குப் பயனுறும் அஞ்சில் ஆன்மாப் பரவிடில் அசித்தாம் பார்க்கில் சயமுறு வளியி ரண்டும் தவிர்த்துறில் தானுந் தோன்றும். 194
ஆன்மாவின் வடிவு தானே அநேகார்த்தக் கூட்ட மென்னில் பார்ப்பார்கட் கான்மா இன்றாய்ப் பலபொரு ளுண்மையாகும் சேர்ப்பாய பலவே உண்மை என்றிடில் சென்றி வற்றை ஓர்ப்பான்வே றுணர்வோர்க் கெல்லாம் உணர்பொருள் வேறதாமே. 195
அறிவிச்சை செயல்களெல்லாம் அடைந்தனல் வெம்மை யும்போல் குறியுற்றங் கேகா நேக குணகுணி பாவ மாகி நெறியுற்று நிற்கு மென்னில் நிகழபுலன் கரண மெல்லாம் செறிவுற்றங் கறிவு கொள்ள வேண்டுமா சீவ னார்க்கே. 196
குணங்களை யின்றி யொன்றாம் குறியு டைத்தான்மா வென்னின் இணங்கிடா இச்சா ஞானக் கிரியைகள் இவையு டற்கட் பிணங்கிடுஞ் சந்நி திக்கண் எனிற்பிணத் துறக்கத் தின்றாம் உணங்கிடும் கரண மென்னில் சந்நிதி ஒழிந்த தன்றே. 197
சந்நிதி குணம தாகும் தானென்போல் என்னிற் காந்தம் முன்னிரும் பென்றா யீர்க்கு முறைமையுண் டகற்ற லின்றாம் உன்னுத லொடுங்கல் ஓடல் இருத்தலே கிடத்தல் நிற்றல் என்னுமித் தொழில்கள் மற்றும் இயற்றுவ தான்மா வென்னே. 198
உருவுயி ரென்னின் இந்த உடலினுட் காண வேண்டும் வருவது பரிணா மத்தாய் அநித்தமாம் பூத மாகும் கருவினில் நுழையு மாறும் காட்டிட வேண்டும் கண்ணின் மருவிடா தென்னின் உன்றன் வாயினால் உருவன் றென்னே. 199
சூக்கும உருவ தென்னில் தூலகா ரணம் தாகும் ஆக்கிய மனாதி தன்மாத் திரைவடி வசேத னம்பின் நீக்கிய சூக்கு மத்தே நிற்பதோ ருருவுண் டென்னின் ஆக்கிடும் உருவமெல்லாம் அசித்துமாய் அநித்த மாமே. 200
அருவுரு வென்னில் ஆன்மா அருவுரு வாவ தின்றாம் உருவரு வாகா தாகும் ஒருபொருட் கிரண்டு தன்மை வருவது மில்லை காட்ட வன்னிபோல் மருவு மென்னின் உருவமுங் காண வேண்டும் உண்மையும் ஒழிந்து போமே. 201
சந்திரன் வடிவு போலத் தான்அரு வுருவ மென்னின் வந்துநங் கண்ணிற் றோனறும் வடிவுள தாமு யிர்க்கும் இந்தவூ னுருவந் தானாய் எழுவது முயிரே யென்னில் பந்தமாய் அசித்தா யான்மாப் பவுதிக மாகு மன்றே. 202
அருவவி காரி யான்மா ஆகாயம் போல வென்னின் உருவினைக் கட்டி யாட்டி ஓட்டிமீட் டுலாவப் பண்ணி மருவிநிற் பிதி ருத்திக் கிடத்திமண் புரட்டி மற்றும் பெருவிகா ரங்க ளெல்லாம் தருவதென் பேசி டாயே. 203
அசித்தெனின் உணராதான்மா அசித்துச்சித் தாகுமென்னின் அசித்துச்சித் தாகா தாகும் சித்தசித் தாவ தில்லை அசித்தொரு புறமா யொன்றில் சித்தொரு புறமாய்நில்லா(து) அசித்துறாச் சித்தே யென்னின் அசித்தடைந் தறிவ தின்றாம். 204
உயிரினை அணுவ தென்னின் உடல்பல துவார மோடும் பயில்வுறக் கட்டு ணாது பாரமும் தரித்துச் செல்லா(து) அயர்வுறும் அசித்தாய்ப் பூத அணுக்களி னொன்ற தாகும் இயல்புறும் அவய வத்தால் அணுவுரு இறக்கு மன்றே. 205
உடலினின் ஏக தேசி உயிரெனின் உருவாய் மாயும் படர்வுறு மறிவின் றெங்கும் சுடரொளிப் பண்ப தென்னில் சுடர்தொடிற் சுடுவ தெங்கும் தொட்டிடம் அறிவுண் டாகும் அடர்புலன் இடத்து மொக்க அறிவெழ வேண்டுமன்றே. 206
உருவினில் நிறைந்து நின்றங் குணர்ந்திடும் உயிர தென்னின் மருவிடா துறக்கம் வாயில் அறிவொக்க வழங்க வேண்டும் பெருகிடும் சுருங்கும் போதம் பேருடல் சிற்று டற்கண் வருமுடற் குறைக்க வொக்கக் குறைந்துபின் மாயுமன்றே. 207
எங்குந்தான் வியாபி யாய்நின் றுணரும்இவ் வான்மா வென்னில், தங்கிடும் அவத்த போக்கு வரவுகள் சாற்றால் வேண்டும், பங்கமார் புலனொன் றொன்றாய்ப் பார்த்திடல் பகரல் வேண்டும், இங்கெலாம் ஒழிந்தான் நிற்ப தெங்ஙனம் இயம்பல் வேண்டும். 208
சுத்தமாம் ஆன்ம சித்தைத் துகளுடல் மறைத்த தென்னின் வைத்துறா துடற்கண் வாயில் கரணங்கள் வழியால் ஞானம் ஒத்துறும் மலமற் றாலும் உறுமலம் வீடு மின்றாம் பெத்தமு மடையான் முத்த னாய்ப்பிர காச னாமே. 209
அசித்தரு வியாப கம்போல் வியாபகம் அருவ மின்றாய் வசித்திட வரும்வி யாபி யெனும்வழக் குடைய னாகி நசித்திடா ஞானச் செய்தி அநாதியே மறைத்து நிற்கும் பசுத்துவ முடைய னாகிப் பசுவென நிற்கு மான்மா. 210
மாயையின் வயிற்றுள் மன்னி வருஞ்செயல் ஞான மிச்சை ஏயுமக் கலாதி மூன்றால் ஏகதே சத்தி னேய்ந்திங்(கு) ஆயுமுக் குணங்கள் அந்தக் கரணங்க ளாதி யெல்லாம் காயபெத் தங்க ளாகிக் கலந்துடன் நிற்கு மான்மா. 211
சூக்கும தேகி யாகித் தூலரூ பத்தின் மன்னிச் சாக்கிர முதலா யுள்ள அவத்தையுள் தங்கி யெங்கும் போக்கொடு வரவு மெல்லாம் புரிந்துபுண் ணியங்கள் பாவம் ஆக்கியும் பலன்க ளெல்லாம் அருந்தியும் நிற்கு மான்மா. 212
மருவா னந்தம் விஞ்ஞான மனோபி ராணன் அன்னமயம் உருவாந் தன்மை யுண்டாய்மு ஒன்றுக் கொன்று சூக்குமமாய் வருமாம் அன்ன மயம்பற்றி மாயை முதற்கா ரணமாகும் அருவா யான்மாஐங் கோசத்தார்ப் புண்டவற்றின் அகம் புறமாம். 213
தோற்பாவைக் கூத்தும் தொல்லை மரப்பாவை இயக்கமும் சீர்த் தேர்ப்பாரிற் செலவும்வேறாய்ச் செலுத்துவோர் செய்திதானும் பார்ப்பாய வேடங் கட்டி ஆடுவோர் பரிசு போலும் ஆர்ப்பாய காயந் தன்னை ஆன்மாநின் றாட்டு மாறே. 214
என்னுடல் பொறிபி ராணன் கரணம்என் னுணர்வென் றக்கால் தன்னின்வே றாகும் நீஎன் றன்மனை யென்ற வெல்லாம் நின்னின்வே றாகும் என்னின் நீங்கிடா இவையிங் கென்னின் உன்னின வாகும் நீயாம் உகிர்மயிர் உகவுங் காண்டி. 215
பொன்னணி யாடை மாலை போதுமே லான போதிங்(கு) என்னணி யானென் றுன்னி இருந்தனை பிரிந்த போது நின்னணி நீயு மல்ல வாயினை காய நின்னில் அன்னிய மாகும் உன்னை அறிந்துநீ பிரிந்து பாரே. 216
உடலியா னல்லேன் இந்த உணர்வுயான் அல்ல வான கடனியா தென்னின் வேறு கண்டுணர் வென்ன தென்னகை இடரிலா என்ற னான்மா என்றபோ தான்மா வேறோ திடனதா உயிரை வேறு கண்டிடார் செப்ப லேகாண். 217
புந்தியை மனம தென்றும் மனமது புந்தி யென்றும் சிந்தையைச் சீவ னென்றும் சீவனைச் சிந்தை யென்றும் முந்தனை யான்மா வென்றும் ஆன்மாவை முந்த னென்றும் வந்திடு மென்ற னான்மா என்றது மற்றொன் றைக்காண். 218
அறிவுடல் சிந்தை யான்மா அணைதலால் ஆன்மா வென்பர் எறிசுடர் விளக்கி ருக்கு மிடத்தையும் விளக்கென்றாற்போல் பொறிபுலன் கரண மெல்லாம் புலப்படும் அபேத மாகிப் பிறிதரா தறிவ தான்மர அறிபொருள் பின்ன மாமே. 219
கண்டுணர் புருடன் வேறு கனவுகண் டொடுங்கிக் காயம் உண்டியும் வினையு மின்றிக் கிடந்துயிர்த் திடவு ணர்ந்து கண்டிடுங் கனவுஞ் சொல்லி ஒடுக்கமுங் கருதி வேறாய் உண்டியும் வினையும் உற்றிங் குணர்த்திட உணரா நிற்கும். 220
புருடனே அறிவ னாகில் பொறிபுல னாதி போதம் தருவதென் அறிவு மாயா தனுகர ணாதி பற்றி வருவதிங் கநாதி யாக மலத்தினின் மறைந்து நிற்பன் அருவனாய் இவற்றோ டாளும் அமைச்சரும் அரசும் போல்வன். 221
படைகொடு பவனி போதும் பார்மன்னன் புகும்போ தில்லில் கடைதொறும் விட்டு விட்டுக் காவலு மிட்டுப் பின்னர் அடைதருந் தனியே அந்தப் புரத்தினில் அதுபோ லான்மா உடலினின் அஞ்ச வத்தை உறுமுயிர் காவ லாக. 222
சாக்கிர முப்பத் தைந்து நுதலினிற் கனவு தன்னில் ஆக்கிய இருபத் தைந்து களத்தினிற் சுழுமுனை மூன்று நீக்கிய இதயந் தன்னில் துரியத்தி லிரண்டு நாபி நோக்கிய துரியா தீதம் நுவலின்மூ லத்தி னொன்றே. 223
இருவகைச் சாக்கி ராதி அவத்தைக ளியல்பு தானும் இருவகை கீழே நூக்கி உற்பவங் காட்டு மொன்று பெருகமேல் நோக்கித் தீய பிறப்பறுந் திடுமி யோகில் தருவதோர் சமாதி தானும் தாந்துபின் சனனஞ் சாரும். 224
அறிதரு முதல வத்தை அடைதரு மிடத்தே ஐந்தும் செறிதருங் கரணந் தன்னில் செயல்தொறுபே கண்டு கொள்நீ பிறிவிலா ஞானத் தோரும் பிறப்பற அருளா லாங்கே குறியொடும் அஞ்ச வத்தை கூடுவர் வீடு கூட. 225
ஐந்துசாக் கிரத்தின் நான்கு கனவினில் சுழுனை மூன்று வந்திடுந் துரியந் தன்னின் இரண்டொன்று துரியா தீதம் தந்திடும் சாக்கி ராதி அவத்தைகள் தானந் தோறும் உந்திடுங் கரணந்தன்னில் செயல்தொறு முணர்ந்து கொள்ளே. 226
கேவல சகல சுத்தம் என்றுமூன் றவத்தை யான்மா மேவுவன் கேவ லந்தன் னுண்மைமெய் பொறிக ளெல்லாம் காவலன் கொடுத்த போது சகலனா மலங்க ளெல்லாம் ஓவின போது சுத்த முடையன்உற் பவந்து டைத்தே. 227
அறிவிலன் அமூர்த்தன் நித்தன் அராகாதி குணங்க ளோடும் செறிவிலன் கலாதி யோடும் சேர்விலன் செயல்க ளில்லான் குறியிலன் கருத்தா வல்லன் போகத்திற் கொள்கை யில்லான் பிறிவிலன் மலத்தி னோடும் வியாபிகேவலத்தில் ஆன்மா. 228
உருவினைக் கொண்டு போக போக்கியத் துன்னல் செப்பல் வருசெயல் மருவிச் சத்த மாதியம் விடயம் தன்னில் புரிவதுஞ் செய்திங் கெல்லா யோனியும் புக்கு ழன்று திரிதரும் சகல மான அவத்தையிற் சீவன் சென்றே. 229
இருவினைச் செயல்க ளொப்பின் ஈசன்தன் சத்தி தோயக் குருவருள் பெற்று ஞான யோகத்தைக் குறுகி முன்னைத் திரிமல மறுத்துப் பண்டைச் சிற்றறி வொழிந்து ஞானம் பெருகிநா யகன்தன் பாதம் பெறுவது சுத்த மாமே.

by C.Malarvizhi   on 27 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.