எதிர்நீச்சல் படத்தை தொடர்ந்து, இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் காக்கிசட்டை.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் ‘ஐ யம் சோ கூல்’ என்னும் ரொமான்ஸ் பாடலைப் பாடியுள்ளார். இதற்கு முன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திலும், மான் கராத்தே படத்திலும் தல ஒரு பாடல்களை சிவகார்த்திகேயன் பாடியது குறிப்பிடத்தக்கது.
காக்கி சட்டை படத்தின் இசை டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
|