LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- நன்னூல்

சொல்லதிகாரம்

3.1. பெயரியல்

மு சகம் நிழற்றும் முழு மதி மு குடை
அச்சுதன் அடி தொழுது அறைகுவன் சொல் ஏ     258
ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா
இரு திணை ஐம் பால் பொருள் ஐ உம் தன் ஐ உம்
மூ வகை இடத்து உம் வழக்கு ஒடு செய்யுளின்
வௌிப்படை குறிப்பின் விரிப்பது சொல் ஏ     259
ஒருமொழி ஒரு பொருளன ஆம் தொடர்மொழி
பல பொருளன பொது இருமை உம் ஏற்பன     260
மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்று உயிர் உள்ள உம் இல்ல உம் அஃறிணை     261
ஆண் பெண் பலர் என மு பாற்று உயர்திணை     262
ஒன்று ஏ பல என்று இரு பாற்று அஃறிணை     263
பெண்மை விட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால்
ஆண்மை விட்டு அல்லது அவாவுவ பெண்பால்
இருமை உம் அஃறிணை அன்ன உம் ஆகும்     264
படர்க்கை வினைமுற்று நாமம் குறிப்பின்
பெறப்படும் திணை பால் அனைத்து உம் ஏனை
இடத்து அவற்று ஒருமை பன்மை பால் ஏ     265
தன்மை முன்னிலை படர்க்கை மூ இடன் ஏ     266
இலக்கணம் உடையது இலக்கணப்போலி
மரூஉ என்று ஆகும் மூ வகை இயல்பு உம்
இடக்கரடக்கல் மங்கலம் குழூஉக்குறி
எனும் மு தகுதி ஓடு ஆறு ஆம் வழக்கு இயல்     267
பல் வகை தாதுவின் உயிர் கு உடல் போல் பல
சொல் ஆல் பொருள் கு இடன் ஆக உணர்வின் இன்
வல்லோர் அணி பெற செய்வன செய்யுள்     268
ஒன்று ஒழி பொது சொல் விகாரம் தகுதி
ஆகுபெயர் அன்மொழி வினைக்குறிப்பு ஏ
முதல் தொகை குறிப்பு ஓடு இன்ன பிற உம்
குறிப்பின் தரு மொழி அல்லன வௌிப்படை     269

3.1.1. சொற்பாகுபாடு

அது ஏ
இயற்சொல் திரிசொல் இயல்பின் பெயர் வினை
என இரண்டு ஆகும் இடை உரி அடுத்து
நான்கு உம் ஆம் திசை வடசொல் அணுகா வழி     270
செந்தமிழ் ஆகி திரியாது யார் கு உம்
தம் பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்     271
ஒரு பொருள் குறித்த பல சொல் ஆகி உம்
பல பொருள் குறித்த ஒரு சொல் ஆகி உம்
அரிது உணர் பொருளன திரிசொல் ஆகும்     272
செந்தமிழ் நிலம் சேர் பன்னிரு நிலத்தின் உம்
ஒன்பதிற்று இரண்டின் இல் தமிழ் ஒழி நிலத்தின் உம்
தம் குறிப்பின ஏ திசைச்சொல் என்ப     273
பொது எழுத்து ஆன் உம் சிறப்பு எழுத்து ஆன் உம்
ஈர் எழுத்து ஆன் உம் இயைவன வடசொல்     274

3.1.2. பெயர்ச்சொல்

இடுகுறி காரணம் மரபு ஓடு ஆக்கம்
தொடர்ந்து தொழில் அல காலம் தோற்றா
வேற்றுமை கு இடன் ஆய் திணை பால் இடத்து ஒன்று
ஏற்ப உம் பொது உம் ஆவன பெயர் ஏ     275
அவற்று உள்
கிளை எண் குழூஉ முதல் பல் பொருள் திணை தேம்
ஊர் வான் அகம் புறம் முதல நிலன் யாண்டு
இருது மதி நாள் ஆதி காலம்
தோள் குழல் மார்பு கண் காது முதல் உறுப்பு (5)
அளவு அறிவு ஒப்பு வடிவு நிறம் கதி
சாதி குடி சிறப்பு ஆதி பல் குணம்
ஓதல் ஈதல் ஆதி பல் வினை
இவை அடை சுட்டு வினா பிற மற்று ஓடு
உற்ற ன ஈறு நம்பி ஆடூஉ (10)
விடலை கோ வேள் குரிசில் தோன்றல்
இன்னன ஆண் பெயர் ஆகும் என்ப     276
கிளை முதல் ஆக கிளந்த பொருள்கள் உள்
ள ஒற்று இகர கு ஏற்ற ஈற்ற உம்
தோழி செவிலி மகடூஉ நங்கை
தையல் ஓடு இன்னன பெண்பால் பெயர் ஏ     277
கிளந்த கிளை முதல் உற்ற ர ஈற்ற உம்
கள் என் ஈற்றின் ஏற்ப உம் பிற உம்
பல்லோர் பெயரின் பகுதி ஆகும்     278
வினா சுட்டு உடன் உம் வேறு உம் ஆம் பொருள்
ஆதி உறு து சுட்டு அணை ஆய்தம்
ஒன்று என் எண் இன்னன ஒன்றன் பெயர் ஏ     279
முன்னர் அவ் ஒடு வரு வை அ உம்
சுட்டு இறு வ உம் கள் இறு மொழி உம்
ஒன்று அல் எண் உம் உள்ள இல்ல
பல்ல சில்ல உள இல பல சில
இன்ன உம் பலவின் பெயர் ஆகும் ஏ     280
பால் பகா அஃறிணை பெயர்கள் பால் பொதுமைய     281
முதற்பெயர் நான்கு உம் சினைப்பெயர் நான்கு உம்
சினைமுதற்பெயர் ஒரு நான்கு உம் முறை இரண்டு உம்
தன்மை நான்கு உம் முன்னிலை ஐந்து உம்
எல்லாம் தாம் தான் இன்னன பொது பெயர்     282
ஆண்மை பெண்மை ஒருமை பன்மையின்
ஆம் அ நான்மைகள் ஆண் பெண் முறைப்பெயர்     283
அவற்று உள்
ஒன்று ஏ இரு திணை தன் பால் ஏற்கும்     284
தன்மை யான் நான் யாம் நாம் முன்னிலை
எல்லீர் நீயிர் நீவிர் நீர் நீ
அல்லன படர்க்கை எல்லாம் எனல் பொது     285
வினையின் பெயர் ஏ படர்க்கை வினையாலணையும்பெயர்
ஏ யாண்டு உம் ஆகும்     286
தான் யான் நான் நீ ஒருமை பன்மை தாம்
யாம் நாம் எலாம் எலீர் நீயிர் நீர் நீவிர்     287
ஒருவன் ஒருத்தி பெயர் மேல் எண் இல     288
ஒருவர் என்பது உயர் இரு பாற்று ஆய்
பன்மை வினை கொளும் பாங்கிற்று என்ப     289
பொருள் முதல் ஆறு ஓடு அளவை சொல் தானி
கருவி காரியம் கருத்தன் ஆதி உள்
ஒன்றன் பெயர் ஆன் அதன் கு இயை பிறிது ஐ
தொல் முறை உரைப்பன ஆகுபெயர் ஏ     290
ஏற்கும் எ வகை பெயர் கு உம் ஈறு ஆய் பொருள்
வேற்றுமை செய்வன எட்டு ஏ வேற்றுமை     291
பெயர் ஏ ஐ ஆல் கு இன் அது கண்
விளி என்று ஆகும் அவற்றின் பெயர் முறை     292
ஆறன் உருபு உம் ஏற்கும் அ உருபு ஏ     293
நீயிர் நீவிர் நான் எழுவாய் அல பெறா     294
அவற்று உள்
எழுவாய் உருபு திரிபு இல் பெயர் ஏ
வினை பெயர் வினா கொளல் அதன் பயனிலை ஏ     295
இரண்டாவதன் உருபு ஐ ஏ அதன் பொருள்
ஆக்கல் அழித்தல் அடைதல் நீத்தல்
ஒத்தல் உடைமை ஆதி ஆகும்     296
மூன்றாவதன் உருபு ஆல் ஆன் ஓடு ஒடு
கருவி கருத்தா உடனிகழ்வு அதன் பொருள்     297
நான்காவதன் கு உருபு ஆகும் கு ஏ
கொடை பகை நேர்ச்சி தகவு அதுவாதல்
பொருட்டு முறை ஆதியின் இதன் கு இது எனல் பொருள் ஏ     298
ஐந்தாவதன் உருபு இல் உம் இன் உம்
நீங்கல் ஒப்பு எல்லை ஏது பொருள் ஏ     299
ஆறன் ஒருமை கு அது உம் ஆது உம்
பன்மை கு அ உம் உருபு ஆம் பண்பு உறுப்பு
ஒன்றன் கூட்டம் பலவின் ஈட்டம்
திரிபின் ஆக்கம் ஆம் தற்கிழமை உம்
பிறிதின்கிழமை உம் பேணுதல் பொருள் ஏ     300
ஏழன் உருபு கண் ஆதி ஆகும்
பொருள் முதல் ஆறு உம் ஓர் இரு கிழமையின்
இடன் ஆய் நிற்றல் இதன் பொருள் என்ப     301
கண் கால் கடை இடை தலை வாய் திசை வயின்
முன் சார் வலம் இடம் மேல் கீழ் புடை முதல்
பின் பாடு அளை தேம் உழை வழி உழி உளி
உள் அகம் புறம் இல் இட பொருள் உருபு ஏ     302
எட்டன் உருபு ஏ எய்து பெயர் ஈற்றின்
திரிபு குன்றல் மிகுதல் இயல்பு அயல்
திரிபு உம் ஆம் பொருள் படர்க்கையோர் ஐ
தன் முகம் ஆக தான் அழைப்பது ஏ     303
இ உ ஊ ஓடு ஐ ஓ ன ள ர ல
ய ஈற்று உயர்திணை ஓ ர அல் இவற்று ஒடு
ணஃகான் ஆ ஈறு ஆகும் பொது பெயர்
ஞ ந ஒழி அனைத்து ஈற்று அஃறிணை விளிப்பன     304
இ மு பெயர் கண் இயல்பு உம் ஏ உம்
இகர நீட்சி உம் உருபு ஆம் மன் ஏ     305
ஐ இறு பொது பெயர் கு ஆய் உம் ஆ உம்
உருபு ஆம் அல்லவற்று ஆய் உம் ஆகும்     306
ஒரு சார் ன ஈற்று உயர்திணை பெயர் கண்
அளபு ஈறு அழிவு அயல் நீட்சி அதன் ஓடு
ஈறு போதல் அவற்று ஓடு ஓ உறல்
ஈறு அழிந்து ஓ உறல் இறுதி ய ஆதல்
அதன் ஓடு அயல் திரிந்து ஏ உறல் ஈறு அழிந்து
அயல் ஏ ஆதல் உம் விளி உருபு ஆகும்     307
ளஃகான் உயர் பெயர் கு அளபு ஈறு அழிவு அயல்
நீட்சி இறுதி ய ஒற்று ஆதல்
அயல் இல் அகரம் ஏ ஆதல் உம் விளி தனு     308
ர ஈற்று உயர் பெயர் கு அளபு எழல் ஈற்று அயல்
அகரம் இ ஈ ஆதல் ஆண்டை ஆ
ஈ ஆதல் அதன் ஓடு ஏ உறல் ஈற்று ஏ
மிக்கு அயல் யா கெட்டு அதன் அயல் நீடல்
ஈற்றின் ஈர் உறல் இவை உம் ஈண்டு உருபு ஏ     309
லகார ஈற்று உயர் பெயர் கு அளபு அயல் நீட்சி உம்     310
ன ஈற்று உயர்திணை அல் இரு பெயர் கண்
இறுதி அழிவு அதன் ஓடு அயல் நீட்சி     311
ல ள ஈற்று அஃறிணை பெயர் பொது பெயர் கண்
ஈற்று அயல் நீட்சி உம் உருபு ஆகும் ஏ     312
அண்மையின் இயல்பு உம் ஈறு அழிவு உம் சேய்மையின்
அளபு உம் புலம்பின் ஓ உம் ஆகும்     313
நு ஒடு வினா சுட்டு உற்ற ன ள ர
வை து தாம் தான் இன்னன விளியா     314
முதல் ஐ ஐ உறின் சினை ஐ கண் உறும்
அது முதல் கு ஆயின் சினை கு ஐ ஆகும்     315
முதல் இவை சினை இவை என வேறு உள இல
உரைப்போர் குறிப்பின அற்று ஏ பிண்டம் உம்     316
யாதன் உருபின் கூறிற்று ஆயின் உம்
பொருள் செல் மருங்கின் வேற்றுமை சாரும்     317
ஐ ஆன் கு செய்யுள் கு அ உம் ஆகும்
ஆகா அஃறிணை கு ஆன் அல்லாதன     318
எல்லை இன் உம் அது உம் பெயர் கொளும்
அல்ல வினை கொளும் நான்கு ஏழ் இருமை உம்
புல்லும் பெரும்பாலும் என்மனார் புலவர்     319

3.2. வினையியல்

3.2.1. வினைச்சொல்

செய்பவன் கருவி நிலம் செயல் காலம்
செய் பொருள் ஆறு உம் தருவது வினை ஏ     320
பொருள் முதல் ஆறின் உம் தோற்றி முன் ஆறன் உள்
வினை முதல் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பு ஏ     321
அவை தாம்
முற்று உம் பெயர் வினை எச்சம் உம் ஆகி
ஒன்றன் கு உரிய உம் பொது உம் ஆகும்     322

3.2.2. வினைமுற்று

பொது இயல்பு ஆறு ஐ உம் தோற்றி பொருட்பெயர்
முதல் அறு பெயர் அலது ஏற்பு இல முற்று ஏ     323
ஒருவன் முதல் ஐந்து ஐ உம் படர்க்கை இடத்து உம்
ஒருமை பன்மை ஐ தன்மை முன்னிலையின் உம்
மு காலத்தின் உம் முரண முறை ஏ
மூ ஐந்து இரு மூன்று ஆறு ஆய் முற்று
வினைப்பதம் ஒன்று ஏ மூ ஒன்பான் ஆம்     324
அன் ஆன் இறு மொழி ஆண்பால் படர்க்கை     325
அள் ஆள் இறு மொழி பெண்பால் படர்க்கை     326
அர் ஆர் ப ஊர் அகரம் மார் ஈற்ற
பல்லோர் படர்க்கை மார் வினை ஒடு முடிம் ஏ     327
து று டு குற்றியலுகர ஈற்ற
ஒன்றன் படர்க்கை டு குறிப்பின் ஆகும்     328
அ ஆ ஈற்ற பலவின் படர்க்கை
ஆ ஏ எதிர்மறை கண்ணது ஆகும்     329
தன்மை முன்னிலை வியங்கோள் வேறு இலை
உண்டு ஈர் எச்சம் இரு திணை பொது வினை     330
கு டு து று என்னும் குன்றியலுகரம் ஓடு
அல் அன் என் ஏன் ஆகும் ஈற்ற
இரு திணை மு கூற்று ஒருமைத்தன்மை     331
அம் ஆம் என்பன முன்னிலையார் ஐ உம்
எம் ஏம் ஓம் இவை படர்க்கையார் ஐ உம்
உம் ஊர் க ட த ற இரு பாலார் ஐ உம்
தன் ஒடு படுக்கும் தன்மைப்பன்மை     332
செய்கு என் ஒருமை உம் செய்கும் என் பன்மை உம்
வினை ஒடு முடியின் உம் விளம்பிய முற்று ஏ     333
முன்னிலை கூடிய படர்க்கை உம் முன்னிலை     334
ஐ ஆய் இகர ஈற்ற மூன்று உம்
ஏவலின் வரூஉம் எல்லா ஈற்ற உம்
மு பால் ஒருமை முன்னிலை மொழி ஏ     335
முன்னிலை முன்னர் ஈ உம் ஏ உம்
அ நிலை மரபின் மெய் ஊர்ந்து வரும் ஏ     336
இர் ஈர் ஈற்ற இரண்டு உம் இரு திணை
பன்மை முன்னிலை மின் அவற்று ஏவல்     337
க ய ஒடு ர ஒற்று ஈற்ற வியங்கோள்
இயலும் இடம் பால் எங்கு உம் என்ப     338
வேறு இல்லை உண்டு ஐம் பால் மூ இடத்தன     339

3.2.3. பெயரெச்சம்

செய்த செய்கின்ற செய்யும் என் பாட்டு இல்
காலம் உம் செயல் உம் தோன்றி பால் ஒடு
செய்வது ஆதி அறு பொருட்பெயர் உம்
எஞ்ச நிற்பது பெயரெச்சம் ஏ     340
செய்யும் என் எச்ச ஈற்று உயிர்மெய் சேறல் உம்
செய்யுள் உள் உம் உந்து ஆகல் உம் முற்றேல்
உயிர் உம் உயிர்மெய் உம் ஏகல் உம் உள ஏ     341
3.2.4. வினையெச்சம்

தொழில் உம் காலம் உம் தோன்றி பால் வினை
ஒழிய நிற்பது வினையெச்சம் ஏ     342
செய்து செய்பு செய்யா செய்யூ
செய்தென செய செயின் செய்யிய செய்யியர்
வான் பான் பாக்கு இன வினையெச்சம் பிற
ஐந்து ஒன்று ஆறு மு காலம் உம் முறை தரும்     343
அவற்று உள்
முதல் இல் நான்கு உம் ஈற்று இல் மூன்று உம்
வினைமுதல் கொள்ளும் பிற உம் ஏற்கும் பிற     344
சினை வினை சினை ஒடு உம் முதல் ஒடு உம் செறியும்     345
சொல் திரியின் உம் பொருள் திரியா வினைக்குறை     346

3.2.5. ஒழிபு

ஆக்க வினைக்குறிப்பு ஆக்கம் இன்று இயலா     347
பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை இல்
செல்லாது ஆகும் செய்யும் என் முற்று ஏ     348
யார் என் வினா வினைக்குறிப்பு உயர் மு பால்     349
எவன் என் வினா வினை குறிப்பு இழி இருபால்     350
வினைமுற்று ஏ வினையெச்சம் ஆகல் உம்
குறிப்புமுற்று ஈர் எச்சம் ஆகல் உம் உள ஏ     351

3.3. பொதுவியல்

இரு திணை ஆண் பெண் உள் ஒன்றன் ஐ ஒழிக்கும்
பெயர் உம் வினை உம் குறிப்பின் ஆன் ஏ     352
பெயர் வினை இடத்து ன ள ர ய ஈற்று அயல்
ஆ ஓ ஆகல் உம் செய்யுள் உள் உரித்து ஏ     353
உருபு உம் வினை உம் எதிர்மறுத்து உரைப்பின் உம்
திரியா தத்தம் ஈற்று உருபு இன் என்ப     354
உருபு பல அடுக்கின் உம் வினை வேறு அடுக்கின் உம்
ஒரு தம் எச்சம் ஈறு உற முடியும்     355
உருபு முற்று ஈர் எச்சம் கொள்ளும்
பெயர் வினை இடை பிற வரல் உம் ஆம் ஏற்பன     356
எச்ச பெயர் வினை எய்தும் ஈற்றின் உம்     357
ஒரு மொழி ஒழி தன் இனம் கொளல் கு உரித்து ஏ     358
பொது பெயர் வினைகளின் பொதுமை நீக்கும்
மேல் வரும் சிறப்பு பெயர் வினை தாம் ஏ     359
பெயர் வினை உம்மை சொல் பிரிப்பு என ஒழியிசை
எதிர்மறை இசை எனும் சொல் ஒழிபு ஒன்பது உம்
குறிப்பு உம் தத்தம் எச்சம் கொள்ளும்     360

3.3.1. தொகைநிலை தொடர்மொழி

பெயர் ஒடு பெயர் உம் வினை உம் வேற்றுமை
முதலிய பொருளின் அவற்றின் உருபு இடை
ஒழிய இரண்டு முதல் ஆ தொடர்ந்து ஒரு
மொழி போல் நடப்பன தொகைநிலை தொடர்ச்சொல்     361
வேற்றுமை வினை பண்பு உவமை உம்மை
அன்மொழி என அ தொகை ஆறு ஆகும்     362
இரண்டு முதல் ஆ இடை ஆறு உருபு உம்
வௌிப்படல் இல்லது வேற்றுமைத்தொகை ஏ     363
காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை     364
பண்பு ஐ விளக்கும் மொழி தொக்கன உம்
ஒரு பொருள் கு இரு பெயர் வந்த உம் குணத்தொகை     365
உவம உருபு இலது உவமத்தொகை ஏ     366
போல புரைய ஒப்ப உறழ
மான கடுப்ப இயைய ஏய்ப்ப
நேர நிகர அன்ன இன்ன
என்ப உம் பிற உம் உவமத்து உருபு ஏ     367
எண்ணல் எடுத்தல் முகத்தல் நீட்டல்
எனும் நான்கு அளவை உள் உம் இலது அ தொகை     368
ஐம் தொகை மொழி மேல் பிற தொகல் அன்மொழி     369
முன் மொழி பின் மொழி பல் மொழி புற மொழி
எனும் நான்கு இடத்து உம் சிறக்கும் தொகை பொருள்     370
வல் ஒற்று வரின் ஏ இடத்தொகை ஆகும்
மெல் ஒற்று வரின் ஏ பெயர்த்தொகை ஆகும்     371
உயர்திணை உம்மைத்தொகை பலர் ஈறு ஏ     372
தொக்குழி மயங்குந இரண்டு முதல் ஏழ்
எல்லை பொருளின் மயங்கும் என்ப     373

3.3.2. தொகாநிலை தொடர்மொழி

முற்று ஈர் எச்சம் எழுவாய் விளி பொருள்
ஆறு உருபு இடை உரி அடுக்கு இவை தொகாநிலை     374

3.3.3. வழாநிலை வழுவமைதி

திணை ஏ பால் இடம் பொழுது வினா இறை
மரபு ஆம் ஏழ் உம் மயங்கின் ஆம் வழு ஏ     375
ஐயம் திணை பால் அ அ பொதுவின் உம்
மெய் தெரி பொருள் மேல் அன்மை உம் விளம்புப     376
உயர்திணை தொடர்ந்த பொருள் முதல் ஆறு உம்
அதன் ஒடு சார்த்தின் அ திணை முடிபின     377
திணை பால் பொருள் பல விரவின சிறப்பின் உம்
மிகவின் உம் இழிபின் உம் ஒரு முடிபின ஏ     378
உவப்பின் உம் உயர்வின் உம் சிறப்பின் உம் செறலின் உம்
இழிப்பின் உம் பால் திணை இழுக்கின் உம் இயல்பு ஏ     379
ஒருமையின் பன்மை உம் பன்மையின் ஒருமை உம்
ஓர் இடம் பிற இடம் தழுவல் உம் உள ஏ     380
தரல் வரல் கொடை செலல் சாரும் படர்க்கை
எழுவாய் இரண்டு உம் எஞ்சிய ஏற்கும்     381
இறப்பு எதிர்வு நிகழ்வு என காலம் மூன்று ஏ     382
மு காலத்தின் உம் ஒத்து இயல் பொருள் ஐ
செப்புவர் நிகழும் காலத்து ஆன் ஏ     383
விரைவின் உம் மிகவின் உம் தௌிவின் உம் இயல்பின் உம்
பிறழ உம் பெறூஉம் மு காலம் உம் ஏற்புழி     384
அறிவு அறியாமை ஐயுறல் கொளல் கொடை
ஏவல் தரும் வினா ஆறு உம் இழுக்கார்     385
சுட்டு மறை நேர் ஏவல் வினாதல்
உற்றது உரைத்தல் உறுவது கூறல்
இனமொழி எனும் எண் இறை உள் இறுதி
நிலவிய ஐந்து உம் அ பொருண்மையின் நேர்ப     386
வினாவின் உம் செப்பின் உம் விரவா சினை முதல்     387
எ பொருள் எ சொலின் எ ஆறு உயர்ந்தோர்
செப்பினர் அ படி செப்புதல் மரபு ஏ     388
வேறு வினை பல் பொருள் தழுவிய பொது சொல் உம்
வேறு அவற்று எண் உம் ஓர் பொது வினை வேண்டும்     389
வினை சார்பு இனம் இடம் மேவி விளங்கா
பல பொருள் ஒரு சொல் பணிப்பர் சிறப்பு எடுத்து ஏ     390
எழுத்து இயல் திரியா பொருள் திரி புணர்மொழி
இசை திரிபு ஆல் தௌிவு எய்தும் என்ப     391
ஒரு பொருள் மேல் பல பெயர் வரின் இறுதி
ஒரு வினை கொடுப்ப தனியும் ஒரோ வழி     392
திணை நிலம் சாதி குடி ஏ உடைமை
குணம் தொழில் கல்வி சிறப்பு ஆம் பெயர் ஓடு
இயற்பெயர் ஏற்றிடின் பின் வரல் சிறப்பு ஏ    393
படர்க்கை மு பெயர் ஓடு அணையின் சுட்டு
பெயர் பின் வரும் வினை எனின் பெயர் கு எங்கு உம்
மருவும் வழக்கு இடை செய்யுள் கு ஏற்புழி     394
அசைநிலை பொருள்நிலை இசைநிறை கு ஒரு சொல்
இரண்டு மூன்று நான்கு எல்லை முறை அடுக்கும்     395
இரட்டைக்கிளவி இரட்டு இன் பிரிந்து இசையா     396
ஒரு பொருள் பல் பெயர் பிரிவு இல வரையார்     397

ஒருபொருட்பன்மொழி சிறப்பின் இன் வழா     398
இனைத்து என்று அறி பொருள் உலகின் இலா பொருள்
வினைப்படுத்து உரைப்பின் உம்மை வேண்டும்     399
செயப்படுபொருள் ஐ செய்தது போல
தொழிற்பட கிளத்தல் உம் வழக்கின் உள் உரித்து ஏ     400
பொருள் முதல் ஆறு ஆம் அடை சேர் மொழி இனம்
உள்ள உம் இல்ல உம் ஆம் இரு வழக்கின் உம்     401
அடை மொழி இனம் அல்லது உம் தரும் ஆண்டு உறின்     402
அடை சினை முதல் முறை அடைதல் உம் ஈர் அடை
முதல் ஓடு ஆதல் உம் வழக்கு இயல் ஈர் அடை
சினை ஒடு செறிதல் உம் மயங்கல் உம் செய்யுள் கு ஏ     403
இயற்கை பொருள் ஐ இற்று என கிளத்தல்     404
காரணம் முதல் ஆ ஆக்கம் பெற்று உம்
காரணம் இன்றி ஆக்கம் பெற்று உம்
ஆக்கம் இன்றி காரணம் அடுத்து உம்
இருமை உம் இன்றி உம் இயலும் செயும் பொருள்     405
தம் பால் இல்லது இல் எனின் இனன் ஆய்
உள்ளது கூறி மாற்றி உம் உள்ளது
சுட்டி உம் உரைப்பர் சொல் சுருங்குதல் கு ஏ     406
ஈ தா கொடு எனும் மூன்று உம் முறை ஏ
இழிந்தோன் ஒப்போன் மிக்கோன் இரப்பு உரை     407
முன்னத்தின் உணரும் கிளவி உம் உள ஏ    408
கேட்குந போல உம் கிளக்குந போல உம்
இயங்குந போல உம் இயற்றுந போல உம்
அஃறிணை மருங்கின் உம் அறையப்படும் ஏ     409
உருவக உவமை இல் திணை சினை முதல்கள்
பிறழ்தல் உம் பிற உம் பேணினர் கொளல் ஏ     410

3.3.4. பொருள்கோள்

யாற்றுநீர் மொழிமாற்று நிரல்நிறை விற்பூண்
தாப்பிசை அளைமறிபாப்பு கொண்டுகூட்டு
அடிமறிமாற்று என பொருள்கோள் எட்டு ஏ     411
மற்றைய நோக்காது அடி தொறு உம் வான் பொருள்
அற்று அற்று ஒழுகும் அஃது யாற்றுப்புனல் ஏ     412
ஏற்ற பொருள் கு இயையும் மொழிகள் ஐ
மாற்றி ஓர் அடி உள் வழங்கல் மொழிமாற்று ஏ     413
பெயர் உம் வினை உம் ஆம் சொல் ஐ உம் பொருள் ஐ உம்
வேறு நிரல் நிறீஇ முறையின் உம் எதிரின் உம்
நேரும் பொருள்கோள்நிரல்நிறை நெறி ஏ     414
எழுவாய் இறுதி நிலை மொழி தம் உள்
பொருள் நோக்கு உடையது பூட்டுவில் ஆகும்     415
இடை நிலை மொழி ஏ ஏனை ஈர் இடத்து உம்
நடந்து பொருள் ஐ நண்ணுதல் தாப்பிசை    416
செய்யுள் இறுதி மொழி இடை முதலின் உம்
எய்திய பொருள்கோள் அளைமறிபாப்பு ஏ     417
யாப்பு அடி பலவின் உம் கோப்பு உடை மொழிகள் ஐ
ஏற்புழி இசைப்பது கொண்டுகூட்டு ஏ     418
ஏற்புழி எடுத்து உடன் கூட்டுறும் அடிய உம்
யாப்பு ஈறு இடை முதல் ஆக்கின் உம் பொருள் இசை
மாட்சி உம் மாறா அடிய உம் அடிமறி     419

3.4. இடையியல்

வேற்றுமை வினை சாரியை ஒப்பு உருபுகள்
தத்தம் பொருள இசைநிறை அசைநிலை
குறிப்பு என் எண் பகுதியின் தனித்து இயல் இன்றி
பெயரின் உம் வினையின் உம் பின் முன் ஓர் இடத்து
ஒன்று உம் பல உம் வந்து ஒன்றுவது இடைச்சொல்     420
தெரிநிலை தேற்றம் ஐயம் முற்று எண் சிறப்பு
எதிர்மறை எச்சம் வினா விழைவு ஒழியிசை
பிரிப்பு கழிவு ஆக்கம் இன்னன இடை பொருள்     421
பிரிநிலை வினா எண் ஈற்றசை தேற்றம்
இசைநிறை என ஆறு ஏகாரம் ஏ     422
ஒழியிசை வினா சிறப்பு எதிர்மறை தெரிநிலை
கழிவு அசைநிலை பிரிப்பு என எட்டு ஓ ஏ     423
வினை பெயர் குறிப்பு இசை எண் பண்பு ஆறின் உம்
என எனும் மொழி வரும் என்று உம் அற்று ஏ     424
எதிர்மறை சிறப்பு ஐயம் எச்சம் முற்று அளவை
தெரிநிலை ஆக்கம் ஓடு உம்மை எட்டு ஏ     425
முற்று உம்மை ஒரோ வழி எச்சம் உம் ஆகும்     426
செவ்வெண் ஈற்றது ஆம் எச்ச உம்மை     427
பெயர்ச்செவ்வெண் ஏ என்றா எனா எண்
நான்கு உம் தொகை பெறும் உம்மை என்று என ஓடு
இ நான்கு எண் உம் அஃது இன்றி உம் இயலும்     428
என்று உம் என உம் ஒடு உம் ஒரோ வழி
நின்று உம் பிரிந்து எண் பொருள் தொறு உம் நேரும்     429
வினை ஒடு வரின் உம் எண் இனைய ஏற்பன     430
விழைவு ஏ காலம் ஒழியிசை தில் ஏ     431
மன் ஏ அசைநிலை ஒழியிசை ஆக்கம்
கழிவு மிகுதி நிலைபேறு ஆகும்     432
வினைமாற்று அசைநிலை பிறிது எனும் மற்று ஏ     433
மற்றையது என்பது சுட்டியதன் கு இனம்     434
கொல் ஏ ஐயம் அசைநிலை கூற்று ஏ     435
ஒடு உம் தெய்ய உம் இசைநிறை மொழி ஏ     436
அந்தில் ஆங்கு அசைநிலை இட பொருள ஏ     437
அம்ம உரையசை கேண்மின் என்று ஆகும்     438
மா என் கிளவி வியங்கோள் அசைச்சொல்     439
மியா இக மோ மதி அத்தை இத்தை
வாழிய மாள ஈ யாழ முன்னிலை அசை     440
யா கா பிற பிறக்கு அரோ போ மாது இகும்
சின் குரை ஓரும் போலும் இருந்து இட்டு
அன்று ஆம் தாம் தான் கின்று நின்று அசைமொழி     441

3.5. உரியியல்

பல் வகை பண்பு உம் பகர் பெயர் ஆகி
ஒரு குணம் பல குணம் தழுவி பெயர் வினை
ஒருவா செய்யுள் கு உரியன உரிச்சொல்     442
உயிர் உயிர் அல்லது ஆம் பொருள் குணம் பண்பு ஏ     443
ஒன்று முதல் ஆ கீழ் கொண்டு மேல் உணர்தலின்
ஓர் அறிவு ஆதி ஆ உயிர் ஐந்து ஆகும்     444
புல் மரம் முதல உற்று அறியும் ஓர் அறிவு உயிர்     445
முரள் நந்து ஆதி நா அறிவு ஒடு ஈர் அறிவு உயிர்     446
சிதல் எறும்பு ஆதி மூக்கு அறிவின் மூ அறிவு உயிர்     447
தும்பி வண்டு ஆதி கண் அறிவின் நால் அறிவு உயிர்     448
வானவர் மக்கள் நரகர் விலங்கு புள்
ஆதி செவி அறிவு ஓடு ஐ அறிவு உயிர் ஏ     449
உணர்வு இயல் ஆம் உயிர் ஒன்று உம் ஒழித்த
உடல் முதல் அனைத்து உம் உயிர் அல் பொருள் ஏ     450
ஒற்றுமை நயத்தின் ஒன்று என தோன்றின் உம்
வேற்றுமை நயத்தின் வேறு ஏ உடல் உயிர்     451
அறிவு அருள் ஆசை அச்சம் மானம்
நிறை பொறை ஓர்ப்பு கடைப்பிடி மையல்
நினைவு வெறுப்பு உவப்பு இரக்கம் நாண் வெகுளி
துணிவு அழுக்காறு அன்பு எளிமை எய்த்தல்
துன்பம் இன்பம் இளமை மூப்பு இகல்
வென்றி பொச்சாப்பு ஊக்கம் மறம் மதம்
மறவி இனைய உடல் கொள் உயிர் குணம்     452
துய்த்தல் துஞ்சல் தொழுதல் அணிதல்
உய்த்தல் ஆதி உடல் உயிர் தொழில் குணம்     453
பல் வகை வடிவு இரு நாற்றம் ஐ வண்ணம்
அறு சுவை ஊறு எட்டு உயிர் அல் பொருள் குணம்     454
தோன்றல் மறைதல் வளர்தல் சுருங்கல்
நீங்கல் அடைதல் நடுங்கல் இசைத்தல்
ஈதல் இன்னன இரு பொருள் தொழில் குணம்     455
சால உறு தவ நனி கூர் கழி மிகல்     456
கடி என் கிளவி காப்பு ஏ கூர்மை
விரை ஏ விளக்கம் அச்சம் சிறப்பு ஏ
விரைவு ஏ மிகுதி புதுமை ஆர்த்தல்
வரைவு ஏ மன்றல் கரிப்பின் ஆகும்     457
மாற்றம் நுவற்சி செப்பு உரை கரை நொடி இசை
கூற்று புகறல் மொழி கிளவி விளம்பு அறை
பாட்டு பகர்ச்சி இயம்பல் சொல் ஏ     458
முழக்கு இரட்டு ஒலி கலி இசை துவை பிளிறு இரை
இரக்கு அழுங்கு இயம்பல் இமிழ் குளிறு அதிர் குரை
கனை சிலை சும்மை கௌவை கம்பலை
அரவம் ஆர்ப்பு ஓடு இன்னன ஓசை     459
இன்னது இன்னுழி இன்னணம் இயலும்
என்று இசை நூல் உள் குண குணிப்பெயர்கள்
சொல்லாம் பரத்தலின் பிங்கலம் முதல் ஆ
நல்லோர் உரிச்சொல் இல் நயந்தனர் கொளல் ஏ     460
சொல் தொறு உம் இற்று இதன் பெற்றி என்று அனைத்து உம்
முற்ற மொழிகுறின் முடிவு இல ஆதலின்
சொற்றவற்று இயல் ஆன் மற்றைய பிற உம்
தெற்று என உணர்தல் தெள்ளியோர் திறன் ஏ     461
பழையன கழிதல் உம் புதியன புகுதல் உம்
வழு அல கால வகையின் ஆன் ஏ     462
நன்னூல் முற்றிற்று.

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.