|
||||||||
தமிழகக் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் சில முக்கிய புள்ளிவிவரங்கள் |
||||||||
![]() * தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் கடந்தகால தனித்தன்மையை இழந்து இந்தத் தேர்தலில் தலா 0.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று பெரும் தோல்வி அடைந்துள்ளன.போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட்டும் காலி
*தமிழகத்தில் அதிமுக 44.3%; திமுக 23.6%; பாஜக 5.5 % தேமுதிக 5.1% வாக்குகள் பெற்றன *அதிமுகவுக்கு 44.3% தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஒரு கோடியே 79 லட்சத்து 76 ஆயிரத்து 364 வாக்குகள் கிடைத்துள்ளன. இது பதிவான மொத்த வாக்குகளில் 44.3 சதவீதமாகும். *திமுக 23.6% திமுகவுக்கு 95 லட்சத்து 73 ஆயிரத்து 287 வாக்குகள் கிடைத்துள்ளன. இது, பதிவான வாக்குகளில் 23.6 சதவீதமாகும். ஆனால், கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு 25.09 சதவீத வாக்குகள் கிடைத்தன. *பாஜகவுக்கு 5.5% பாரதிய ஜனதா கட்சி 5.5.% வாக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது 22 லட்சத்து 21 ஆயிரத்துக்கு 141 வாக்குகளைப் பெற்றுள்ளது. *பாமக 4.4% பாட்டாளி மக்கள் கட்சிக்கு 4.4% வாக்குகள் கிடைத்துள்ளன. மொத்தம் பதிவான வாக்குகளில் 18 லட்சத்து 4 ஆயிரத்து 812 வாக்குகள் அக்கட்சிக்கு கிடைத்தன. *மதிமுக 3.5% மதிமுகவுக்கு 3.5% வாக்குகள் கிடைத்துள்ளன. பதிவான வாக்குகளில் 14 லட்சத்து 17 ஆயிரத்து 535 வாக்குகளை மதிமுக பெற்றுள்ளது. *தேமுதிக 5.1% தேமுதிகவானது 5.1% வாக்குகளைப் பெற்றுள்ளது. பதிவான வாக்குகளில் 20 லட்சத்து 79 ஆயிரத்து 392 வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது. *காங்கிரஸ் 4.3% காங்கிரஸ் கட்சிக்கு பதிவான வாக்குகளில் 4.3% வாக்குகள் கிடைத்துள்ளன. மொத்தம் 17 லட்சத்துக்கு 49 ஆயிரத்துக்கு 718 வாக்குகள் காங்கிரஸுக்கு விழுந்துள்ளன. *சிறுத்தைகள் 1.5% விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 1.5% வாக்குகள் கிடைத்துள்ளன. மொத்தம் 6 லட்சத்து 6 ஆயிரத்துக்கு 110 வாக்குகள் கிடைத்துள்ளன *புதிய தமிழகம் 0.6% புதிய தமிழகம் கட்சிக்கு 0.6% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. மொத்தம் 2 லட்சத்து 62 ஆயிரத்து 812 வாக்குகள் அக்கட்சிக்கு கிடைத்திருக்கிறது. *மனித நேய மக்கள் கட்சி 0.6% மனித நேய மக்கள் கட்சி 0.6% வாக்குகளைப் பெற்றுள்ளன. மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 679 வாக்குகள் இது. *சி.பி.எம் 0.5% மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 0.5% வாக்குகள் விழுந்துள்ளன. மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 614 வாக்குகள் கிடைத்துள்ளன. *சி.பி.ஐ - 0.5% இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 0.5% வாக்குகள் கிடைத்தன. அதாவது மொத்தம் 2 லட்சத்து 19 ஆயிரத்து 557 வாக்குகள் அக்கட்சிக்கு கிடைத்திருக்கிறது. *இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இக்கட்சியும் 0.5% வாக்குகளைப் பெற்றுள்ளது. மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 896 வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. *ஆம் ஆத்மி- 0.5% ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் 0.5% வாக்குகள் பெற்றுள்ளது. மொத்தம் 2 லட்சத்து 3 ஆயிரத்து 151 வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றது. *தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர்- திருவள்ளூர்(தனி) அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர் பி.வேணுகோபால். பெற்ற வாக்குகள் 6 லட்சத்து 28 ஆயிரத்து 499 |
||||||||
by Swathi on 17 May 2014 1 Comments | ||||||||
Tags: Tamilnadu Vote Statistics தமிழக தேர்தல் லோக்சபா தேர்தல் பாஜக கூட்டணி தேமுதிக திமுக காங்கிரஸ் | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|