LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

கேஸ் சிலிண்டரை சிக்கனமாக பயன்படுத்த சில யோசனைக்கள்

     சமீபத்தில் மத்திய அரசு வருடத்திற்கு ஒன்பது சிலிண்டர்தான் மானிய விலையில் வழங்கப்படும் அதற்கு மேல் தேவைப்படும் சிலிண்டர்களை 733 ரூபாய் கொடுத்துதான்  வாங்கவேண்டும் என அறிவித்தது.மத்திய அரசின் இந்த அறிவிப்பை கண்டு இந்திய குடும்ப தலைவிகள் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசி ஒரு பக்கம் இருக்க கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடு குடும்பதலைவிகளுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது.கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடை எங்களால் உடைக்க முடியவில்லை என்றலும் கேஸ் சிலிண்டர் பிரச்னைக்கு சில தீர்வுகளை வழங்குகிறோம்.முதலில் கேஸ் சிலிண்டருக்கு மற்று வழியை பார்ப்போம்.
 
இண்டக்சன் ஸ்டவ் :

கேஸ் சிலிண்டருக்கு பதிலாக மின்சார அடுப்பை பயன்படுத்துவது ஒரு சிறந்த தீர்வு.கேஸ் சிலிண்டரை விட இதில் சீக்கிரமாக சமைக்கலாம் என்பது இதன் தனி சிறப்பு. ஒரு கேஸ் சிலிண்டர் குறைந்தது 45 நாள் வருகிறது என வைத்துக் கொள்வோம்.

மானிய கேஸ் சிலிண்டர் விலை :  ரூ.386.50

சராசரியாக ஒரு நாளைக்கு ஆகும் செலவு : ரூ.8.50

ஒரு வருடத்திற்கு ஆகும் செலவு :ரூ 3,102.50


மின் அடுப்பின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்திற்குத் தேவையானவற்றை மூன்று வேளையும் சமைக்க  ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு மணி நேரம் ஆகும். ஒரு மணி நேரத்திற்கு மின் அடுப்பில் சமைக்க ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும். அதாவது, ஒரு நாளைக்கு 2 யூனிட் மின்சாரம் செலவாகும்.

ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை :ரூ 3 (500 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தினால்)

சராசரியாக ஒரு நாளைக்கு ஆகும் செலவு :ரூ 6

ஒரு வருடத்திற்கு ஆகும் செலவு : ரூ.2,160


இந்த கணக்கு நீங்கள் சொந்த வீட்டில் இருந்தால் மட்டுமே சரிவரும். நீங்கள் வாடகை வீட்டில் இருந்து, ஒரு யூனிட்டுக்கு 6 முதல் 10 ரூபாய் வரும்பட்சத்தில், அதற்காகும் செலவை நீங்கள் கேஸ் வாங்கி பயன்படுத்திவிடலாம்.


மாற்று வழிகளைப் பற்றி யோசிப்பது ஒருபக்கமிருக்க, சமையல் எரிவாயுவை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான சில டிப்ஸ்களை இப்போது பார்ப்போம்.


  • சமைப்பதற்கு அகலமான பாத்திரத்தை உபயோகிப்பது எரிபொருளை மிச்சப்படுத்தும்.  
  • பாத்திரத்தில் சாதம் வடிக்காமல் குக்கரில் சமைப்பது நல்லது.ஒரே குக்கரில் அரிசி,காய்கறி,பருப்பு என தனித்தனி பாத்திரத்தில் சமைப்பது அதிகமான கேஸை மிச்சப்படுத்தும்.
  • சமைப்பதற்கான பொருட்களை தயார் செய்து வைத்து விட்டு பிறகு சமைக்க ஆரம்பிக்கலாம்.
  • வெந்நீர் வைப்பதற்கு கேஸ் அடுப்பை பயன்படுத்தாமல், எலெக்ட்ரிக் வாட்டர் ஹீடர்களை பயன்படுத்தலாம்.
  • அடிக்கடி டீ, காபி போடாமல் மொத்தமாகப் போட்டு ஃபிளாஸ்கில் வைத்து கொள்ளலாம்.
  • ஃபிரிட்ஜில் வைத்திருந்த பொருட்களை சிறிது நேரம் வெளியே வைத்து விட்டு பிறகு சமைக்கலாம்.


by Swathi   on 07 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பச்சை ரோஜா பச்சை ரோஜா
கீச்சுச் சாளரம் கீச்சுச் சாளரம்
சிரிப்பு வலை சிரிப்பு வலை
வேர் மறவா வெளிநாட்டு வாழ் தமிழர்: வேர் மறவா வெளிநாட்டு வாழ் தமிழர்:
ஆசிரியர் பக்கம் ஆசிரியர் பக்கம்
சனவரி   மாத -ஆசிரியர் கடிதம். சனவரி மாத -ஆசிரியர் கடிதம்.
செய்திச்சுருக்கம் (நவம்பர் , 2019) செய்திச்சுருக்கம் (நவம்பர் , 2019)
வாய்மை, மெய்ம்மை & உண்மை வெவ்வேறா? வாய்மை, மெய்ம்மை & உண்மை வெவ்வேறா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.