LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த அமெரிக்க தமிழர் பாடல் வெளியீடு ...


தமிழ்நாட்டுப் பிரச்சனைகளுக்கு அனைத்து தரப்பு மக்களும் ஒன்று திரண்டு இழந்துகொண்டிருக்கும் உரிமைகளை மீட்க  பல்வேறு வழிகளில் போராடி வருகிறார்கள் . அதற்கு வலு சேர்க்கும் வகையில், அமெரிக்காவில் பணிபுரியும் தமிழர்களாகிய எங்களின் சிறிய பங்களிப்பாக கருதுகிறோம் என்கிறார் நியுஜெர்சியில் வசிக்கும் வசந்த் வசீகரன்.
காவிரி பிரச்சனையை முன்னிறுத்தி வெளியாகியுள்ள ‘அணையைத் திற – Justice for Tamil Nadu’ என்ற பாடல் சமூகத்வலைத் தளங்களில் விரும்பி பகிரப்படுகிறது .   அமெரிக்கத் தமிழர்கள் உருவாக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் பாடல் காவிரி விவகாரம் மற்றும் விவசாயிகள் பிரச்சனைக்கு ஒன்று கூடி தீர்வு காண்போம் என அழைப்பு விடுக்கிறது.
மணிகண்டன் ஆனந்தராஜ் இயற்றிய பாடலுக்கு வசந்த் வசீகரன் இசையமைத்துள்ளார். கிருஷ்ணா ஸ்ரீதரன், சுஷ்மிதா சுதர்ஸன் மற்றும் வசந்த் வசீகரன் பாடியுள்ளனர்.
வா வா தோழா கைகள் கோர்ப்போம், கண்ணீர் மண்ணில் தண்ணீர் சேர்ப்போம் எனத் தொடங்கும் இந்தப் பாடலில் அழுத்தமான வரிகள் இடம்பெற்றுள்ளன ..  
‘வந்தாரை வாழ வைத்தோம்
உழவரை கொன்று விட்டோம்
யானை கட்டி போரடித்தோம்
அணையைக் கட்ட மறந்துபுட்டோம்
நீதி கேட்டு வந்தவனை இங்கே
நிர்வாணம் ஆக்கிப்புட்டோம்
ஏர் தூக்கி வளர்ந்தவன இங்கே
எலிக்கறி திங்க வச்சோம்
நூறு நாள் போராட்டம்
குறை கேட்க நேரமில்லை
விவசாய நாட்டைத் தானே
விஷமாக மாத்திப்புட்டோம்’
என்று தமிழ்நாட்டு விவசாயிகள் நிலையை சுட்டிக்காட்டுகிறது.  
இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ள வசந்த் வசீகரன் குறிப்பிடுகையில் ‘அமெரிக்காவில் கணிணித் துறையில் பணியாற்றினாலும், திரையுலகில் முழுநேர இசையமைப்பாளராக வேண்டும் என்ற லட்சியத்தில் பல புதிய பாடல்களுக்கு இசையமைத்து வருகிறேன். அந்தப் பாடல்கள் சமூக நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் தனிக் கவனம் செலுத்துகிறேன் என்று குறிப்பிடுகிறார் .. 
வசந்த் வசீகரன் அமெரிக்காவில் இன்னிசைக் குழுவும் நீண்ட நாட்களாக நடத்தி வருகிறார்.   தமிழ்த் திரையுலகின் முக்கிய பாடகர்கள் வசந்த் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்கள்.

தமிழ்நாட்டுப் பிரச்சனைகளுக்கு அனைத்து தரப்பு மக்களும் ஒன்று திரண்டு இழந்துகொண்டிருக்கும் உரிமைகளை மீட்க  பல்வேறு வழிகளில் போராடி வருகிறார்கள் . அதற்கு வலு சேர்க்கும் வகையில், அமெரிக்காவில் பணிபுரியும் தமிழர்களாகிய எங்களின் சிறிய பங்களிப்பாக கருதுகிறோம் என்கிறார் நியுஜெர்சியில் வசிக்கும் வசந்த் வசீகரன்.

காவிரி பிரச்சனையை முன்னிறுத்தி வெளியாகியுள்ள அணையைத் திற – Justice for Tamil Nadu’ என்ற பாடல் சமூகத்வலைத் தளங்களில் விரும்பி பகிரப்படுகிறது .   அமெரிக்கத் தமிழர்கள் உருவாக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் பாடல் காவிரி விவகாரம் மற்றும் விவசாயிகள் பிரச்சனைக்கு ஒன்று கூடி தீர்வு காண்போம் என அழைப்பு விடுக்கிறது.

 

மணிகண்டன் ஆனந்தராஜ் இயற்றிய பாடலுக்கு வசந்த் வசீகரன் இசையமைத்துள்ளார். கிருஷ்ணா ஸ்ரீதரன், சுஷ்மிதா சுதர்ஸன் மற்றும் வசந்த் வசீகரன் பாடியுள்ளனர்.

வா வா தோழா கைகள் கோர்ப்போம், கண்ணீர் மண்ணில் தண்ணீர் சேர்ப்போம் எனத் தொடங்கும் இந்தப் பாடலில் அழுத்தமான வரிகள் இடம்பெற்றுள்ளன .. 

 

வந்தாரை வாழ வைத்தோம்

உழவரை கொன்று விட்டோம்

யானை கட்டி போரடித்தோம்

அணையைக் கட்ட மறந்துபுட்டோம்

நீதி கேட்டு வந்தவனை இங்கே

நிர்வாணம் ஆக்கிப்புட்டோம்

ஏர் தூக்கி வளர்ந்தவன இங்கே

எலிக்கறி திங்க வச்சோம்

நூறு நாள் போராட்டம்

குறை கேட்க நேரமில்லை

விவசாய நாட்டைத் தானே

விஷமாக மாத்திப்புட்டோம்

 

என்று தமிழ்நாட்டு விவசாயிகள் நிலையை சுட்டிக்காட்டுகிறது. 

இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ள வசந்த் வசீகரன் குறிப்பிடுகையில் அமெரிக்காவில் கணிணித் துறையில் பணியாற்றினாலும், திரையுலகில் முழுநேர இசையமைப்பாளராக வேண்டும் என்ற லட்சியத்தில் பல புதிய பாடல்களுக்கு இசையமைத்து வருகிறேன். அந்தப் பாடல்கள் சமூக நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் தனிக் கவனம் செலுத்துகிறேன் என்று குறிப்பிடுகிறார் ..

 

வசந்த் வசீகரன் அமெரிக்காவில் இன்னிசைக் குழுவும் நீண்ட நாட்களாக நடத்தி வருகிறார்.   தமிழ்த் திரையுலகின் முக்கிய பாடகர்கள் வசந்த் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்கள்..

by Swathi   on 04 May 2018  4 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
04-May-2018 14:53:19 VT Muruga vinoth kumar said : Report Abuse
வணக்கம். உலகினில் முதன் முதலில் கட்டப்பட்ட அணை கல்லணை, கட்டியவர் கரிகாற்சோழன், கட்டப்பட்ட ஆறு காவிரி. இது நமது பூலோக உரிமை.இதை இழத்தல் இழிவானது.
 
04-May-2018 13:52:48 vinoth said : Report Abuse
ஆம்
 
04-May-2018 08:43:02 சின்னசாமி RA said : Report Abuse
தமிழன் நினைத்தால் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்து விடுவான். இது உண்மை. நன்றி
 
04-May-2018 08:42:53 சின்னசாமி RA said : Report Abuse
தமிழன் நினைத்தால் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்து விடுவான். இது உண்மை. நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.