LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழ்க்கல்வி - Tamil Learning Print Friendly and PDF
- தமிழ்க்கல்வி

தமிழில் உள்ள எழுத்துக்களின் சிறப்பு

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்.!


அ -----> எட்டு

ஆ -----> பசு

ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி

உ -----> சிவன்

ஊ -----> தசை, இறைச்சி

ஏ -----> அம்பு

ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு

ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை

கா -----> சோலை, காத்தல்

கூ -----> பூமி, கூவுதல்

கை -----> கரம், உறுப்பு

கோ -----> அரசன், தலைவன், இறைவன்

சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்

சீ -----> இகழ்ச்சி, திருமகள்

சே -----> எருது, அழிஞ்சில் மரம்

சோ -----> மதில்

தா -----> கொடு, கேட்பது

தீ -----> நெருப்பு

து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு

தூ -----> வெண்மை, தூய்மை

தே -----> நாயகன், தெய்வம்

தை -----> மாதம்

நா -----> நாக்கு

நீ -----> நின்னை

நே -----> அன்பு, நேயம்

நை -----> வருந்து, நைதல்

நொ -----> நொண்டி, துன்பம்

நோ -----> நோவு, வருத்தம்

நௌ -----> மரக்கலம்

பா -----> பாட்டு, நிழல், அழகு

பூ -----> மலர்

பே -----> மேகம், நுரை, அழகு

பை -----> பாம்புப் படம், பசுமை, உறை

போ -----> செல்

மா -----> மாமரம், பெரிய, விலங்கு

மீ -----> ஆகாயம், மேலே, உயரம்

மு -----> மூப்பு

மூ -----> மூன்று

மே -----> மேன்மை, மேல்

மை -----> அஞ்சனம், கண்மை, இருள்

மோ -----> முகர்தல், மோதல்

யா -----> அகலம், மரம்

வா -----> அழைத்தல்

வீ -----> பறவை, பூ, அழகு

வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்

வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்த.

by Swathi   on 11 Feb 2014  1 Comments
Tags: Special Tamil Letters   Tamil Letters   Tamil Eluththukkal   தமிழ் எழுத்துக்கள்   சிறப்பு எழுத்துக்கள்   சிறப்பு தமிழ் எழுத்துக்கள்   ஒரு எழுத்து ஒரு பொருள்  
 தொடர்புடையவை-Related Articles
தமிழில் கீச்சு எழுதும் வழிகள் : தொகுப்பு தமிழில் கீச்சு எழுதும் வழிகள் : தொகுப்பு
தமிழ் எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள்
ஓரெழுத்தாக தனித்து நின்று பொருள் தரும் 42 தமிழ் எழுத்துக்கள் !! ஓரெழுத்தாக தனித்து நின்று பொருள் தரும் 42 தமிழ் எழுத்துக்கள் !!
தமிழில் உள்ள எழுத்துக்களின் சிறப்பு தமிழில் உள்ள எழுத்துக்களின் சிறப்பு
கருத்துகள்
09-Apr-2014 13:17:47 Raamachandran said : Report Abuse
உ என்பது சிவனைக் குறிக்காது. பிள்ளையாரைக் குறிக்கும் சொல். பிள்ளையார் என்றால் விநாயகர் அல்ல. பழம் தமிழ் நூல்கள் எல்லாம் முருகனைத்தான் பிள்ளையார் என்று குறிக்கின்றன . விநாயக வழிபாட்டை பிரபல படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ் கடவுள் முருகன் பெயரை வினாயருக்கு வைத்து ஆன்மீக அரசியல் நடத்தி விட்டனர்.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.