|
|||||
கால்நடைகளை நல்ல விலைக்கு விற்பனை செய்யச் சிறப்பு இணையதளம் |
|||||
![]()
விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை நல்ல விலைக்கு விற்பனை செய்யச் சிறப்பு வசதியாக இணையதளம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்: விவசாயிகள் நலன் கருதி அவர்களது வருவாய் பெருக்கும் விதமாக தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை நல்ல விலைக்கு உரிய நேரத்தில் விற்பனை செய்யச் சிறப்பு வசதியாக இணையத்தளம் உருவாக்கப்படும்.
இந்த இணையதளம் மூலம் கால்நடைகளில் சந்தை விலை நிலவரம் பல்வேறு சந்தைகளில் இருப்பு நிலவரம், உள்ளிட்டவை கால்நடை விவசாயிகளால் அறிந்து கொள்ள இயலும்.
இத்தகவல் மூலம் உரிய விலைக்குக் கால்நடைகளை விற்று விவசாயிகளுக்குப் பொருளீட்டும் வசதி ஏற்படுத்தப்படும். இப்பணிகளைத் தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. .
|
|||||
by hemavathi on 27 Jun 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|