LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஆன்மீகத் தமிழர்கள் Print Friendly and PDF

ஆதி சங்கரர்

 

பிறப்பு:கி.மு நான்காம் நூற்றாண்டு என்பதும் கி.பி ஏழாம் நூற்றாண்டு என்பதும் இவர் வாழ்ந்துவந்த காலத்தினை பற்றி இரு வாதங்கள் நிலவுகின்றன.
துறவறம்:தமது நான்காம் அகவையில் துறவறம் மேற்கொண்ட சங்கரர் கோவிந்த பகவத்பாதர் என்பவரிடம் அத்வைதம் முதலிய விஷயங்களைக் கற்றுத் தேர்ந்தார்.அத்வைத ஞானம்:தமது அத்வைதக் கொள்கைகளை பறைசாற்றி வரும்போது ஒரு நாள் சங்கரர் ஆற்றில் நீராடி விட்டு வருகிற பொது ஐந்து நாய்களுடன் சண்டாளர் ஒருவர் அவர் முன்னே வருகின்றார்.அதைக் கண்டு பதைத்த சங்கரரின் சீடர்களும் சங்கரருக்கு வழி விட்டு ஒதுங்குமாறு அவரைக் கேட்கின்றனர். அப்போது அச் சண்டாளர் சங்கரரிடம் "என் உடல் நகர வேண்டுமா அல்லது ஆன்மா நகர வேண்டுமா" எனக் கேட்க, சங்கரர் அவன் காலில் விழுவதாக சங்கர விஜயம் கூறுகின்றது.உண்மையுணர்ந்தவராய், அத்வைதத்தின் பரிபூர்ண உண்மையை தமக்கே உணர்த்தி அருளியதாக கூறி அச்சண்டாளரை தமது குருவாக ஏற்று சங்கரர் மனீஷா பஞ்சகம் பாடினார். இதுவே சங்கரருக்கு அத்வைத ஞானம் பரிபூர்ணமாக கிடைத்த சம்பவம் ஆகும்.
புதிய மதங்கள் உருவாதல்:தொன்று தொட்டு நிலவி வந்த சிவனை வழிபடும் சைவம், திருமாலை வழிபடும் வைணவம், சத்தியை வழிபடும் சாக்தம், வினாயகரை வழிபடும் காணபத்யம், முருகனை வழிபடும் கௌமாரம், சூரியனை வழிபடும் சௌரம் முதலியவற்றை முறைப் படுத்தி ஆறு சமயங்களாக வகுத்தளித்தார்.அவர் கருத்துப்படி, சமூகத்திற்கு ஒவ்வாத ஆதாரமற்ற, தேவையற்ற சமயப் பழக்க வழக்கங்களாக கருதியவைகளைச் சாடவும் செய்தார்.
கர்ம மீமாம்ஸா:காபாலிக சமயம், அவர் தடுத்தாட்கொண்ட சமயங்களுள் ஒன்று. இன்றைய சென்னைக்கு அருகில் இருக்கும் மாங்காடு எனும் ஊரே காபாலிகர்களோடு சங்கரர் வாதம் செய்த இடமாகும்.கர்ம மீமாம்ஸா எனப் படும் கொள்கையினை பின்பற்றி மஹிஷ்மதி எனும் ஊரில் வசித்து வந்த மண்டன மிஸ்ரர் உடன் அவரது மனைவி சரஸவாணி முன்னிலையில் வாதம் செய்தார் சங்கரர். மண்டன மிஸ்ரரைத் தொடர்ந்து அவரது மனைவி சரஸவாணியுடனும் வாதிடுகின்றார் சங்கரர். இன்றைய தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் எனும் ஊரில் சைவ சமயத்தவருடன் வாதிடுகின்றார் சங்கரர்.இவையாவும் இவர் வாதிட்டவைகலாகும்.

பிறப்பு:

 

     கி.மு நான்காம் நூற்றாண்டு என்பதும் கி.பி ஏழாம் நூற்றாண்டு என்பதும் இவர் வாழ்ந்துவந்த காலத்தினை பற்றி இரு வாதங்கள் நிலவுகின்றன.தமது நான்காம் அகவையில் துறவறம் மேற்கொண்ட சங்கரர் கோவிந்த பகவத்பாதர் என்பவரிடம் அத்வைதம் முதலிய விஷயங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

 

அத்வைத ஞானம்:

 

     தமது அத்வைதக் கொள்கைகளை பறைசாற்றி வரும்போது ஒரு நாள் சங்கரர் ஆற்றில் நீராடி விட்டு வருகிற பொது ஐந்து நாய்களுடன் சண்டாளர் ஒருவர் அவர் முன்னே வருகின்றார்.அதைக் கண்டு பதைத்த சங்கரரின் சீடர்களும் சங்கரருக்கு வழி விட்டு ஒதுங்குமாறு அவரைக் கேட்கின்றனர். அப்போது அச் சண்டாளர் சங்கரரிடம் "என் உடல் நகர வேண்டுமா அல்லது ஆன்மா நகர வேண்டுமா" எனக் கேட்க, சங்கரர் அவன் காலில் விழுவதாக சங்கர விஜயம் கூறுகின்றது.உண்மையுணர்ந்தவராய், அத்வைதத்தின் பரிபூர்ண உண்மையை தமக்கே உணர்த்தி அருளியதாக கூறி அச்சண்டாளரை தமது குருவாக ஏற்று சங்கரர் மனீஷா பஞ்சகம் பாடினார். இதுவே சங்கரருக்கு அத்வைத ஞானம் பரிபூர்ணமாக கிடைத்த சம்பவம் ஆகும்.

 

புதிய மதங்கள் உருவாதல்:

 

     தொன்று தொட்டு நிலவி வந்த சிவனை வழிபடும் சைவம், திருமாலை வழிபடும் வைணவம், சத்தியை வழிபடும் சாக்தம், வினாயகரை வழிபடும் காணபத்யம், முருகனை வழிபடும் கௌமாரம், சூரியனை வழிபடும் சௌரம் முதலியவற்றை முறைப் படுத்தி ஆறு சமயங்களாக வகுத்தளித்தார்.அவர் கருத்துப்படி, சமூகத்திற்கு ஒவ்வாத ஆதாரமற்ற, தேவையற்ற சமயப் பழக்க வழக்கங்களாக கருதியவைகளைச் சாடவும் செய்தார்.

 

கர்ம மீமாம்ஸா:

 

     காபாலிக சமயம், அவர் தடுத்தாட்கொண்ட சமயங்களுள் ஒன்று. இன்றைய சென்னைக்கு அருகில் இருக்கும் மாங்காடு எனும் ஊரே காபாலிகர்களோடு சங்கரர் வாதம் செய்த இடமாகும்.கர்ம மீமாம்ஸா எனப் படும் கொள்கையினை பின்பற்றி மஹிஷ்மதி எனும் ஊரில் வசித்து வந்த மண்டன மிஸ்ரர் உடன் அவரது மனைவி சரஸவாணி முன்னிலையில் வாதம் செய்தார் சங்கரர். மண்டன மிஸ்ரரைத் தொடர்ந்து அவரது மனைவி சரஸவாணியுடனும் வாதிடுகின்றார் சங்கரர். இன்றைய தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் எனும் ஊரில் சைவ சமயத்தவருடன் வாதிடுகின்றார் சங்கரர்.இவையாவும் இவர் வாதிட்டவைகலாகும்.

by Swathi   on 22 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருவையாற்றில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா - பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி கலைஞர்கள் இசையஞ்சலி. திருவையாற்றில் தியாகராஜ சுவாமிகளின் 177-வது ஆராதனை விழா - பஞ்சரத்தினக் கீர்த்தனைகளைப் பாடி கலைஞர்கள் இசையஞ்சலி.
திருமுருக கிருபானந்த வாரியார் திருமுருக கிருபானந்த வாரியார்
தமிழும் சமயமும் ஒரு சிறப்பு கட்டுரை தமிழும் சமயமும் ஒரு சிறப்பு கட்டுரை
தங்கம்மா அப்பாக்குட்டி தங்கம்மா அப்பாக்குட்டி
பத்திரகிரியார் பத்திரகிரியார்
முரளீதர சுவாமிகள் முரளீதர சுவாமிகள்
முகவை கண்ண முருகனார் முகவை கண்ண முருகனார்
மத்துவர் மத்துவர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.