|
|||||
இராமானுசர் |
|||||
ஆச்சாரிய பரம்பரையில் பிறப்பு:ஒன்பதாவது நூற்றாண்டைச் சார்ந்த நாதமுனிகள் என்ற முதல் ஆச்சாரியரில் அடங்கிய குரு பரம்பரையில் மூன்றாவதாக வந்தவர் இராமானுசர். ஸ்ரீவைஷ்ணவப் பண்பாட்டில் ஆழ்வார்கள் பன்னிருவரும் மக்களின் இதயத்தைத் தொட்டு மனதை மாற்றியவர்கள். ஆச்சாரியர்களோ புத்திபூர்வமாக மனதைத் தொட்டவர்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன் புவியில் உலாவிய நம்மாழ்வாரின் பிரபந்தங்களை நாதமுனிகள்தான் தமிழ்நாட்டில் தேடித்தேடி வெளிக்கொணர்ந்து, பாசுரங்களை இசைக்குகந்ததாக ஆக்கி எல்லா இடங்களிலும் பரப்பினார். இரண்டாவதாக ஆச்சாரிய பீடத்தில் ஏறியவர் யமுனாச்சாரியார் என்பவர். ஆளவந்தார் என்பது அவரது இன்னொரு பெயர். நாதமுனிகளின் பேரன். இராமானுசரின் விளக்கவுரை:யமுனாச்சாரியார் தன்னைக் கூப்பிட்டிருக்கிறார் என்று காஞ்சீபுரத்திலிருந்து ஓடோடியும் வந்த இராமானுசர் யமுனாச்சாரியாரின் உயிர்பிரிந்த உடலைத்தான் பார்த்தார். ஆனால் அவ்வுடலின் மூன்று கைவிரல்கள் மடிந்த நிலையில் இருந்தன. யாராலும் காரணம் சொல்ல இயலவில்லை. இராமானுசர் மூன்று பிரமாணங்கள் எடுத்துக் கொள்வதாகச் சொல்லி அப்பிரமாணங்களை ஒவ்வொன்றாகச் சொன்னதும் பிண்த்தின் மூன்று மடிந்த விரல்களும் ஒவ்வொன்றாக விரிந்தன. பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டி ஒரு உரை எழுதுவது,பராசரரின் பெயரை வைத்து அழியாத புகழுக்கு வழி கோலுவது;
நம்மாழ்வாரின் பெயர் உலகில் என்றென்றும் வாழும்படிச் செய்வது.இம்மூன்றையும் இராமானுசர் தன் காலத்தில் செய்து முடித்தார் என்பது வரலாறு. பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற உரை எழுதி 1100ம் ஆண்டு முடித்தார். பராசரரின் பெயரை தன் சீடன் மகனுக்கு வைத்து, அவனை விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு ஒரு விரிவான உரை எழுதச் செய்தார்.எட்டெழுத்து மந்திரம்: யமுனாச்சாரியாரின் வைணவத் தத்துவங்களைக் கற்பதற்காகவே இரண்டாண்டுகள் தவமிருந்தார் இராமானுசர். யமுனாச்சாரியாரின் ஐந்து சீடர்கள் அவருக்குக் கற்பித்தனர். திருக்கோட்டியூரில் எட்டெழுத்து மந்திரத்தை அவர்களில் ஒருவரிடமிருந்து உபதேசம் பெற்றவுடன் கோவில் கோபுரத்தின் மேலேறி மாந்தர் அனைவருக்கும் கேட்கும்படி அதை எல்லோருக்கும் உபதேசம் செய்தார்
இரட்டைப் பொறுப்பு:இராமானுசர் சிறந்த வேதாந்தி மட்டும் அல்ல, பெரிய நிர்வாகியும் கூட. திருவரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி அன்றாடம் நடக்கவேண்டிய ஒழுங்கு முறைகளை உண்டாக்கினார். இவையெல்லாம் செவ்வனே செயல்பட முடிந்ததற்கு முழுக் காரணம் அவர் ஒருவராகவே திருவரங்கம் கோயில் நிர்வாகம், ஸ்ரீவைஷ்ணவ மட நிர்வாகம் ஆகிய இரட்டைப் பொறுப்பையும் ஏற்று நடத்தியது தான்.
பாரத முழுவதும் யாத்திரை:இராமானுசர் பாரததேசம் முழுவதும் யாத்திரை செய்து ஸ்ரீவைஷ்ணவத்தின் பெருமையை எங்கும் பறை சாற்றினார். எதிர்வாதங்கள் புரிந்தவர்களை வென்று ஸ்ரீவைஷ்ணவ மடங்களை நிறுவினார். சில இடங்களில், ஆன்மீகத்தில் பிடிப்பு இருந்தும் இல்லறத்திலேயே இருக்க விரும்பியவர்களையும் தன் மடங்களின் ஆன்மீகத் தலைவர்களாக்கினார். ஸ்ரீரங்கத்திலுள்ள தலைமை மடத்திற்கு மடாதிபதியாக வரவேண்டிய விதி முறைகளை வழிப்படுத்தினார்.இயற்றிய நூல்கள்: வடமொழியில் இராமானுசர் இயற்றிய ஸ்ரீபாஷ்யம் அவருடைய தலைசிறந்த படைப்பு. வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல். அதைத்தவிர வேதாந்த சங்கிரகம்,வேதாந்த சாரம், மற்றும், வேதாந்த தீபம்,கீதா பாஷ்யம் முதலியன அவர் இயற்றியவை ஆகும்.
ஆச்சாரிய பரம்பரையில் பிறப்பு:
ஒன்பதாவது நூற்றாண்டைச் சார்ந்த நாதமுனிகள் என்ற முதல் ஆச்சாரியரில் அடங்கிய குரு பரம்பரையில் மூன்றாவதாக வந்தவர் இராமானுசர். ஸ்ரீவைஷ்ணவப் பண்பாட்டில் ஆழ்வார்கள் பன்னிருவரும் மக்களின் இதயத்தைத் தொட்டு மனதை மாற்றியவர்கள். ஆச்சாரியர்களோ புத்திபூர்வமாக மனதைத் தொட்டவர்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன் புவியில் உலாவிய நம்மாழ்வாரின் பிரபந்தங்களை நாதமுனிகள்தான் தமிழ்நாட்டில் தேடித்தேடி வெளிக்கொணர்ந்து, பாசுரங்களை இசைக்குகந்ததாக ஆக்கி எல்லா இடங்களிலும் பரப்பினார். இரண்டாவதாக ஆச்சாரிய பீடத்தில் ஏறியவர் யமுனாச்சாரியார் என்பவர். ஆளவந்தார் என்பது அவரது இன்னொரு பெயர். நாதமுனிகளின் பேரன்.
இராமானுசரின் விளக்கவுரை:
யமுனாச்சாரியார் தன்னைக் கூப்பிட்டிருக்கிறார் என்று காஞ்சீபுரத்திலிருந்து ஓடோடியும் வந்த இராமானுசர் யமுனாச்சாரியாரின் உயிர்பிரிந்த உடலைத்தான் பார்த்தார். ஆனால் அவ்வுடலின் மூன்று கைவிரல்கள் மடிந்த நிலையில் இருந்தன. யாராலும் காரணம் சொல்ல இயலவில்லை. இராமானுசர் மூன்று பிரமாணங்கள் எடுத்துக் கொள்வதாகச் சொல்லி அப்பிரமாணங்களை ஒவ்வொன்றாகச் சொன்னதும் பிணத்தின் மூன்று மடிந்த விரல்களும் ஒவ்வொன்றாக விரிந்தன. பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டி ஒரு உரை எழுதுவது,பராசரரின் பெயரை வைத்து அழியாத புகழுக்கு வழி கோலுவது;நம்மாழ்வாரின் பெயர் உலகில் என்றென்றும் வாழும்படிச் செய்வது.இம்மூன்றையும் இராமானுசர் தன் காலத்தில் செய்து முடித்தார் என்பது வரலாறு. பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற உரை எழுதி 1100ம் ஆண்டு முடித்தார். பராசரரின் பெயரை தன் சீடன் மகனுக்கு வைத்து, அவனை விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு ஒரு விரிவான உரை எழுதச் செய்தார்.
எட்டெழுத்து மந்திரம்:
யமுனாச்சாரியாரின் வைணவத் தத்துவங்களைக் கற்பதற்காகவே இரண்டாண்டுகள் தவமிருந்தார் இராமானுசர். யமுனாச்சாரியாரின் ஐந்து சீடர்கள் அவருக்குக் கற்பித்தனர். திருக்கோட்டியூரில் எட்டெழுத்து மந்திரத்தை அவர்களில் ஒருவரிடமிருந்து உபதேசம் பெற்றவுடன் கோவில் கோபுரத்தின் மேலேறி மாந்தர் அனைவருக்கும் கேட்கும்படி அதை எல்லோருக்கும் உபதேசம் செய்தார்.
இரட்டைப் பொறுப்பு:
இராமானுசர் சிறந்த வேதாந்தி மட்டும் அல்ல, பெரிய நிர்வாகியும் கூட. திருவரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று அதை முற்றிலும் சீர்படுத்தி அன்றாடம் நடக்கவேண்டிய ஒழுங்கு முறைகளை உண்டாக்கினார். இவையெல்லாம் செவ்வனே செயல்பட முடிந்ததற்கு முழுக் காரணம் அவர் ஒருவராகவே திருவரங்கம் கோயில் நிர்வாகம், ஸ்ரீவைஷ்ணவ மட நிர்வாகம் ஆகிய இரட்டைப் பொறுப்பையும் ஏற்று நடத்தியது தான்.
பாரதம் முழுவதும் யாத்திரை:
இராமானுசர் பாரததேசம் முழுவதும் யாத்திரை செய்து ஸ்ரீவைஷ்ணவத்தின் பெருமையை எங்கும் பறை சாற்றினார். எதிர்வாதங்கள் புரிந்தவர்களை வென்று ஸ்ரீவைஷ்ணவ மடங்களை நிறுவினார். சில இடங்களில், ஆன்மீகத்தில் பிடிப்பு இருந்தும் இல்லறத்திலேயே இருக்க விரும்பியவர்களையும் தன் மடங்களின் ஆன்மீகத் தலைவர்களாக்கினார். ஸ்ரீரங்கத்திலுள்ள தலைமை மடத்திற்கு மடாதிபதியாக வரவேண்டிய விதி முறைகளை வழிப்படுத்தினார்.
இயற்றிய நூல்கள்:
வடமொழியில் இராமானுசர் இயற்றிய ஸ்ரீபாஷ்யம் அவருடைய தலைசிறந்த படைப்பு. வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல். அதைத்தவிர வேதாந்த சங்கிரகம்,வேதாந்த சாரம், மற்றும், வேதாந்த தீபம்,கீதா பாஷ்யம் முதலியன அவர் இயற்றியவை ஆகும். |
|||||
by Swathi on 22 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|