|
|||||
சித்பவானந்தர் |
|||||
பிறப்பு:தமிழ்நாடு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செங்குட்டைப்பாளையம் என்ற கிராமத்தில் பி. கே. பெரியண்ணக் கவுண்டர், நஞ்சம்மையார்
ஆகியோருக்கு மகனாக சிபவானந்தர் பிறந்தார். இயற்பெயர் சின்னுக்கவுண்டர். ஆத்துப் பொள்ளாச்சி கிராமப் பள்ளியிலும், பொள்ளாச்சி கிராமப்பள்ளியிலும்
ஆரம்பக்கல்வி கற்றார். கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலப் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி பெற்றார். "சென்னை சொற்பொழிவுகள்":இக்காலகட்டத்தில்
பொள்ளாச்சிக்கு வந்த பழனி சாது சுவாமிகள் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. பழனிக்குச் சென்று வர ஆரம்பித்தார். சட்டி சுவாமிகள் அறிமுகமும்
வாய்த்தது. 1918-இல் சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் சென்னை மாகாணத்தில் 7-ஆம் இடம் பெற்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் எஃப்.ஏ. வகுப்பில்
சேர்ந்தார்.மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்லும் நிலையில் சுவாமி விவேகானந்தரது "சென்னை சொற்பொழிவுகள்" என்ற நூலின் ஒரு கட்டுரையால்
கவரப்பட்டு பயணத்தை நிறுத்தினார். சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை படித்தார். அப்போது விக்டோரியா விடுதியில் தி. சு. அவிநாசிலிங்கம்
செட்டியார் அவர்களுடன் தோழர் ஆனார். இருவரும் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்குச் சென்று ஸ்ரீமத் சுவாமி சிவானந்தர், ஸ்ரீமத் சுவாமி பிரேமானந்தர்
ஆகியோரின் அறிமுகம் பெற்றனர்.பிரம்மச்சரிய தீட்சை:1923-ல் இளங்கலை படிப்பை முடித்ததும் அகிலானந்த சுவாமிகளுடன் புவனேஸ்வரம் ஸ்ரீ
ராமகிருஷ்ண மடம் சென்று சுவாமி சிவானந்தரிடம் பிரம்மச்சரிய தீட்சை பெற்றார். திரையம்பக சைதன்யர் என்ற பெயருடன் அங்கே இருந்தார். சுவாமி
சிவானந்தரின் அனுமதி பெற்றுத் தென்னாட்டில் பயணம்செய்த சேரன் மகாதேவியில் தேச பக்தர் வ. வே. சு. ஐயரைச் சந்தித்தார்.1924 சூன் மாதம் சலவைத்
தொழிலாளி ஒருவர் அளித்த நிலத்தில் சுவாமி சிவானந்தர் ஊட்டி ஆசிரமத்திற்கு அடிக்கல் நாட்டினார். திரையம்பக சைதன்யரின் குடும்பம் ஆசிரமம்
அமைக்க உதவி செய்தனர். 1926 சூலை 25 இல் சுவாமி சிவானந்தர் சந்நியாச தீட்சை வழங்கி சுவாமி சித்பவானந்தர் என்று பெயரிட்டார்.ஸ்ரீ ராமகிருஷ்ண
மடம்:1930 முதல் 1940 வரை உதகை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்தார். அப்போது காந்தியடிகள், நாராயணகுரு ஆகியோர் அங்கே வருகை
புரிந்தார்கள். சிவானந்தரின் சமாதியடைந்த பின்னர் ராமகிருஷ்ண மடத்தில் இருந்து விலகி கைலாய யாத்திரை ஒன்றை மேற்கொண்டார்.
திருச்சி அருகே திருப்பராய்த்துறைக்குச் சென்ற சித்பவானந்தர் தாருகாவனேசுவரர் கோயிலில் 1940 ஆம் ஆண்டில் நடந்த குடமுழுக்கு விழாவில்
பங்கேற்றார். அதை நடத்திய ராமநாதன் செட்டியார், கானாடுகாத்தான் அருணாச்சலம் செட்டியார் ஆகியோருடன் சந்திப்பு ஏற்பட்டது. திருப்பராய்த்துறையில்
தங்க முடிவெடுத்தார். நூற்றுக்கால் மண்டபத்தில் ஆரம்பப் பள்ளி ஒன்றை ஆரம்பித்தார். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலில் வாரம்
ஒருமுறை தாயுமானவர் பாடலுக்கு விளக்கம் அளித்தார்.தர்ம சக்கரம்:1942-ல் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தை நிறுவினார். குருகுல
முறையில் விவேகானந்த வித்யாவன நடுநிலைப் பள்ளி மற்றும் விவேகானந்த மாணவர் விடுதி ஆகியவற்றை தொடங்கினார். உள்ளூர் மாணவர்களுக்காக
திருப்பராய்த்துறையில் நடுநிலைப் பள்ளி தொடங்கினார். 1951 ல்தர்ம சக்கரம் மாத இதழை ஆரம்பித்தார். தொடர்ந்து பல கல்வி நிறுவனங்களை
ஆரம்பித்தார்.இறப்பு:1985 நவம்பர் 16 ஆம் தேதி மரணம் அடைந்தார்.அவரது சமாதி திருப்பராய்த்துறையில் உள்ளது.
பிறப்பு:
தமிழ்நாடு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செங்குட்டைப்பாளையம் என்ற கிராமத்தில் பி. கே. பெரியண்ணக் கவுண்டர், நஞ்சம்மையார் ஆகியோருக்கு மகனாக சிபவானந்தர் பிறந்தார். இயற்பெயர் சின்னுக்கவுண்டர். ஆத்துப் பொள்ளாச்சி கிராமப் பள்ளியிலும், பொள்ளாச்சி கிராமப்பள்ளியிலும் ஆரம்பக்கல்வி கற்றார். கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலப் பள்ளியில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி பெற்றார்.
"சென்னை சொற்பொழிவுகள்":
இக்காலகட்டத்தில் பொள்ளாச்சிக்கு வந்த பழனி சாது சுவாமிகள் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. பழனிக்குச் சென்று வர ஆரம்பித்தார். சட்டி சுவாமிகள் அறிமுகமும் வாய்த்தது. 1918-இல் சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வில் சென்னை மாகாணத்தில் 7-ஆம் இடம் பெற்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் எஃப்.ஏ. வகுப்பில் சேர்ந்தார்.மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்லும் நிலையில் சுவாமி விவேகானந்தரது "சென்னை சொற்பொழிவுகள்" என்ற நூலின் ஒரு கட்டுரையால் கவரப்பட்டு பயணத்தை நிறுத்தினார். சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை படித்தார். அப்போது விக்டோரியா விடுதியில் தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார் அவர்களுடன் தோழர் ஆனார். இருவரும் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்குச் சென்று ஸ்ரீமத் சுவாமி சிவானந்தர், ஸ்ரீமத் சுவாமி பிரேமானந்தர் ஆகியோரின் அறிமுகம் பெற்றனர்.
பிரம்மச்சரிய தீட்சை:
1923-ல் இளங்கலை படிப்பை முடித்ததும் அகிலானந்த சுவாமிகளுடன் புவனேஸ்வரம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சென்று சுவாமி சிவானந்தரிடம் பிரம்மச்சரிய தீட்சை பெற்றார். திரையம்பக சைதன்யர் என்ற பெயருடன் அங்கே இருந்தார். சுவாமி சிவானந்தரின் அனுமதி பெற்றுத் தென்னாட்டில் பயணம்செய்த சேரன் மகாதேவியில் தேச பக்தர் வ. வே. சு. ஐயரைச் சந்தித்தார்.1924 சூன் மாதம் சலவைத் தொழிலாளி ஒருவர் அளித்த நிலத்தில் சுவாமி சிவானந்தர் ஊட்டி ஆசிரமத்திற்கு அடிக்கல் நாட்டினார். திரையம்பக சைதன்யரின் குடும்பம் ஆசிரமம் அமைக்க உதவி செய்தனர். 1926 சூலை 25 இல் சுவாமி சிவானந்தர் சந்நியாச தீட்சை வழங்கி சுவாமி சித்பவானந்தர் என்று பெயரிட்டார்.
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்:
1930 முதல் 1940 வரை உதகை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்தார். அப்போது காந்தியடிகள், நாராயணகுரு ஆகியோர் அங்கே வருகை புரிந்தார்கள். சிவானந்தரின் சமாதியடைந்த பின்னர் ராமகிருஷ்ண மடத்தில் இருந்து விலகி கைலாய யாத்திரை ஒன்றை மேற்கொண்டார்.திருச்சி அருகே திருப்பராய்த்துறைக்குச் சென்ற சித்பவானந்தர் தாருகாவனேசுவரர் கோயிலில் 1940 ஆம் ஆண்டில் நடந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்றார். அதை நடத்திய ராமநாதன் செட்டியார், கானாடுகாத்தான் அருணாச்சலம் செட்டியார் ஆகியோருடன் சந்திப்பு ஏற்பட்டது. திருப்பராய்த்துறையில் தங்க முடிவெடுத்தார். நூற்றுக்கால் மண்டபத்தில் ஆரம்பப் பள்ளி ஒன்றை ஆரம்பித்தார். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலில் வாரம் ஒருமுறை தாயுமானவர் பாடலுக்கு விளக்கம் அளித்தார்.
தர்ம சக்கரம்:
1942-ல் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தை நிறுவினார். குருகுல முறையில் விவேகானந்த வித்யாவன நடுநிலைப் பள்ளி மற்றும் விவேகானந்த மாணவர் விடுதி ஆகியவற்றை தொடங்கினார். உள்ளூர் மாணவர்களுக்காக திருப்பராய்த்துறையில் நடுநிலைப் பள்ளி தொடங்கினார்.1951 ல்தர்ம சக்கரம் மாத இதழை ஆரம்பித்தார். தொடர்ந்து பல கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தார்.
இறப்பு:
1985 நவம்பர் 16 ஆம் தேதி மரணம் அடைந்தார்.அவரது சமாதி திருப்பராய்த்துறையில் உள்ளது. |
|||||
by Swathi on 23 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|