ஐதராபாத் : டெஸ்டில் அபாரமாக விளையாடிய இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 115 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. அஷ்வின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி பரிதாபமாக வீழ்ந்தது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 438 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணி 159 ரன்களுக்கு சுருண்டு, "பாலோ-ஆன்' பெற்றது. மூன்றாம் மற்றும் நான்காம் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்ட நிலையில், நியூசிலாந்து பேட்ஸ்மேன்களால் இந்திய வீரர் அஸ்வினின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை. டேனியல் பிளைன் (11), பிராங்க்ளின் (5), பிராஸ்வெல் (1), வான் விக் (13), பவுல்ட் (0), மார்டின் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் இரண்டாவது இன்னிங்சில் 164 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து அணி, படுதோல்வி அடைந்தது.
முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் இரண்டாவது இன்னிங்சிலும் அஷ்வின் 6 விக்கெட் கைப்பற்றினார். இந்தியா வீரர் அஷ்வினுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
ஐதராபாத் : டெஸ்டில் அபாரமாக விளையாடிய இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 115 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. அஷ்வின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி பரிதாபமாக வீழ்ந்தது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 438 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணி 159 ரன்களுக்கு சுருண்டு, "பாலோ-ஆன்' பெற்றது. மூன்றாம் மற்றும் நான்காம் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்ட நிலையில், நியூசிலாந்து பேட்ஸ்மேன்களால் இந்திய வீரர் அஸ்வினின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை. டேனியல் பிளைன் (11), பிராங்க்ளின் (5), பிராஸ்வெல் (1), வான் விக் (13), பவுல்ட் (0), மார்டின் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் இரண்டாவது இன்னிங்சில் 164 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து அணி, படுதோல்வி அடைந்தது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் இரண்டாவது இன்னிங்சிலும் அஷ்வின் 6 விக்கெட் கைப்பற்றினார். இந்தியா வீரர் அஷ்வினுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
|