தெற்காசிய கால்பந்து எட்டாவது முறையாக முதன்மை அணி பட்டம் வென்றது இந்திய அணி
தெற்காசிய கால்பந்தில் இந்திய அணியினர் தங்கள் அசத்தலான திறனை வெளிப்படுத்தியுள்ளனர். பதின்மூன்றாவது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் மாலத்தீவில்,3 அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில் நேபாளத்தை 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தி எட்டாவது முறையாக முதன்மை அணி பட்டம் (Champion) பெற்றுள்ளது.
இந்தியாவின் கேப்டன் சுனில் சேத்ரி இதில் ஒரு கோல் அடித்து அதிக கோல் அடித்த வீரர் பட்டியலில் மெஸ்ஸி என்ற அர்ஜென்டினாவின் கால்பந்து வீரரின் சாதனையை சமன் செய்துள்ளார்.இறுதி நிமிடத்தில் அப்துல் சமத் அடித்த கோல் வெற்றி கோப்பையை இந்தியாவிற்கு தந்தது.
|