பெங்களூரு, விராத் கோஹ்லி மற்றும் தோனியின் அதிரடி ஆட்டத்தால், பெங்களூரு டெஸ்டில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரை 2-0 என, கைப்பற்றி கோப்பை வென்றது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் வென்ற இந்தியா 1-0 என முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடந்தது. இதிலும் இந்திய அணி த்ரில்லர் வெற்றி பெற்றது. இந்திய அணி தொடரை வென்ற போதிலும் தரவரிசையில் மாற்றம் இல்லை. டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற இந்திய அணிக்கு, கூடுதலாக 2 புள்ளிகள் கிடைத்தது. இருப்பினும், தற்போதுள்ள ஐந்தாவது இடத்தில் (106 புள்ளி) முன்னேற்றம் இல்லை. முதல் நான்கு இடத்தில் தென் ஆப்ரிக்கா (120), இங்கிலாந்து (117), ஆஸ்திரேலியா (116), பாகிஸ்தான் (109) அணிகள் தொடர்ந்து நீடிக்கின்றன.
|