அமெரிக்காவை சேர்ந்த பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ். அமெரிக்காவில் நடந்து வரும் டச்சஸ் பேங் சாம்பியன் கோல்ப் போட்டியில் அவர் கலந்து கொண்டார். இந்தப் போட்டியில் அவர் 4-வது சுற்றை கடந்தார். இதனால் அவருக்கு ரூ.2.7 கோடி கிடைத்தது. இதன் மூலம் டைகர் உட்ஸ் கோல்ப் விளையாட்டு மூலம் சம்பாதித்த வருவாய் ரூ.500 கோடியை தாண்டியது. தனிப்பட்ட வாழ்வில் பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டாலும், பணம் சம்பாதிப்பதில் டைகர் உட்ஸ் கலக்கிக்கொண்டுள்ளார்.
|