பரப்பிரம்மம் என்றால் என்ன, பிரம்மம் என்றால் என்ன, ஆகிய கேள்விகள் நமக்குள்ளே பல தடவை தோன்றியிருக்கலாம். அவைகளுக்கு தெளிவான பதில்கள் நமக்கு கிடைத்தும் இருக்கலாம் அல்லது கிடைக்காமலும் போயிருக்கலாம். ஆனால் ஒரு உண்மையை மட்டும் மறுக்க முடியாது. பரப்பிரம்மத்தால் படைக்கப்பட்ட இந்த பிரம்மம், மறுபடியும் பரப்பிரம்மத்தால் செயல்படுத்தப்படுகிறது. பரப்பிரம்மம் இந்த பிரம்மத்தை படைத்து செயல்படுத்துவதோடு மட்டுமில்லாமல் இந்த பிரம்மத்திலுள்ள உயிரினங்களுக்கு, அதனுடைய தலையெழுத்துப்படி கர்ம வினையின் விளைவுகளையும், கொடுக்கத் தவறுவதில்லை. இதுதான் பரப்பிரம்மத்தின் உண்மையான வடிவம், தோற்றம் மற்றும் சாரம்.
|