|
||||||||
ஶ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக் கல்லூரியின் 19வது ஆண்டு 'சிவத்தமிழ் விழா'! |
||||||||
10-05-2025 அன்று கனடா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற 'சிவத்தமிழ் விழா' தனது 19 ஆவது ஆண்டில் வழமை போன்ற கம்பீரத்துடனும் நேர்த்தியுடனும் தொடர்ச்சியாகப் பல மணி நேரங்கள் நடைபெற்று பார்வையாளர்களைக் கவர்ந்தது என்றால் அது மிகையாகாது.
ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்தானமும் அதன் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் வரசித்தி இந்துக் கல்லூரியும் இணைந்து நடத்திய இந்த விழாவிற்கு நூற்றுக்கணக்கானவர் கலந்து சிறப்பித்தமை போற்றுதற்குரியதாகும். மாணவ மாணவிகள்- அவர்தம் பெற்றோர்கள்- ஆலயத்தின் பக்தர்கள் மற்றும் தொண்டர்கள்- சிறப்பு விருந்தினர்கள் எனப் பலதரப்பினரும் பொறுமையாக அமர்ந்திருந்து மாணவச் செல்வங்களின் பன்முகக் கலை ஆற்றலையும் அவர்கள் கற்ற மொழி மற்றும் சமயம் சார்ந்த விடயங்களை எவ்வாறு கிரகித்துக் கொண்டார்கள் என்பதை நேற்றைய மேடையில் சமர்ப்பித்த விதமும் அங்குக் கூடியிருந்த அனைவருக்கும் வியப்பையும் விருப்பத்தையும் ஏற்படுத்தின என்பது உண்மையான பதிவாகும்.
இந்த விழாவை வெற்றிகரமாகவும் பக்தியால் உருகும் பக்குவத்தோடும் நடத்தி முத்திரை பதித்த பிரதம குரு சிவ ஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார் குருக்கள் அவர்கள் மற்றும் அவரது பாரியார் இந்துக்கல்லூரி நிர்வாகி ஜெயா ஐயா அவர்கள் மற்றும் வரசித்தி இந்துக் கல்லூரியின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்
படங்கள்- செய்தி 'உதயன்'சத்தியன்
|
||||||||
| by hemavathi on 14 May 2025 0 Comments | ||||||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|