LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

வெளிநாட்டுவாழ் தமிழர்களுக்கு புதிய டிப்ளமோ கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளது எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம் !

சென்னயில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம், வெளிநாடுகளில் தமிழாசிரியர்களாக பணியாற்றி வருபவர்கள் தங்கள் துறையில் டிப்ளோமாப் பட்டம் பெறுவதற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களை தயாரித்து அதற்கென ஒரு புதிய துறையையும் உருவாக்கியுள்ளது. இந்த புதிய டிப்ளமோ திட்டத்தை உலக நாடுகளில் அறிமுகம் செய்வதற்கு உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் தலைமைப் பீடம் முன்வந்துள்ளது. 

 

புதிய டிப்ளோமா திட்டம் தொடர்பாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கல்விப் பொறுப்பாளர் திரு வி. எஸ். துரைராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

வெளிநாடுகளில் வாழும் தமிழ்ச் சிறார்கள் மற்றும் தமிழைக் கற்றுக்கொள்ள விரும்பும் பிற தமிழர்கள், தமிழை பிழையின்றி பேசவும், எழுதவும், படிக்கவும், தமிழ் மொழியின் பயன்பாடுகளை புரிந்துகொள்ளவும் உதவும் வகையில் தகுதிவாய்ந்த தமிழாசிரியர்களை உருவாக்குவதே இந்த டிப்ளோமா திட்டத்தின் நோக்கம். இவ்வாறு தகுதி வாய்ந்த தமிழாசிரியர்கள் உருவாகும் பட்சத்தில் எதிர்காலத்தில் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தமிழை தங்கள் வீட்டு மொழியாக பயன்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படும். மேலும் இந்த ஆசிரியர்களின் உதவியினால் வெளிநாடுகளில் வாழும் குழந்தைகள் பிழையின்றி தமிழில் பேசவும் எழுதவும் கூடிய ஒரு சூழலும் பயிற்சியும் வழங்குவதற்குரிய வாய்ப்பு ஏற்படும். அத்துடன் வெளிநாடுகளில் வெவ்வேறு துறைகளில் பட்டம் பெற்றவர்கள் தங்கள் தாய்மொழியான தமிழிலும் சிறந்த பயிற்சியையும் பட்டத்தையும் பெறுவதற்குரிய வாய்ப்பு ஏற்படும். அதோடு மட்டுமன்றி தமது தாய்நாட்டில் உயர் கல்வி கற்று பின்னர் வெளிநாடுகளுக்குச் சென்றும் உயர் கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் தமிழர்கள் தங்கள் மொழிசார்ந்த துறையில் உயர் கல்வி பெறவும் வாய்ப்பு கிடைக்கிறது

 

பயிற்சி காலம் : ஒரு ஆண்டு (இரண்டு பருவங்கள்)

 

கல்வித்தகுதி : 

 

இந்தியர்கள் : பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

 

இலங்கை : கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் ஆறு பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

தென்னாப்பிரிக்கா : கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

 

வயது வரம்பு : இல்லை 

 

பாடங்கள் :

 

முதல் பருவம் : 

 

 தமிழ்மொழி, வரலாறு தமிழ் இலக்கிய வரலாறு-1, அடிப்படைத் தமிழ், இலக்கணம் தமிழ், கற்பித்தல்-1- அடிப்படை நிலை

 

இரண்டாம் பருவம் :

 

தமிழக வரலாறு, தமிழர் பண்பாடு, தமிழ் இலக்கிய வரலாறு-2, கணினித் தமிழும் இணைய வழிக்கல்வியும், தமிழ் கற்பித்தல்-2 உயர்நிலை.

 

இந்த தமிழாசிரியர் டிப்ளோமாப் பட்டத்தை பெறவிரும்புபவர்கள் அந்தந்த நாடுகளில் உள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கிளைகளை அணுகவும். அல்லது இணையதளத்தில் பதிவு செய்யவும்.

மேலும் விவரங்களுக்கு : 

 

இணையதளம் : www.srmuniv.ac.in/tamilperayam

 

மின்னஞ்சல் : raja@cfsginc.com, imtc1974@yahoo.com

 

மேற்படி புதிய திட்டத்தின் முதலாவது வகுப்பு எதிர்வரும் 2014ம் ஆண்டு தமிழர் திருநாளன்று ஆரம்பமாகும். மேலும் வாரத்தில் சனி ஞாயிறு ஆகிய தினங்களில் வகுப்புக்கள் அந்த நாடுகளில் உள்ள பயிற்சி மையங்களில் நடைபெறவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படும். மாணவர்கள் மேற்படி டிப்ளோமாப் பயிற்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். 

by Swathi   on 20 Apr 2013  0 Comments
Tags: SRM University   Diploma Program   Abroad Tamils   எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம்   பட்டைய படிப்பு   டிப்ளமோ கல்வி   வெளிநாட்டுவாழ் தமிழர்கள்  
 தொடர்புடையவை-Related Articles
வெளிநாட்டுவாழ் தமிழர்களுக்கு புதிய டிப்ளமோ கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளது எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம் ! வெளிநாட்டுவாழ் தமிழர்களுக்கு புதிய டிப்ளமோ கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளது எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம் !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.