LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள்

குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் 68-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு நடத்தப்படுகிறது.

இதில் கவிதை, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. கவிதை போட்டியில் பங்கேற்பவர்களுக்கு ‘இளங்கவி விருது 2017’, கட்டுரைப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு சிந்தனைச் சிற்பி விருது 2017, ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு வரைகலைச் சுடரொளி விருது 2017 மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

மொத்தப் பரிசுகளின் மதிப்பு : ரூ 60,000

முதல் பரிசு ரூ. 2000, விருது சான்றிதழ் மற்றும் சீல்டு

இரண்டாம் பரிசு ரூ. 1,500 விருது சான்றிதழ் மற்றும் சீல்டு

மூன்றாம் பரிசு : ரூ.1,000 விருது சான்றிதழ் மற்றும் சீல்டு

நான்காம் பரிசு : ரூ. 500 விருது சான்றிதழ் மற்றும் சீல்டு

ஐந்தாம் பரிசாக மூன்று போட்டிக்குமாக ரூ. 200 மதிப்புள்ள 225 சீல்டுகள் வழங்கப்படும்.

ஒருவரே மூன்று போட்டிகளிலும் பங்கேற்கலாம். ஒவ்வொரு போட்டிக்கும் நுழைவுக் கட்டணம் ரூ.50 ( ஐம்பது ரூபாய் ).

ஒவ்வொரு படைப்பின் முன்பக்கத்திலும் மாணவர் பெயர், வகுப்பு, கல்லூரி முகவர், ஒருங்கிணைப்பாளர் பெயர், ஒருங்கிணைப்பாளர் அலைபேசி எண் கண்டிப்பாக எழுதி இணைக்கப்பட வேண்டும்.

100-க்கும் அதிகமான படைப்புகளை அனுப்பும் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுக்கு சிறந்த கல்வித் தொண்டிற்கான ஆசிரிய அப்துல் கலாம் விருது 2017 வழங்கப்படும். 200-க்கு மேல் அனுப்பினால் கலைமகள் கவிக்கோவில் விருது வழங்கப்படும்.

நடுவர் தீர்ப்பே இறுதியானது.

கவிதைப் போட்டித் தலைப்பு :

அப்துல் கலாம், உரிமை வேண்டும், நட்பு

கட்டுரைப் போட்டி தலைப்பு :

1 தமிழ் மொழியின் பிறப்பும் சிறப்பும்

2 குடியரசுக்குப் பின் இந்தியா (அ) மாணாக்கர் அரசியலுக்கு வந்தால் ?

3 தற்காலச் சூழலில் பெண்ணுக்குத் தேவை சுதந்திரமா ? பாதுகாப்பா ?

ஓவியப் போட்டித் தலைப்பு :

1 ஒலிம்பிக் போட்டிகளில் பரிசு பெற்ற வீரர்களின் உருவங்கள் (அல்லது)

தேசிய விருது பெற்றவர்களின் உருவங்கள்

2 தமிழக அதிசயங்கள் (அல்லது) சமூக விழிப்புணர்வு

3 நான் ரசித்த இயற்கை (அல்லது ) கோலம் ( புள்ளி, ரங்கோலி)

தொடர்புக்கு :

முனைவர் ஆ. கணேசன்

ஒருங்கிணைப்பாளர்

குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம்

94 காந்திமதி இல்லம்

வடக்குத் தெரு

பரமத்தி வேலூர் – 638 182

நாமக்கல் மாவட்டம்

96981 38000 / 99522 09476 / 96981 39000

 

by Swathi   on 05 Jan 2017  1 Comments
Tags: குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம்   மாநில அளவிலான போட்டிகள்   68-வது குடியரசு தினவிழா   கட்டுரைப் போட்டி   கவிதைப் போட்டி   ஓவியப் போட்டி   Kurinji Kabilar Tamil Sangam  
 தொடர்புடையவை-Related Articles
குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள்
கருத்துகள்
07-Jan-2018 06:56:21 சாமுவேல் said : Report Abuse
நீங்கள் இதை வர்ட் டாக்குமெண்ட் வடிவமா தமிழில் அனுப்புங்கள் தயவு செய்து
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.