|
|||||
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜனுக்கு திருவுருவச் சிலை |
|||||
சென்னை, மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராசன் ஆகியோரின் நினைவிடம் ரூ.34 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதற்கட்ட இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு, சிறை சென்ற நடராசன் 15.01.1939 அன்றும், தாளமுத்து 11.03.1939 அன்றும் வீர மரணம் அடைந்தனர்.
இருவரின் தியாகத்தைப் போற்றும் வண்ணம் சென்னை, மூலக்கொத்தளத்தில் தந்தை பெரியாரால் திறந்துவைக்கப்பட்ட நினைவிடம் தற்போது சிறப்பான முறையில் புதுப்பிக்கப்பட்டு, தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளன்று முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
தாளமுத்து – நடராசன் மற்றும் மொழிப்போர் தியாகியும் சமூகப் போராளியுமான தர்மாம்பாள் ஆகியோரது திருவுருவப் படங்களுக்கு மலர் தூவியும், நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார் முதல்வர். தாளமுத்து, நடராசன் ஆகிய இருவருக்கும் சென்னை, எழும்பூரில் உள்ள தாளமுத்து-நடராசன் மாளிகை வளாகத்தில் திருவுருவச் சிலை நிறுவப்படும் என்றும் அந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
|
|||||
by hemavathi on 26 Jan 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|