LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- வயிறு(Stomach)

வயிற்றுப் பிரச்சனைகளால் நீங்கள் அவதி படுகிறீர்களா!! உங்களுக்கான வரபிரசாதம் தான் அங்காயப் பொடி !!

சாப்பாடு விஷயத்தில் சிறியவர்கள் மட்டுமல்ல... பெரியவர்களும் கூட ஒரு சில சமயங்களில் வரம்பு மீறுவது உண்டு. ஆசைப்பட்டதெல்லாம் சாப்பிட்டு விட வேண்டியது. பிறகு அவதிப்பட வேண்டியது.

வயதுக்கேற்ற தன்மையில் உணவு, உணவின் அளவு, உணவில் சேர்த்துக்கொள்ளும் பொருள் இவற்றில் கவனம் செலுத்தினால் வயிற்று உபாதைகளைக் கட்டுப்படுத்த முடியும் ஆனால் இதில் கவனம் பிசகுகிறபோது தான் வயிற்றுப் பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன. இதற்காக நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க இதுக்காகவே இருக்கு அங்காயப் பொடி, அதென்ன அங்காயப்பொடி என கேட்கிறீர்களா?

சுக்கு ஒரு துண்டு, மிளகு இருபது, சீரகம் கால் கரண்டி, வெந்தயம் கால் கரண்டி, வேப்பம்பூ அரைக் கரண்டி எடுத்துக்கணும். முதலில் இவைகளை மிதமாக வறுத்துப்பொடி செய்யணும். அத்துடன் நல்லெண்ணெயில் பொறித்த கருவேப்பிலைப் பொடி கால் பிடி எடுத்து மேலே சொன்னவற்றுடன் கலந்து பகல் உணவில் சாதத்துடன் உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிடலாம் அல்லது மோருடன் கலந்து குடிக்கலாம்.

இப்படியே மூன்று அல்லது நான்கு நாட்கள் தொடர்ந்து செய்யணும். வாந்தி, குமட்டல், உணவு செரிக்காமை போன்ற வயிற்று உபாதைகள் எல்லாமே கட்டுப்படும். பொதுவாக இதனை எல்லோரும் சாப்பிடலாம். பிரசவித்த தாய்மார்கள் பகல் உணவில் ஐந்து துளி நெய்யுடன் அங்காயப் பொடியை சோற்றில் கலந்து சாப்பிட்டால் வயிற்றில் ஏற்படும் கிருமித் தொற்றுகள் கட்டுபடும். அடிக்கடி பயணம் செய்யறவங்க, வெளியிடங்களில் சாப்பிடவேண்டிய கட்டாயம் இருக்கறவங்க அங்காயப் பொடியை சாப்பாட்டில் சேர்த்துகிட்டா நல்லது. வாயுத்தொல்லை, வயிற்று உப்புசம் இவைகளைக் கட்டுப்படுத்தும்.

குறிப்பு : இந்த பொடியில் வேப்பம்பூ இருக்கறதாலே 25 முதல் 40 வயது ஆண்கள் பயன்படுத்தக் கூடாது. வாரம் ஒரு நாள் இரண்டு நாள் எடுத்துக்கலாம்.

விந்தணு குறைபாடு உள்ள ஆண்கள் இந்த பொடியை சேர்த்துக் கொள்ளக் கூடாது.

by Swathi   on 02 Nov 2015  3 Comments
Tags: Angaya Podi   How to make Angaya Podi   Stomach Problem   வயிற்றுப் பிரச்சனை   வயிற்று பிரச்சனை   ஜீரண பிரச்சனை   Stomach Upset  

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
வயிற்றுப் பிரச்சனைகளால் நீங்கள் அவதி படுகிறீர்களா!! உங்களுக்கான வரபிரசாதம் தான் அங்காயப் பொடி !! வயிற்றுப் பிரச்சனைகளால் நீங்கள் அவதி படுகிறீர்களா!! உங்களுக்கான வரபிரசாதம் தான் அங்காயப் பொடி !!
கருத்துகள்
22-Feb-2016 10:41:30 bavan said : Report Abuse
continusly saappidum pothu vaanthi vara mari feel.. mosstly night time than kooda ippidi pittu ;bread saapidum pothu & fast a saapidum pothum ippidi aakum 1,2 foods ikku maddum than ippidi .. 5 month intha problen 3time medicine edutha bt nalla result illai.. enna seiyalam???? plzz answer mee...
 
09-Feb-2016 18:54:23 Sivasankar said : Report Abuse
சாப்பிட்டவுடன் மலம் போகின்றேன்.தீர்வு என்ன.?.நன்றி
 
06-Feb-2016 07:58:30 ர.manikandan said : Report Abuse
Nan gas ப்ரொப்லெம் காரணமாக மிகவும் அவதி படுகிறான் எனக்கு ஹெல்ப் பனுக சார் ப்ளீஸ்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.