LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

சும்மா இரு - தென்கச்சி கோ சுவாமிநாதன் கதை

ஒரு ஊர்ல ஒரு கோவில் இருந்தது , அரசாங்கம் அந்த கோயிலை பராமரித்து வந்தது . அதிகாரிகள் அவ்வப்போது வந்து கணக்கு வழக்குகளை சரி பார்ப்பது வழக்கம் .

அந்த வகையில் , ஒரு சமயம் அரசாங்க அதிகாரி அங்கே வந்தார் . கோயில் நிர்வாக அதிகாரி கணக்கு புத்தகங்களையும் மற்ற பதிவேடுகளையும் எடுத்து அவர் முன்னால் வைத்தார்

வந்த அதிகாரி , கோயில் செலவு கண்ணுக்கு பார்த்து கொண்டு வந்தார் ." சும்மா இருக்கும் சாமியாருக்கு ஒரு பட்டை சோறு ".. என்று தினசரி செலவு பட்டியலில் எழுதபட்டிருந்தது.

அதை பார்த்த அவர் " சும்மா இருக்கிறவருக்கு எதுக்காக சோறு போடணும் ? அதை உடனே நிறுத்துங்கள் ! என்று ஆணையிட்டார் .

உடனே ஆலய ஊழியர்கள் , அதிகாரிகளை நெருங்கி மெல்ல சொன்னார்கள் : "ஐயா சும்மா இருப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல ... அதனால் தான் அவருக்கு சோறு வழங்குகிறோம் !"

இந்த விளக்கம் அந்த அதிகாரிக்கு திருப்தி அளிக்கவில்லை . எனவே ,அதுபற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார் , வந்த பிறகு ஒரு சாய்வு நாற்காலியில் உக்காந்து யோசிக்க ஆரம்பித்தார்

" சும்மா இருப்பது என்ன அவ்வளவு கடினமான காரியமா ? கொஞ்ச நேரம் நாமும்தான் சும்மா இருந்து பார்ப்போமே !" முன்று பார்த்தார் . மனம் அலைய ஆரம்பித்தது ....அடங்க மறுத்தது .

சரி , கொஞ்ச நேரம் கண்களை மூடி தியானம் செய்து பார்க்கலாம் , முன்றார் ' வயிறு பசிக்கிறது போலிருக்கிறதே ! என்று நினைத்தார்

ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினார் கவனத்தை அதில் செலுத்தினார் . காகம் ஒன்று எங்கோ கத்துகிற சதம் அவர் காதில் விழுந்தது . கண்களையும் காதுகளையும் கட்டுபடுத்த முன்றார்

மனம் எதிர்காலத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்தது . மகளுக்கு மாப்ளை தேட வேண்டும் ,மகனுக்கு வேலை தேட வேண்டும் , மறுபடி எதையும் நினைக்காமல் தியானம் செய்ய முயன்றார்

திடீர் என ஒரு மணம் வந்து மூக்கை தொடுகிறது . கண் விழித்து பார்கிறார்மனைவி கொண்டு வந்து வைத்து விட்டு போன சூடான காபி எதிரே மேஜை மீது இருக்கிறது .அதை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்

" மனம் - தியானம் இரண்டும் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளது " என்று நினைக்கிறார் . அது அப்படி அல்ல : மனம் முடிந்து போகிற இடத்தில தான் தியானம் ஆரம்பமாகிறது

எனவே , தியானம் இருக்கிற இடத்தில மனம் இல்லை . மனம் செயல் படுகின்ற வரையில் தியானமும் அரம்பமவதில்லை "

அதிகாரி திணறி போனார் . அவருக்கு ஊழியர்கள் கட்டுபடுகிறார்கள் , உள்ளே இருக்கிற அவர் மனம் கட்டுப்பட மறுக்கிறது

அதிகாரி அலைபாய்கிற மனதை அடக்க முயன்று , அது முடியாமல் சோர்ந்து போனார். " சும்மா இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் ! என்பது அவருக்குபுரிந்தது

உடனே மறுபடியும் புறப்பட்டு அந்த கோவிலுக்கு போனார், பதிவேட்டை கொண்டு வர சொன்னார். அதில் இப்படி எழுதினார் : " சும்மா இருக்கும் சாமியாருக்கு இனி இரண்டு பட்டை சோறு !"

by Swathi   on 07 Apr 2015  4 Comments
Tags: Thenkachi Ko Swaminathan   Summa Iru   Summa Iru Story   சும்மா இரு   தென்கச்சி கோ சுவாமிநாதன்   சுவாமிநாதன் கதைகள்     
 தொடர்புடையவை-Related Articles
சும்மா இரு - தென்கச்சி கோ சுவாமிநாதன் கதை சும்மா இரு - தென்கச்சி கோ சுவாமிநாதன் கதை
கருத்துகள்
15-Oct-2015 12:19:04 sathiya said : Report Abuse
மனம் ஒரு குரங்கு என்பது மிக மிக சரியே. சும்மா இருப்பதை போலே கடினமான செயல் வேரோன்றும் இல்லை. தியானத்தை வழக்கமா செய்கிரவர்களுக்குத்தான் சும்மா இருக்க kaikoodum
 
04-Aug-2015 20:26:13 ரமேஷ் Raja said : Report Abuse
தியானம் என்றல் என்ன ? புரிந்தது எனக்கு.
 
26-May-2015 22:01:14 pandiyan said : Report Abuse
மனம் முடிகிற இடத்தில் தியானம் ஆரம்பமாகிறது இது போதுமே
 
26-May-2015 22:01:10 pandiyan said : Report Abuse
மனம் முடிகிற இடத்தில் தியானம் ஆரம்பமாகிறது இது போதுமே
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.