|
||||||||
இந்தியாவின் விண்வெளி முயற்சிகளுக்கு உதவுவேன் - சுனிதா வில்லியம்ஸ் உறுதி |
||||||||
![]()
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்.
கடந்த ஆண்டு ஜூலையில் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன்
வெறும் 8 நாள் பயணமாகச் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றார்.
ஆனால் எதிர்பாராத வகையில் 9 மாதங்களுக்கு மேல் அவர் அங்குத் தங்க நேரிட்டது.
இதையடுத்து சுனிதா, வில்மோர் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் கடந்த மார்ச் 19-ம் தேதி
பத்திரமாகப் பூமிக்கு அழைத்து வரப்பட்டனர். மருத்துவச் சிகிச்சைக்குப் பின்
ஓய்வில் இருந்த சுனிதா, சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் திங்கட்கிழமை
செய்தியாளர்களைச் சந்தித்தார். பூமிக்குத் திரும்பிய பிறகு அவரது முதல் செய்தியாளர் சந்திப்பு இதுவாகும்.
செய்தியாளர்களிடம் பேசிய சுனிதா, "விண்வெளியிலிருந்து பார்க்கும்போது
இந்தியா அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் நாங்கள் இமயமலைக்கு மேல் செல்லும்போது,
வில்மோர் புட்ச் அருமையான புகைப்படங்களை எடுத்துள்ளார். கிழக்கிலிருந்து மும்பை, குஜராத்தின் மேலே செல்லும்போது
அழகிய கடற்கரையைக் கண்டோம். இரவில் பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை இந்தியா
ஒளிரும். இரவிலும் பகலிலும் நம்ப முடியாத வகையில் பிரமிக்க வைத்தது இமயமலை தான்.
இந்தியா எனது தந்தையின் தாய்நாடு. இந்தியா
சென்று எனது விண்வெளி அனுபவங்களை இந்தியர்களுடன்
பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறேன். நிச்சயமாக இது ஒருநாள் நடக்கும்.
இந்தியா அற்புதமான ஜனநாயகம் கொண்ட பெரிய நாடு.
விண்வெளியில் கால் பதிக்க இந்தியா நீண்ட நாள்களாக முயல்கிறது.
இந்தியாவின் முயற்சிகளுக்கு நான் உதவுவேன்..." என்றார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். கடந்த ஆண்டு ஜூலையில் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் வெறும் 8 நாள் பயணமாகச் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றார். ஆனால் எதிர்பாராத வகையில் 9 மாதங்களுக்கு மேல் அவர் அங்குத் தங்க நேரிட்டது. இதையடுத்து சுனிதா, வில்மோர் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் கடந்த மார்ச் 19-ம் தேதி பத்திரமாகப் பூமிக்கு அழைத்து வரப்பட்டனர். மருத்துவச் சிகிச்சைக்குப் பின் ஓய்வில் இருந்த சுனிதா, சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் திங்கட்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். பூமிக்குத் திரும்பிய பிறகு அவரது முதல் செய்தியாளர் சந்திப்பு இதுவாகும்.
|
||||||||
by hemavathi on 03 Apr 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|