LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நியமனம்

நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றமாக உச்ச நீதிமன்றம் திகழ்கிறது. இங்கு தலைமை நீதிபதியாக இருப்பவர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர். ஏனெனில் நாட்டின் முதல் குடிமகனாக கருதப்படும் குடியரசுத் தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடியவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாவார். கடந்த 2018 அக்டோபர் 3ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பொறுப்பு ஏற்றார். தற்போது அவரது பதவிக் காலம் நவம்பர் 17ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. தனது பதவிக்காலம் நிறைவு பெறுவதற்குள், பல ஆண்டுகளாக நீடித்து வரும் அயோத்தியின் சர்ச்சைக்குரிய வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு நிர்வாகத்தின் படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவர் ஓய்வு பெறுகிறார் என்றால் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியை அடுத்தத் தலைமை நீதிபதியாகத் தேர்வு செய்ய வேண்டும். இதன்படி ரஞ்சன் கோகாயின் பரிந்துரை மற்றும் சட்ட அமைச்சகம் அளித்த அறிக்கை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தலைமை நீதிபதி நியமனம் நடைபெற்றது.

 

இதன் தொடர்பாகச் சட்ட அமைச்சகம், பிரதமருடனான ஆலோசனைக்குப் பின்னர் எஸ்.ஏ. பாப்டேவை நியமனம் செய்யக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து நவம்பர் 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்தியாவின் 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நவம்பர் 18ம் தேதி பதவி பதவியேற்கிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி வரை சுமார் 18 மாதங்கள் இவரது பதவிக் காலம் நீடிக்கும். [சரத் அரவிந்த் பாப்டே (sharad arvind bobde) ]

 

இரண்டாவது மிக மூத்த நீதிபதியான 'எஸ்.ஏ. பாப்டே' மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஏப்ரல் 24, 1956 ஆம் ஆண்டு பிறந்தார். 'நாக்பூர்' பல்கலைக்கழகத்தில் 1978 ஆம் ஆண்டு சட்டக்கல்வி படித்து முடித்தார். முதலில் 'பாம்பே' நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த அவர் 1998ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் ஆனார். 2000ல் பாம்பே உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பொறுப்புக்கு வந்தார். 2012ல் மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். பின்னர் 2013 ஏப்ரலில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். அவரது குடும்பமே பாரம்பரியமிக்க வக்கீல் குடும்பமாகும். அவரது தாத்தாவும் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவரது தந்தை 'அரவிந்த் பாப்டே' 1980 முதல் 1985 வரை மகாராஷ்டிரா மாநில அட்வகேட் ஜெனரலாக பணியாற்றியுள்ளார். இவரது மூத்த சகோதரரான 'வினோத் அரவிந்த் பாப்டே' உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஆவார்.

 

அயோத்தி-பாபர் மசூதி விவகாரம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்பான வழக்கு, ஆதார் வழக்கு, பட்டாசு தொழிலாளர்கள் விவகாரம், என்ஆர்சி அசாம் போராட்ட வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

by Madurai karthika   on 30 Oct 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.